செய்திகள் :

ஜனநாயகன்: `இது ஒன்னும் புதுசு இல்லை.!' - விஜய் படங்களும் சந்தித்த சிக்கல்களும்!

post image

ஆமா, `ஜனநாயகன்தான் நான் நடிக்கிற கடைசி படம். இதுக்கப்பறம் இத்தனை வருஷமா எனக்காகவே இருந்த என்னோட ரசிகர்களுக்காக இனி நான் இருக்கப்போறேன்னு' சொல்லிட்டாரு விஜய். அவர் நடிக்கிற கடைசிபடம்னு அறிவிச்சதாலயே அவருடைய ரசிகர்கள் எல்லாருமே ரொம்ப எமோசனலா இந்த படத்தைப் பத்தி பேசிக்கிட்டிருந்த சூழல்லதான், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் இன்னும் தரப்படலங்கிற தகவல் வெளியானது. இதையொட்டி படக்குழுவும் சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தாங்க.

தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் குறித்துப் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும்” கூறினார். இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.

விஜய் படத்துக்கு வந்த இந்த சிக்கல் ரசிகர்களுக்கு பல விஷயங்களை நியாபகப்படுத்திருக்கும். ஆமா விஜய் படத்துக்கு இந்த மாதிரி சிக்கல் வர்றது இது முதல் தடவையில்ல. இதுக்கு முன்னாடி விஜய்யோட எந்தெந்த படங்களுக்கு என்னென்ன சிக்கல் வந்துருக்குன்னு பாப்போம்.

சில படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருந்தாலும், 1992 -ல வெளியான `நாளைய தீர்ப்பு' படம்தான் விஜய் ஹீரோவா அறிமுகமான முதல் திரைப்படம்.

தொடர்ந்து தன்னோட அப்பா இயக்கத்துல நடிச்சிக்கிட்டு வந்த விஜய்க்கு மிகப்பெரிய பிரேக்கிங்கா அமைஞ்சது 1996 ல வெளிவந்த பூவே உனக்காக, 1997-ல வெளிவந்த `காதலுக்கு மரியாதை'. இந்த படங்களுக்குப் பிறகு விஜய் கவனிக்கத்தக்க நடிகராக மாறத் தொடங்கி, முன்னணி நடிகருக்கான ரேஸுக்குள்ளயும் வந்தாரு.

விஜய் படங்களுக்கு சர்ச்சைகள் வர்றது 2003-ல வெளியான `புதிய கீதை' - படத்துலதான் தொடங்குச்சு. இந்தப் படத்திற்கு முதல்ல 'கீதை'ன்னுதான் தலைப்பு வச்சுருந்தாங்க. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த விஜய் நடிக்கும் படத்துக்கு எப்படி கீதைன்னு தலைப்பு வைக்கலாம்னு சொல்லி இந்து அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. இதைத் தொடர்ந்து படத்துக்கு 'புதிய கீதை'ன்னு பேரை மாத்தி ரிலீஸ் பண்ணினாங்க.

காவலன்

விஜய நடிச்ச 50ஆவது படமான 'சுறா' தோல்வியைச் சந்திச்சது. இந்த படத்துக்கு அப்புறம் ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கின சித்திக் இயக்கத்துதுல விஜய் நடிச்ச படம்தான் காவலன். இந்த படம் ரிலீசாகிறதுலயும் சிக்கல் வந்தது. சுறா படத்தால ஏற்பட்ட தோல்விக்கு நஷ்டஈடு கேட்டு, விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். மேலும், சில திரையரங்கு உரிமையாளர்கள் படத்தை வெளியிடமாட்டோம்னு போர்க்கொடி தூக்கினாங்க.

இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் படத்தை வெளியிடக் கோரி போராட்டம் நடத்தினாங்க. விஜய் தரப்புல திரைப்பட உரிமையாளர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி நஷ்டஈடு கொடுத்ததுக்குப் அப்புறம்தான் 'காவலன்' படம் ரிலீசானது.

துப்பாக்கி

விஜய் கரியரில்ல மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் படம் ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்ஷன்ல வெளியான துப்பாக்கி திரைப்படம்.

