ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
'தீ பரவட்டும்' - 'நீதி பரவட்டும்' - தணிக்கை வாரியம் 'பராசக்தி' படத்திற்கு கொடுத்த கட்கள் என்னென்ன?
சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' நாளை திரைக்கு வருகிறது.
ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம்தான் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம்.
சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சான்றிதழ் கிடைக்காமல் தாமதமாகி வந்த நிலையில் இன்று தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

தணிக்கை வாரியம், யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்கு படத்தில் 25 கட்களை. ம்யூட்களை பரிந்துரைத்திருக்கிறது. அவை என்னென்ன? எவற்றை தணிக்கை வாரியம் மாற்றச் சொல்லியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
படத்தில் 'தீ பரவட்டும்' என்ற டேக் லைன் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷுவல்களில் 'நீதி பரவட்டும்' என மாற்ற பரிந்துரைத்திருக்கிறது தணிக்கை வாரியம்.
படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும் 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வாசகத்திற்குப் பதிலாக 'என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது' என மாற்றச் சொல்லியிருக்கிறார்கள்.

இது போல, இந்தி திணிப்புக்கு எதிரான சில வசனங்களையும் மியூட் செய்யவும், நீக்கவும் தணிக்கை வாரியம் பரிந்துரைத்திருக்கிறது.
அத்தோடு வன்முறை காட்சிகளிலும் சிலவற்றை குறைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
















