செய்திகள் :

BB Tamil 9: Day 95 சாண்ட்ராவின் டிராமாவை அம்பலப்படுத்திய ரம்யா; பொங்கிய திவ்யா! - நடந்தது என்ன?

post image

மற்ற விருந்தினர்களின் வருகையால் ஏற்பட்ட நெகட்டிவிட்டியை கெமியின் வருகை சற்று சமன் செய்தது. சீக்ரெட் டாஸ்க் காரணமாக இந்த எபிசோடு கொஞ்சம் சுவாரசியம். 


“வெளியில் ஆயிரம் சொல்வாங்க. உங்க உழைப்பு உங்களுக்குத்தான் தெரியும். வாழ்த்துகள்” என்று ஃபைனலிஸ்ட்டுகளுக்கு கெமி வாழ்த்து சொன்னது பாசிட்டிவ் வைப்ரேஷன்.  

ஜாலி என்கிற பெயரில் திவாகருக்கும் வினோத்திற்குமான உரசல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திவாகர் exhibitionist ஆக இருக்கிறாரோ? தொண தொணவென்று பேசுவதின் மூலம் தன்னை முன்னிறுத்திக் கொள்வது ஒரு பக்கம் என்றால், ஒரு கூச்சமும் இன்றி அரை நிர்வாணமாக உலவுவது, கார்டன் ஏரியாவில் நடனமாடுவது என்று முகம் சுளிக்க  வைக்கிறார். 

தனிமனித சுதந்திரம், ஆடை உரிமை என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கண்ணியமாக இருப்பது பற்றிய பிரக்ஞை தேவைதானே?! வாய்ப்பேச்சில் மட்டுமல்லாது, உடல் வழியாகவும் தன்னை ஒரு காட்சிப்பொருளாக்கி கவனஈர்ப்பு செய்யும் வழக்கம் திவாகரிடம் தன்னிச்சையாகவே படிந்திருக்கிறதா?

“அவரு பேண்ட் ரொம்ப கீழ இறங்கியிருந்தது. பார்க்க நல்லால்லை. அதை்ததான் சுட்டிக் காட்டினேன். அதுக்கு கோச்சுக்கிட்டாரு” என்று வினோத் விளக்கம் சொன்னாலும் கோபமாக திவாகர் கத்திக் கொண்டிருந்தார். “ரெண்டு பேரும் ஜாலியா பேசறது நல்லாயிருக்கு. அத ஒரு லிமிட்டோட வெச்சுக்கங்க. செட் ஆகலைன்னா பேசாதீங்க” என்று பஞ்சாயத்து செய்தார் திவ்யா. 


“வியானா ஒரு முடிவோடதான் வந்திருக்கா போல.. அதனால அவ எது சொன்னாலும் அதப் பத்தி நாம கவலைப்பட்டு டிஸ்கஸ் பண்ண வேணாம்” என்று சான்ட்ராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் விக்ரம். 

கார் விளம்பரத்தைத் தொடர்ந்து கெமி என்ட்ரி. “நான் நிறைய பணம் வெச்சிருக்கேன். கொடுக்கலாம்ன்னு பார்க்கறேன். ஆனா நீங்க எடுக்க மாட்டேங்கிறீங்களே” என்று ஃபைனலிஸ்ட்டுகளை அழைத்து பில்டப் கொடுத்தார் பிக் பாஸ். 

ஒரு சீக்ரெட் டாஸ்க். “ஒரு முன்னாள் போட்டியாளர் வருவாரு. நான் சொல்ற வரை, மத்தவங்க கண்ல படாம நீங்க ஒளிச்சு வெக்கணும். இதை வெற்றிகரமா செஞ்சு முடிச்சா ஒரு லட்சம் பணம் பெட்டில சேரும்” என்றார் பிக் பாஸ். 

வரப் போகிறவர் யார் என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இதற்கான டிராமாவை ஃபைனலிஸ்ட்டுகள் திறமையாக செய்தார்கள். பிக் பாஸ் கூப்பிட்டு திட்டியது போலவும் அதற்காக கோபமாக இருப்பது போலவும் சபரி வெளியே சென்று கத்தினார். ‘என்னாச்சு..?’ என்று மக்கள் அங்கே ஒன்று கூடி விட்டனர். சான்ட்ரா மட்டும் உள்ளேயே தங்கி விட்டார். 

