Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
USA: ``நான் சீன, ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால்.!" - அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேட்டி
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில், சுயாட்சி செய்துவரும் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என வல்லரசுகள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. கிரீன்லாந்தில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட தாது பொருள்களும், பணி உருகுவதால் ஏற்படும் கடல் வழித்தடமும் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லாந்தை சொந்தமாக்கிவிட வேண்டும் எனப் பலத் திட்டங்களை செயல்படுத்த முயன்றுவருகிறார்.
குறிப்பாக, கிரீன்லாந்தின் பொருளாதாரச் சூழலை சாதமாக்கி கிரீன்லாந்து குடிமக்களுக்கு பணம் கொடுப்பது, அல்லது டென்மார்க் மீது அரசியல் அழுத்தம் ஏற்படுத்தியோ, இராணுவம் மூலமோ அந்தப் பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தீவிரமாக செயல்படுகிறார் ட்ரம்ப். அதற்கு டென்மார்க், கிரீன்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஐ.நா-வும், "ஐ.நா-வின் கொள்கைக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் செயல்படுகிறார்" எனக் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், ``ரஷ்யாவும் சீனாவும் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க, அமெரிக்கா அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் உரிமையைப் பாதுகாக்க அந்த நாட்டின் மீது உரிமை இருக்க வேண்டும். இப்போது நாம் கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. எனவே, அதற்காக கிரீன்லாந்தை எளிதான வழியிலோ, அல்லது கடினமாக வழியிலோ அடைவோம்.

அமெரிக்கா ஏற்கனவே கிரீன்லாந்தில் ராணுவ தளம் வைத்துள்ளது, ஆனாலும் முழு உரிமையும் வேண்டும். நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை வாங்குவது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதது. கிரீன்லாந்தின் எல்லா இடங்களிலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களால் நிரம்பியுள்ளது. நான் சீன மக்களையும், ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால் கிரீன்லாந்தில் அவர்கள் எனக்கு அண்டை நாடாக இருப்பதை நான் விரும்பவில்லை, அது நடக்காது. எனவே, நேட்டோ இதை புரிந்துகொள்ள வேண்டும்." என்றார்.














