BB Tamil 9: "தவறான குற்றச்சாட்டை வச்சு, என் முதுகில குத்திருக்காங்க.!"- சாண்ட்ரா...
ஜன நாயகன்: "இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா; ஒரு சகோதரனாக உங்களோடு..." - ரவி மோகன் உருக்கம்
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது.
நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி உஷா அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாவது எல்லாம் அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் செயல் என்று சிலர் விமர்சனம் செய்துவரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
ரவி மோகன் பதிவு
அந்த வகையில் நடிகர் ரவி மோகன் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "இதயம் நொறுங்கியிருக்கிறது விஜய் அண்ணா. ஒரு சகோதரனாக, உங்களோடு நிற்கும் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நான் நிற்கிறேன்.

உங்கள் படத்திற்கு தேதி தேவையில்லை. படம் வெளியாகும் தேதியை எப்போது அறிவிக்கிறார்களோ... அன்றுதான் பொங்கல் தொடங்குகிறது" என்று விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார்.


















