செய்திகள் :

தூத்துக்குடி:`இன்ஸ்டாவில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது' - சமாதானம் பேச அழைத்து காதலியை கொன்ற காதலன்

post image

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகிலுள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் உமா. இவர், தென்காசி மாவட்டம், பாறைப்பட்டியில் உள்ள தனியார் காவலர் பயிற்சிப்பள்ளியில் படித்து வந்தார். இதே பள்ளியில் திருவேங்கடம் அருகிலுள்ள கொளக்கட்டான் குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரும் படித்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

கொலை செய்யப்பட்ட உமா- ராஜேஷ்

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், தொலைதூரக் கல்வியில் இளங்கலை படிப்பதற்காக கட்டணம் செலுத்திவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது உமாவை தொடர்பு கொண்ட ராஜேஷ், அவருடன் சமாதானமாக பேசியுள்ளார்.

பின்னர், மாலையில் உமாவை கஸ்தூரிரெங்கபுரம் பகுதியிலிலுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இன்ஸ்டாகிராமில் சக நண்பர்களுடன் பேசக்கூடாது எனவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் ராஜேஷ் வற்புறுத்தினாராம்.

கழுகுமலை

இதற்கு உமா மறுக்கவே அவரை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்துள்ளார். இதில், உமா உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்ற ராஜேஷ் நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளார். கொலைச் சம்பவம் நடந்த பகுதி கழுகுமலை என்பதால், கழுகுமலை போலீஸாரிடம் ராஜேஷை ஒப்படைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அளித்துள்ள வாக்குமூலத்தில், “நானும் உமாவும் காதலித்து வந்தோம். இதற்கிடையில் அவர், இன்ஸ்டாகிராமில் சக நண்பர்களுடன் பேசிப் பழகி வந்ததால், எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. சமாதானம் செய்யவே அவரை வரச்சொன்னேன். ஆனால், அவர் உடன்படவில்லை. கோபத்தில் கழுத்தை நெரித்ததில் அவர் மயங்கினார்.

கொலைச் சம்பவம் நடந்த காட்டுப்பகுதி

உடனே 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். ஆனால்,  அவரை பரிசோதித்த நர்ஸ், உமா இறந்துவிட்டாதாகக் கூறினார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் போலீஸில் சரணடைந்தேன்” எனக் கூறியுள்ளார். காதலியை காதலனே கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  

சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு... மேலும் பார்க்க

`திறமையை சோதிக்க வேண்டுமென அழைத்தார்' - 17 வயது வீராங்கனையை வன்கொடுமை செய்த பயிற்சியாளர்

டெல்லியில் நடந்த துப்பாக்கிச் சுடும் போட்டியில், 17 வயது வீராங்கனை கலந்து கொண்ட நிலையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார். அந்த வீராங்கனைக்கு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் த... மேலும் பார்க்க

நெல்லை: திருமணம் மீறிய உறவு - கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த ... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மிரட்டல், படுகொலை: சேனா வேட்பாளருக்கு கத்திக்குத்து, எதிர்க்கட்சி நிர்வாகி படுகொலை!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பா.ஜ.க கூட்டணி, சிவசேனா(உத்தவ்) கூட்டணி, காங்கிரஸ் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ... மேலும் பார்க்க

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ... மேலும் பார்க்க

மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!

டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் ஃபைஸ் எலாஹி மசூதிக்கு அருகில் உள்ள நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ... மேலும் பார்க்க