செய்திகள் :

India - America:``என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம்"- பிரதமர் மோடிக்கு 'செக்' வைக்கும் ட்ரம்ப்!

post image

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா. அதன்பிறகும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததாகக் கூறி இந்திய பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை 2025-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியா நிறுத்திவிடும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதித்தது. ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரை வரி விதிக்க அனுமதிக்கும் தொடர்புடைய சட்டத்தையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது.

மோடி - புதின்
மோடி - புதின்

இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக நேற்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``மோடி மிக நல்ல மனிதர். அவருக்கு நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம் என்பதையும் அவர் அறிவார்.

எனவே, இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதைத் தொடர்ந்தால், குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா மீது விதிக்கப்படும் வரிகளை இன்னும் வேகமாகவும், விரைவாகவும் என்னால் அதிகரிக்க முடியும். என்னுடைய இந்த நடவடிக்கை அவர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும்... நான் இன்னொன்றையும் உங்களுக்கு சொல்கிறேன்... ரஷ்யப் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது" என இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

அமெரிக்கா இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி இலக்கு நாடாகும். ஏப்ரல் மற்றும் நவம்பர் 2025-க்கு இடையில், இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 50.8 பில்லியன் டாலராக இருந்தது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய வர்த்தகப் புள்ளிவிவரங்களின்படி, வரிகள் விதிக்கப்பட்ட உடனேயே, அதாவது செப்டம்பரில் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்ட போதிலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி சமநிலை வகிக்கிறது.

``ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு: சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்" - ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. ஒருபக்கம் கூட்டணி யாருடன் என்ற விவாதம் சூடுபறக்க... இன்னொருபக்கம் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு என்ற குரலும் வ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: `திமுக மற்றும் இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரானவை' - பியூஷ் கோயல்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் பேட்டி அளித்திருக்கிறார். திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ... மேலும் பார்க்க

TVK : சிக்கலில் ஜனநாயகன்; டெல்லிக்கு அழைக்கும் சிபிஐ - காங்கிரஸ் குரலுக்காக காத்திருக்கும் விஜய்?

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பனையூர் தவெக அலுவலகமும் பரபரப்பாகியிருக்கிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என பல முக்கிய மாற்றுக்கட்சிகளின் பிரதிநிதிகளை தவெகவில் இணை... மேலும் பார்க்க

மிரட்டி சாதிக்கும் ட்ரம்ப்; வெனிசுலா வழியில் கொலம்பியா, கியூபா? இந்தியாவுக்கும் சிக்கல்? Explained

இதுவரை 'வரி'யைக் காட்டி உலக நாடுகளைப் பயமுறுத்தி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது இன்னொரு அஸ்திரத்தைக் கையிலெடுத்துள்ளார். அது 'ராணுவ நடவடிக்கை வழி' ஆகும். மதுரோ கைது சம்பவம் கடந்த 3-ம் தேதி... வ... மேலும் பார்க்க

"மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து; திமுக-வைத் தவிர..." - செல்வப்பெருந்தகை

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை... மேலும் பார்க்க