செய்திகள் :

சென்னை: நகைக்காகக் பெண் கொலை - இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

post image

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவரின் மனைவி அமுதா (53). கடந்த 8-ம் தேதி மாலை சீனிவாசனின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதோடு வீட்டுக்குள் இருந்து புகையும் வந்தது. உடனே சீனிவாசனின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள், காவல் கட்டுப்பாட்டறைக்கும் சீனிவாசனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சீனிவாசன் விரைந்து வந்தார். அதோடு போலீஸாரும் அங்கு வந்து விசாரித்தனர். பொதுமக்களின் உதவியோடு சீனிவாசனின் வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது அங்கு அமுதா, தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

கொலை
கொலை

அதைப்பார்த்து சீனிவாசன் அதிர்ச்சியடைந்ததோடு கதறி அழுதார். பின்னர் போலீஸார், அமுதாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமுதாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரை யாரோ கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கும் தகவலை போலீஸாரிடம் தெரிவித்தனர். அதனால் கொலை வழக்கு பதிந்த போலீஸார், அமுதாவை கொலை செய்து தீ வைத்து எரித்தது யார் என விசாரித்தனர். போலீஸாரின் சந்தேக பார்வை, அண்ணாநகரைச் சேர்ந்த சாந்தகுமார் என்ற இளைஞர் மீது விழுந்தது. இவர் சீனிவாசனின் டீக்கடையில் வேலைப்பார்த்து வருவதும் தெரியவந்தது. அமுதா கொலை குறித்து சீனிவாசனிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று மதியம் சீனிவாசன், கடையிலிருந்து வீட்டுக்கு சாப்பிடச் சென்றிருக்கிறார். அப்போது கடையில் அமுதா இருந்திருக்கிறார். சீனிவாசன், கடைக்கு வந்த பிறகு மாலையில் அமுதா வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து சாந்தகுமாரும் வெளியில் சென்றார். அமுதா வீட்டிலிருந்தபோது அங்கு வந்த சாந்தகுமார், அமுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அமுதா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்து தீ வைத்து எரித்திருக்கிறார். சாந்தகுமாரிடமிருந்து அமுதாவின் தங்க நகைகளை பறிமுதல் செய்திருக்கிறோம். நகைக்காக அமுதாவை கொலை செய்ததாக சாந்தகுமார் சொல்கிறார். அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு சாந்தகுமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! - என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டு... மேலும் பார்க்க

சேலத்தில் மருத்துவ மாணவி கொலை; காதல் விவகாரமா? தந்தையைத் தேடும் போலீஸ்! - நடந்தது என்ன?

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷின... மேலும் பார்க்க

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அ... மேலும் பார்க்க