இந்தப் படம் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகள்ல சிக்கிச்சு. இந்தப் படத்தோட தலைப்பை மாத்த சொல்லி 'கள்ளத்துப்பாக்கி' படக் குழுவினர் வழக்கு தொடுத்தாங்க. அதுக்கப்புறம் அவங்களோட பேச்சுவார்த்தை நடத்தி தலைப்பு பிரச்னையை சரிசெஞ்ச படக்குழு துப்பாக்கி தலைப்போட படத்தை ரிலீஸ் பண்ணினாங்க.

படம் ரிலீஸானதுக்கு அப்புறம் படத்துல, முஸ்லிம்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி படத்துக்குத் தடைகோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினாங்க. 'சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுகிறேன்' எனக் கூறி எஸ்.ஏ. சந்திரசேகர் பத்திரிகையாளர் சந்திப்புல பேசினதுக்கு அப்புறம், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுச்சு. இப்படி பலகட்ட பிரச்சனைகளை துப்பாக்கி படம் சந்திச்சுச்சு...

தலைவா

மக்கள் இயக்கம்ல விஜய்யோட ரசிகர்கள் தீவிரமா இயங்குன காலகட்டம் அது. ஏ.எல்.விஜய் இயக்கத்துல, அடுத்து அரசியல் பிரவேசம்தான்னு ரசிகர்களுக்கு சொல்ற விதமா, 'தலைவா' படத்தோட அறிவிப்பு வந்தது. படத்தோட தலைப்புல `டைம் டூ லீட்' ன்னு டேக் லைனும் இருந்தது. இது அவரோட ரசிகர்களுக்கு சந்தோசத்தைக் கொடுத்தாலும், அரசியல் வட்டாரங்கள்ல சலசலப்பை ஏற்படுத்துச்சு. படத்துக்கு அடுத்தடுத்து பல சிக்கல்கள் வந்தது.

தலைவா

தியேட்டர்களுக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கினதா அந்த சமயத்துல பரபரப்பான செய்திகள் வெளியாச்சு. இந்தப் பிரச்சனையை சரிசெய்றதுக்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறதுக்கு விஜய் முயற்சி செய்தார். ஆனால், ஜெயலலிதா அவர்களை சந்திக்க அனுமதி கிடைக்கல. இதையொட்டி நடிகர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டது அந்த சமயத்துல பேசுபொருளாச்சு. 'டைம் டூ லீட்' என்கிற வாசகம் நீக்கப்பட்டுதான் தலைவா படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு.

கத்தி

துப்பாக்கி படத்துக்கு அப்புறம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்துல விஜய் நடிச்ச படம்தான் `கத்தி'. மிகுந்த எதிர்பார்பபு இந்த படத்துக்கு இருந்தது. ஆனா, இந்தப் படத்துக்கும் சர்ச்சை வந்தது. இந்த படத்தை இலங்கை அரசுக்கு ஆதரவான `லைகா நிறுவனம்' தயாரிச்ச காரணத்தால படத்தை தடைசெய்யணும்னு பல அமைப்புகள் போராட்டம் நடத்தினாங்க.

இந்தப் படத்துக்கு அந்தப் பிரச்னை மட்டுமில்லாம கதை திருட்டுப் புகாரும் வந்தது. அந்தப் புகாரை முன்வச்சது நயினார் கோபி. அதுக்கப்புறம் அவர் நயன்தாரா நடிப்புல அறம் படத்தை இயக்கினார். இந்த படத்தோட ஆடியோ லான்ச்ல நடிகர் விஜய் நான் என்ன தியாகின்னு சொல்லிக்க மாட்டேன், ஆனா சத்தியமா நான் துரோகி கிடையாதுன்னு பேசினார்.

புலி

புலி படம் வெளியிடுவதற்கு முன்னாடி, விஜய் வீட்ல வருமான வரித்துறையினர் சோதனை நடந்ததால, பட ரிலீஸ்ல தாமதம் ஏற்பட்டுச்சு பல இடங்கள் முதல் ஷோ திரையிடப்படல.

