49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முத...
"விஜய்யை வைத்துதான் 'உன்னை நினைத்து' படத்தின் பாடலை எடுத்தேன்" - விக்ரமன் பகிர்ந்த வீடியோ
'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்ரமன் விஜய்யை வைத்துதான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடலை எடுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், " சமீபத்தில் மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்டிருந்தேன்.
அப்போது விஜய் இதுதான் என்னுடைய கடைசி படம் என்று சொன்னார். அது உண்மையிலுமே வேதனையாக இருந்தது.
அவரை வைத்துதான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தை சூட் செய்தேன். அதில் இரண்டு பாடல்களையும் எடுத்திருந்தேன். மூணாறில் 'என்னை தாலாட்டும்' பாடலை சூட் செய்திருந்தேன்.
Exclusive
— Team Tamannaah ♥︎ (@TeamTamannaah) January 6, 2026
Director Vikraman Shares The Exclusive Rare Unseen Video Of #ThalapathyVijay From #UnnaiNinaithu Song Shoot - Ennai Thalattum Sangeetham!
Old Golden Days ♥️
@actorvijay#Lailapic.twitter.com/FSFTHYahO6
அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய video cassette ஒன்று கிடைத்தது. அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன்" என்று வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


