அனைவரும் வெளியே இருக்கும் சமயத்தில், கெமியை அழைத்து வந்து ‘தல’ ரூம் கட்டிலின் பின்னால் ஒளிய வைத்தார். இது தெரியாமல் உள்ளே வந்த திவ்யா, ஸ்டோர் ரூம் கதவைத் தட்டி “பிக் பாஸ்.. கதவைத் திறங்க” என்று தவித்தது நல்ல காமெடி. ‘ஆளு எப்பவோ வந்தாச்சு’ என்று மற்றவர்கள் சொல்ல “அடப்பாவிங்களா.. சொல்ல மாட்டீங்களா?” என்று சலித்துக் கொண்டார். 

தல ரூமில் ஒளிந்திருக்கும் கெமியை, முன்னாள் போட்டியாளர்கள் பார்க்கக்கூடாது என்பதுதான் சவால். இந்த இடத்தில் ஒரு டிவிஸ்ட் வைத்தார் பிக் பாஸ். ஃபைனலிஸ்ட் அனைவரும் முன்னாள் போட்டியாளர்களை வீடு முழுக்க அழைத்துச் சென்று சுற்றிக் காட்டி அங்கு நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களை நினைவுகூர வேண்டும். 

இதன் மூலம் ‘தல’ ரூமிற்கும் அவர்கள் செல்வார்கள் என்பது பிக் பாஸின் கணக்கு. ஆனால் அப்படி நிகழவில்லை. பாத்ரூம் ஏரியாவிற்குச் செல்லும் போது “இங்குதான் எனக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. வெளியில் சென்று பார்த்தேன். நிறைய அழுதேன். சான்ட்ரா என்னை பாம்பு என்று பாருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். என்னை நம்பக் கூடாதாம். மறுநாள் நான் எவிக்ட் ஆகறப்ப கட்டிப்பிடிச்சு அழுதாங்க. எது உண்மையான சான்ட்ரா?’ என்று பொதுவில் புகார் சொல்ல ‘இதுக்கு விளக்கம் தரலாமா?’ என்று பலவீனமாக கேட்டார் சான்ட்ரா. 

ரம்யாவும் சான்ட்ராவும் பேச அமர்ந்தார்கள். சந்தர்ப்பவாதி கூட்டணி அமைப்பதில் சான்ட்ரா திறமைசாலி என்பது நமக்குத் தெரியும். என்றாலும் “இந்த ஆட்டமும் வீட்டின் சூழலும் அப்படி. இது மைண்ட் கேம். அதன் அழுத்தம் தாங்காமல் அந்தச் சமயத்தில் ஏதோ பேசி விட்டேன்” என்று சமாளித்திருக்கலாம். ஆனால் “அந்தச் சமயத்துல நீ எனக்கு பிரெண்ட் இல்லை. ரம்யா பொய் சொல்லுவான்னு எனக்குத் தோணிடுச்சு” என்று சான்ட்ரா விளக்கம் அளிக்க முயல, 

“மறுநாள் என்னை கட்டிப்பிடிச்சு அழுதே.. அப்ப எது உண்மையான சான்ட்ரா..? நீ சீரியஸாவே நடிக்கற.. பின்னாடி பேசற.. உன் கிட்ட நான் பேச விரும்பலை. இந்த வீட்ல யாரையும் நம்பக்கூடாதுன்றதுதான் எனக்கு கிடைச்ச பாடம்” என்பது மாதிரி சொல்லி கோபமாக விலகினார் ரம்யா. 

“விக்ரமும் சான்ட்ராவும் இப்ப கொஞ்சி குலாவுறாங்க. நான் அழும் போது அதை வெச்சு எத்தனை கிண்டல் பண்ணாங்க.. நாமினேட் பண்ணாங்க.. சான்ட்ரா அழறது மட்டும் சரியானதா.. ஃபைனலுக்கு அனுப்பிடுவாங்களா?” என்று ரம்யா கேட்ட கேள்விகள் அனைத்தும் நியாயமானவை. 

