ஶ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கு: 1.7 பில்லியன் டாலர் பாண்ட் இழப்பீடு வழங்க வேண்...
`நாளை எடப்பாடியை சந்திக்கிறேன்; எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது'- நயினார் நாகேந்திரன்
புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,
"நாளை எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கப் போகிறேன். ஏற்கெனவே, பா.ம.க கூட்டணியில் வந்துள்ளது. எங்களை நிறைய பேர் கேள்வி கேட்டார்கள், உங்களை விட்டு நிறைய பேர் பிரிந்து போகிறார்களே என்று. எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று சொல்லி இருந்தேன். அதன் முதல் கட்டமாக தற்பொழுது பா.ம.க அன்புமணி ராமதாஸ் கூட்டணியில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி இது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்துள்ளார். மேலும், நானும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை என்னவென்று பார்ப்போம். பா.ஜ.க-வைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது. நாங்கள் சுதந்திரமாகச் செயல்படுவோம்.

தொகுதி எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமல்ல. யார் முதலமைச்சராக இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம். ராமதாஸ் கருத்திற்கு நான் தற்போது கருத்து கூற முடியாது. அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ்-ஸை சேர்ப்பது குறித்தும் நான் கருத்து சொல்ல முடியாது. இதற்கு முன்பு நிறைய படங்களுக்கு தணிக்கைச் சான்று கிடைக்காமல் காலதாமதம் ஆகி உள்ளது. அதற்காக, பிரதமர் மோடியைச் சொல்ல முடியாது. சென்சார் போர்டு ஒன்று இருக்கிறது. அதில் தான் என்னவென்று பார்க்க வேண்டுமே தவிர, எடுத்த உடனே மோடியை குற்றம்சுமத்த முடியாது. காங்கிரஸ் கட்சி த.வெ.க-வுக்குப் போகிறார்களா என்பது தெரியவில்லை. நான் இது குறித்து ஏற்கெனவே காங்கிரஸ் அங்கு செல்லலாம் என்று கூறியிருந்தேன். அதன் அடிப்படையில் செல்கிறார்களா என்பது தெரியவில்லை" என்றார்.

















