Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
சென்னை: பால்கோவாவில் மயக்க மருந்து; தாலிச் செயினைத் திருடிய பெண் - சிக்கியது எப்படி?
சென்னை, திருவல்லிக்கேணி, சின்னப்பா தெருவைச் சேர்ந்தவர் மாலத்திரி (44). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுஜாதா. இவர், வீட்டிலிருந்தபடியே டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். 07.01.2026-ம் தேதி மாலத்திரி வேலைக்கு சென்ற பிறகு சுஜாதா வீட்டிலிருந்து துணிகளை தைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஜாக்கெட் தைக்க சுஜாதாவுக்கு ஏற்கெனவே அறிமுகமான திருவல்லிக்கேணியைச் சேர்ந் ஆர்னிப்பள்ளி ரவணம்மா என்பவர் சுஜாதா வீட்டுக்கு வந்தார்.

இதையடுத்து போலீஸார், சம்பவம் நடக்கும் போது அங்கிருந்த திருவல்லிக்கேணி அரிசி மண்டி தெருவைச் சேர்ந்த ஆர்னிப்பள்ளி ரவணம்மாவிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் பால்கோவாவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து சுஜாதாவிடமிருந்து தாலிச் செயினை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த தாலி செயினை போலீஸார் மீட்டதோடு ரவணம்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து ஜாம்பஜார் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட ரவணம்மாவின் சொந்த ஊர் ஆந்திரா. இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து கணவரைப் பிரிந்து கூலி வேலை செய்து வருகிறார். போதிய வருமானம் இல்லாததால் ரவணம்மா, திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். சுஜாதாவிடமிருந்து தாலிச் செயினை திருடுவதற்கு முன்பு 17.12.2025-ம் தேதி திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் மகாராஜன் என்பவரின் வீட்டில் பீரோவில் வைத்திருந்து 20 சவரன் தங்க நகைகளை ரவணம்மா திருடியிருக்கிறார். அதில் 13.5 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளோம்" என்றனர்.