ரம்யாவின் நேரடியான புகாரைச் சமாளிக்க முடியாமல் அழுகை என்னும் ஆயுதத்தை சான்ட்ரா எடுக்க, விக்ரம் வந்து ஆறுதல் சொன்னார். 

சீக்ரெட் டாஸ்க்கின் லெவல் ஒன்றை வெற்றிகரமாக முடித்த காரணத்தினால் ஒரு லட்சம் பரிசை பிக் பாஸ் பொதுவில் அறிவித்தார். “என்ன டாஸ்க்கு.. என்ன பணம்..?” என்று மற்ற போட்டியாளர்கள் விழித்தார்கள். சபரி இதை திறமையாக சமாளித்தார். 

“வாங்க அதைப் பத்திதான் பேசணும்” என்று மற்றவர்களை மீண்டும் வெளியே அழைத்துச் செல்ல, பலியாடுகள் போல சென்றார்கள். இந்த இடைவெளியில் கெமியின் ‘உச்சா’ பிரச்சினை வெறறிகரமாக தீர்க்கப்பட்டது. 

இறுதிப் போட்டியாளர்களை மீண்டும் ரகசியமாக அழைத்த பிக் பாஸ் “இப்ப அடுத்த லெவல் போகலாமா.. ரெஸ்ட் ரூம் பிரச்னையை சூப்பரா முடிச்சிட்டிங்க.. இப்ப அவருக்கு சாப்பாடு தரணும். உங்கள்ல மூணு பேரு சாப்பிடணும்” என்று பிக் பாஸ் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கையை தூக்கினார் அரோரா. (சோறு முக்கியம் பாஸ்!). 

“ஒண்ணு பண்ணலாம்.. நான் ஏன் இந்த வீட்டில் இருக்கணும்ன்றதுக்கு ஒவ்வொருத்தரா விளக்கம் தரலாம். அப்படியே டைமை ஓட்டலாம்” என்று சபரி ஐடியா தர, “அப்படிக் கூப்பிட்டா வரமாட்டாங்க. அவங்க நம்மளை கழுவி ஊத்தறதா இருந்தா உடனே ஓடி வருவாங்க” என்கிற டெக்னிக்கை சொல்லி பிக் பாஸிற்கே டஃப் ஃபைட் தந்தார் திவ்யா. 

“கெமி பிரியாணி நல்லாயிருக்கா..?” என்று ரகசியக் குரலில் பிக் பாஸ் கேட்க “சூப்பரா இருக்கு” என்று கையசைத்தார் கெமி. பிக் பாஸின் குரல் கேட்டு ‘அப்பத்தா’ திவ்யா வழக்கம் போல் ஜொக் ஆகி ‘க்றீச்சிட’ ‘ஏண்டா கத்தறே..’ என்று கடிந்து கொண்டார் வினோத். “இந்த சீசன்ல இதுதான் புது சீக்ரெட் ரூம்” என்று அசந்தர்ப்பமாக ஜோக் அடித்தார் பிக் பாஸ். 

சீக்ரெட் டாஸ்க் லெவல் இரண்டிலும் வெற்றி பெற்றதால் 2 லட்சம் பரிசு சேர்ந்து. “என்னது.. எங்களை விட்டுட்டு பிரியாணி சாப்ட்டீங்களா.. நீங்க டாஸ்க்ல ஜெயிச்சத கூட மன்னிச்சு விட்டுடுவோம்.. ஆனா பிரியாணி தராம போனதை மன்னிக்கவே முடியாது” என்கிற மாதிரி மற்றவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். “மட்டன் பிரியாணி.. சிக்கன் 65 கிட்னி ஈரல்” என்று சொல்லி வெறுப்பேற்றினார் வினோத். 

‘எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்’ காமெடி மாதிரி, கட்டிலின் பின்னால் நான்கு மணி நேரம் ஒளிந்திருந்து வெற்றி தேடித்தந்த கெமியை ஸ்பெஷலாக பாராட்டினார் பிக் பாஸ். 

