ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
அதிமுக: இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த தடைக்கோரி வழக்கு; இபிஎஸ்-க்கு எதிரான மனு தள்ளுபடி
அதிமுக-வில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்பதற்காகவும், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கடந்த ஜூலையில் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கை நிராகரித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சூரிய மூர்த்தி சார்பில் வழக்கறிஞர் அனில் குமார் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று (ஜனவரி.9) நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வு விசாரித்தது.
அதன்படி இரட்டை இலை சின்னம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக சூரியமூர்த்தி தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
