மெர்சல்

அட்லீ இயக்கத்துல, விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் இப்படி பலர் நடிச்சு 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. இந்தப் படத்துல விஜய் பேசிய வசனங்களான ஜி.எஸ்.டி, உள்ளிட்ட வசனங்களுக்கு பா.ஜ.க வைச் சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. பாஜகவின் ஹெச். ராஜா ‘ஜோசப் விஜய்’ன்னு விஜய்யோட பேரைக் குறிப்பிட்டு தன்னோட எதிர்ப்பை தெரிவிச்சாரு.

இந்த படத்துக்க ஆதரவாகவும், விஜய்யின் மதத்தை வைத்து இந்த விவகாரத்துல அவரை அடையாளப்படுத்துறதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சம் பலரும் விஜய்க்கு ஆதரவு கொடுத்தாங்க.

கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரம் பகுதியில், கன்னட அமைப்பினர் சிலர் திரையரங்கு மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டு, ‘மெர்சல்’ படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என எதிர்த்தனர். இப்படி மெர்சல் படத்துக்கும் சிக்கல் வந்துச்சு.

சர்கார்

ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் 3-வது முறையா இணைஞ்ச படம்தான் சர்கார். இந்த படத்துக்கும் அதே கதை , அரசியல் சிக்கல் வந்துச்சு. தன்னோட கதையின் தழுவல்தான் இந்தப் படம்னு சொல்லி, வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில, படத்தில் வருண் ராஜேந்திரன் பெயருக்கு கிரெடிட்ஸ் கொடுப்பதாக ஏ.ஆர்.முருகதாஸ் உறுதியளித்து பேரும் சேர்த்தாங்க.

ரிலீஸுக்கு அப்புறமா, படத்துல அரசு இலவசமா கொடுத்த பொருட்களை எதிர்க்கிற மாதிரியான காட்சிகளுக்கு கண்டனங்கள் வந்துச்சு. படத்தோட வில்லி கதாபாத்திரத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோட பேரை வச்சதால, அதிமுகவினர் இந்தப் படம் ரிலீசான தியேட்டர்கள்ல ஆர்பாட்டம் பண்ணினாங்க. சில இடங்கள்ல மோதல்களும் நடந்துச்சு.

பீஸ்ட்

நெல்சன் டைரக்ஷன்ல உருவான ‘பீஸ்ட்’ திரைப்படத்துல, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாக காட்டப்பட்டுள்ளதாகவும், வன்முறை சம்பவங்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறி, கத்தார், குவைத் நாடுகளில் படத்தின் வெளியீடு தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்ற சிறுபான்மை கட்சியும் தமிழ்நாட்டில் ‘பீஸ்ட்’ படத்தை தடைசெய்யக் கோரிக்கை விடுத்திருந்தது.

இதுமட்டுமில்லாம, பிகில் பட ஆடியாே லாஞ்ச் அப்போ விஜய் ரசிகர்கள் மேல தடியடி நடந்தது, மாஸ்டர் படத்தோட படப்பிடிப்புல இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் விசாரணைக்காக அழைச்சுட்டுப் போனதும் அதுக்கப்புறம், விஜய், `தேங்க் யூ நெய்வேலி' னு அங்கு வந்திருந்திருந்த மக்களுக்கு நன்றி சொல்ற விதமா ட்விட்டர்ல போஸ்ட் போட்டதும் நடந்தது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே.!

ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' - உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்பின் முழு விவரம்

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரோடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அ. வினோத் இயக்கியுள்ளார். பொங்கல் ப... மேலும் பார்க்க

ஜனநாயகன்: `அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்' - தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவு!

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம... மேலும் பார்க்க

ஜனநாயகன்: ``சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு..." - சாடும் தமிழிசை

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவன... மேலும் பார்க்க

ஜனநாயகன்: "பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை அண்ணா" - விஜய்க்கு சிம்பு, வெங்கட் பிரபு ஆதரவு

விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவ... மேலும் பார்க்க

Jana Nayagan: "வெறுப்பு பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு; கலையை காப்பாற்றுவோம்!" - கார்த்திக் சுப்புராஜ்

ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருந்த விஜய்யின் ' ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 'ஜனநாயகன்' ரிலீஸுக்கு அடுத்த நாள் திரைக்கு வரவிருக்கும் ... மேலும் பார்க்க