'மத்திய அரசாங்கத்தின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை; அது வேண்டாத அரசாங்கம்' - அ...
மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்: போராட்டம், கல்வீச்சில் ஈடுபட்ட மக்கள் - டெல்லியில் நிலவிய பதற்றம்!
டெல்லி ராம்லீலா மைதானத்திற்கு அருகில் உள்ள சையத் ஃபைஸ் எலாஹி மசூதிக்கு அருகில் உள்ள நிலத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீஸார் என 300 பேர் வந்து ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மசூதிக்கு வரும் சாலைகள் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் மசூதிக்கு வெளியில் கூடி நின்று இடிப்புக்கு எதிராக கோஷமிட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டம் மற்றும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனால் போலீஸார் கூட்டக்த்தை கலைக்க கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். பொதுமக்கள் தடுப்பை உடைத்துக்கொண்டு இடிக்கும் பகுதிக்குச் செல்ல முயன்றனர். அவர்கள்மீது போலீஸார் லேசாகத் தடியடி நடத்தினர். பொதுமக்கள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் சில போலீஸார் காயமடைந்தனர். சட்டவிரோதமாக ஹால் ஒன்றும், மருத்துவமனை ஒன்றும் கட்டப்பட்டு இருந்தது. அவை இரண்டும் இடிக்கப்பட்டன.

கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் 30 புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டு சட்டவிரோதக் கட்டுமானங்கள் இடித்துத் தள்ளப்பட்டன. கடந்த நவம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் ராம்லீலா மைதானம் அருகில் இருக்கும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி மாநகராட்சிக்கு மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்து இருந்தது. அதனடிப்படையில் டெல்லி மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



