“ஹலோ ஃபயர் ஸ்டேஷனா.. இங்க கிணத்துல ஒரு கன்னுக்குட்டி விழுந்திருச்சு. கயிறு கட்டில்லாம் எடுத்துக்கிட்டு சீக்கிரம் வாங்க சார்” என்று பாவனையாக அலறிக் கொண்டிருந்தார் வினோத். என்னவென்று பார்த்தால், நீச்சல் குளத்தில் ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தார் திவாகர். பிறகு அரை நிர்வாணத்தோடு ஒரு சகிக்க முடியாத டான்ஸ். ‘இங்க பாரேன்.. குறளி வித்தை’ என்று மற்றவர்கள் வேடிக்கை பார்க்க கூடினார்கள். 

திவாகர் நடனமாடிய போது “நேயர்களே.. இது போன்ற பிரச்சினை உங்களுக்கும் இருந்தால் அருகிலிருக்கும் மருத்துவரை உடனடியாக அணுகவும்” என்று டைமிங்கில் காமெடி செய்தார் சபரி. 

சபையின் நடுவில் வந்த கெமி “இந்த வீட்டில் இருக்கும் கஷ்டம், மனஅழுத்தம் உங்களுக்குத்தான் தெரியும். இதனால ஒருத்தர் காரெக்டரே பாழாகலாம். வெளில ஆயிரம் பேசுவாங்க.. Leave it to hell. நீங்க உழைச்சு சம்பாதிச்ச இடம் இது” என்று போட்டியாளர்களை பாசிட்டிவ்வாக பேசி பாராட்டியது நன்று. (இந்தச் சமயத்தில் சான்ட்ராவின் மனச்சாட்சி என்ன சொல்லியிருக்கும்?!)

பாம்பு விஷயத்தை மறுபடியும் கையில் எடுத்த ரம்யா, இதை திவ்யா, வியானாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார். சந்தடி சாக்கில் இன்னொரு விஷயத்தையும் திவ்யாவிடம் போட்டுக் கொடுத்தார்கள். ‘சான்ட்ரா.. உங்க விஷயத்துல பொசசிவ் ஆனாங்க. தெரியுமா.. வெளில போய் பாரு. அழுதுடுவே’ என்று ரம்யா சொல்ல திவ்யாவிற்கு பயங்கர ஷாக்.

என்றாலும் அதை மறைத்துக் கொண்டு ‘அப்படில்லாம் கலங்க மாட்டேன்’ என்று சொன்னவர், அடுத்த கணமே.. “அவங்களை கிழிச்சு தொங்க விடணும் போலிருக்கு’ என்று பொங்கினார். 

சான்ட்ராவிற்கும் திவ்யாவிற்கும் இடையே மோதல் நிகழ்ந்த போது, இந்த பொசசிவ்னஸ் ஒரு காரணமாக இருக்கலாம் என்று திவ்யா யூகிக்கவில்லையா? பொதுவாக இது போன்ற விஷயங்களில் பெண்களின் உள்ளுணர்வு சரியாக வேலை செய்யுமே?!

பரிசுப்பணம் பதிமூன்று லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி வினோத் இதை கைப்பற்றியிருப்பதாக சொல்கிறார்கள். பார்ப்போம். 

வந்தவர்கள் அனைவரும் நெகட்டிவிட்டியை உற்சாகமாக பரப்பிக் கொண்டிருக்க (கெமி தவிர) இந்த விஷயத்தில் மாஸ்டரான பாரு வர மாட்டார் என்பதுதான் வருத்தத்தையும் மகிழ்ச்சியையும் ஒருசேர அளிக்கிறது. !

BB Tamil 9: "நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த பணம் கோடி ரூபாய் மாதிரி"- பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9: "கார் டாஸ்க் சம்பவம் டிராமாவா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு"- சாண்ட்ராவை சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9: "தவறான குற்றச்சாட்டை வச்சு, என் முதுகில குத்திருக்காங்க.!"- சாண்ட்ரா குறித்து திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!

விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொ... மேலும் பார்க்க

BB Tamil 9: `என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணிட்டேன்?"- சண்டைப்போட்ட ரம்யா; அழும் சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 94 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க