ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
BB Tamil 9: "கார் டாஸ்க் சம்பவம் டிராமாவா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு"- சாண்ட்ராவை சாடிய திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.
கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் நடந்து வருகிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா, கெமி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.
தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில் வியானா, பிரவீன் ராஜ், திவ்யா ஆகியோர் சாண்ட்ரா குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.
"ஒருதவங்க கூட இருக்கிறதா இருந்தாலும் இருப்பாங்க. அவங்களை காலிப்பண்றதுனாலும் பண்ணிடுவாங்க. எதுக்கெடுத்தாலும் எனக்கு ஹஸ்பண்ட், குழந்தைங்க இருக்காங்கன்னு சொல்றாங்க. நமக்கெல்லாம் குடும்பம் இல்லையா? நம்ம என்ன அநாதைகளா?" என்று வியானா சாண்ட்ராவை சாடுகிறார்.

தொடர்ந்து பேசிய திவ்யா, " கார் டாஸ்க் சம்பவம் கூட டிராமாவா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. அது நிஜமா இருந்தாலும் என்னால அதை நம்ப முடில. ஒருத்தவங்க காயப்படுவாங்கன்னு தெரிஞ்சும் முதுகில குத்துறாங்கன்னா. யார் நீ?" என்று சாண்ட்ராவை விமர்சிக்கிறார்.


















