செய்திகள் :

SIR மதுரை: "ஒரே பாகத்தில் இறந்தவர்கள் உட்பட முறைகேடாக 42 பெயர்கள் சேர்ப்பு" - சரவணன் புகார்

post image

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98 இல் இறந்தவர்கள் உட்பட 42 பெயர்கள் முறைகேடாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று முன்னாள் எம்.எல்.ஏ-வும் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளருமான டாக்டர் சரவணன் புகார் எழுப்பியுள்ளார்.

தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்த டாகடர் சரவணன்
தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்த டாகடர் சரவணன்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், "இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின்படி மதுரை மாவட்டத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து நாங்கள் ஆய்வு செய்தபோது மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 98 இல் 844 பேர் வரைவு பட்டியலில் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் ஆளுங்கட்சியின் தூண்டுதலால் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் திட்டமிட்டு மரணமடைந்த 29 பேரின் பெயர்களும், நிரந்தரமாக இடம் பெயர்ந்த 12 பேரின் பெயர்களும், ஒரு இரட்டைப் பதிவு என 42 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

இந்தப் பதிவுகளை நீக்கவும், தவறு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிய ஆவணங்களுடன் வடக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.

எஸ்.ஐ.ஆர்-ஐ எதிர்ப்பது போல வெளியில் காட்டிக் கொண்டாலும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி இது போன்ற மோசடிகளைச் செய்து, தேர்தலில் வெற்றி பெற திமுக அரசு முயற்சித்து வருகிறது.

திமுக அரசின் மோசமான நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மகளிர், மாணவர் எனப் பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த முறை திமுகவுக்குப் பாடம் புகட்டுவது உறுதி" என்றார்.

USA: ``நான் சீன, ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால்.!" - அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேட்டி

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில், சுயாட்சி செய்துவரும் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என வல்லரசுகள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. கிரீன்லாந்தில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட தாது பொருள்களும், பணி உ... மேலும் பார்க்க

டார்கெட் Greenland: "நான் முந்தவில்லை என்றால் சீனாவும், ரஷ்யாவும்.!" - ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

வெனிசுலாவைக் கைப்பற்றியதை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லேண்டிற்கு தற்போது குறி வைத்திருக்கிறார். இது புதிய குறி அல்ல... அவர் முதல்முறை அமெரிக்க அதிபராக பதவியேற்ற போதே வைத்த குறி தான். கடந்த ... மேலும் பார்க்க

'கோட்டையில் ஓட்டை போட திமுக சம்மட்டியுடன் தயாராக உள்ளது!' - அதிமுகவினருக்கு எஸ்.பி. வேலுமணி வார்னிங்

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் அனல் பறக்க தொடங்கிவிட்டன. கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமு... மேலும் பார்க்க

'ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றது மறந்துவிட்டதா?' - விஜய்யை சாடிய சரத்குமார்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், “சென்சார் போர்டு ‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் நிறுத்தவில்லை. இதற்கு முன்பும் பல்வேறு படங்களை நிறுத்தியுள்ளார்கள். அண்மையில் ‘தக... மேலும் பார்க்க