BB Tamil 9 Day 96: பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! அரோரா, விக்ரம், சபரி தூண்டின...
ஜனநாயகன்: `அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்' - தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவு!
விஜய் தன் கடைசி படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கத் தாமதமானதால் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது.
நேற்று முன்தினம் (ஜன. 7) இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில் ஜனவரி 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பி.டி ஆஷா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய சென்சார் போர்டின் நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தீர்ப்பின் விவரம் அப்டேட் செய்யப்படும்!
















