SIR மதுரை: "ஒரே பாகத்தில் இறந்தவர்கள் உட்பட முறைகேடாக 42 பெயர்கள் சேர்ப்பு" - சர...
BB Tamil 9: "நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த பணம் கோடி ரூபாய் மாதிரி"- பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.
கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் நடந்து வந்தது. யார் இந்த பணப்பெட்டியை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்திருக்கிறார். " பிக் பாஸ் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்திட்டேன். நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த பணம் கோடி ரூபாய் மாதிரி" என்று சொல்லி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வினோத் கதறி அழுகிறார்.



















