ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
`135 கிலோவில் இருந்து 89 கிலோவாக குறைந்துவிட்டேன்' - அமைச்சர் நிதின் கட்கரி சொல்லும் ரகசியம்!
மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எப்போதும் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிதின் கட்கரி தனது உடல் நலனிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
கொரோனா காலத்திற்கு முன்பு நிதின் கட்கரி 135 கிலோ எடை இருந்தார். ஆனால் இப்போது எடையை குறைத்து மிகவும் ஸ்மார்ட்டாக மாறி இருக்கிறார். எவ்வாறு உடல் எடையை குறைத்தார் என்பது குறித்து பாலிவுட் பட இயக்குனர் பராகானுடன் நிதின் கட்கரி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இயக்குனர் பரா கான் பிரபலமானவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் சமையல் முறையை வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டிற்கு சென்றிருந்தார்.

2.30 மணி நேரம் உடற்பயிற்சி
இந்த சந்திப்பின் போது நிதின் கட்கரி கூறுகையில்,''எனக்கு அதிகாலை 1 மணி வரை சந்திப்புகள் இருக்கும். அப்படி இருந்தும் காலை 7 மணிக்கு எழுந்து இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். முன்னர் நான் 135 கிலோ எடை இருந்தேன். ஆனால் இப்போது 89 கிலோவாக எடையை குறைத்து இருக்கிறேன். கொரோனாவிற்கு பிறகு 46 கிலோ எடையை குறைத்துள்ளேன். கொரோனா காலத்தில் என்னுடன் இருந்த பல உயிரிழந்துவிட்டனர். அதன் பிறகுதான் எனது உடல் நலனில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.
பல ஆண்டுகளாக வேலையின் காரணமாக எனது உடல் ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டுவிட்டேன். எனக்கு மிகவும் திட்டமிடப்படாத, ஒழுங்கற்ற வாழ்க்கை இருந்தது. ஆனால் இப்போது உடற்பயிற்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இப்போது நான் தினமும் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். உடல் ஆரோக்கியமே சிறந்த செல்வம் ஆகும். உடல்நிலை சீர்குலையத் தொடங்கினால், தொழில்முறை வெற்றியோ அல்லது பொது வாழ்வில் உள்ள அந்தஸ்தோ பெரிதாகப் பயனளிக்காது" என்று வலியுறுத்தினார்.
உடல் பயிற்சியில் பிராணாயாமம், உடலை நீட்டும் பயிற்சிகள், தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை பயிற்சியாளர் ஒருவர் துணையோடு செய்வதாக குறிப்பிட்டார். சாப்பாடு விசயத்தில் தினமும் ஒரு முறை மட்டுமே அரிசி சாதம் எடுத்துக்கொள்வதாகவும், அனைத்து விதமான ஆயில் உணவுகளையும் தவிர்த்துவிட்டதாகவும், புரோட்டின் மற்றும் நார்சத்துள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.!




















