Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
மதுரோ–சதாம் ஹுசைன் சிறைபிடிப்பு: இரண்டுமே அமெரிக்கா செய்தது தான்; ஆனால், வித்தியாசம் உண்டு - எப்படி?
கடந்த ஜனவரி 3-ம் தேதி வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவிற்கு சிறைபிடித்து வரப்பட்டார்.
இதற்கு முன்பு, 2003-ம் ஆண்டு, ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படையினரால் ஈராக்கில் சிறைபிடிக்கப்பட்டார்.
இந்த இரண்டு சிறைபிடிப்புகளும் அமெரிக்கப் படையினரால் தான் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்று கூறுகிறார் ஐ.நா-வின் முன்னாள் அதிகாரியும், எழுத்தாளருமான ஆர்.கண்ணன்.
"சதாம் ஹூசைன் சிறைபிடிப்பை எடுத்துக்கொண்டால், அவரை அமெரிக்க ராணுவம் சிறைபிடிக்கும்போது, அவர் மறைந்து வாழ்ந்து வந்தார்.

அடுத்ததாக, ஈராக்கில் இருந்து சதாம் ஹுசைன் அமெரிக்காவிற்கு கொண்டுவரப்படவில்லை. சிறைபிடிப்பு முதல் வழக்கு வரை அனைத்துமே அவர் ஈராக்கில் இருந்தப்போது தான் நடந்தது.
அவருக்கு கிடைத்த தூக்கு தண்டனை ஈராக் சட்டத்தாலும்... ஈராக் நீதிமன்றத்தாலும் தரப்பட்டது ஆகும்.
ஆனால், மதுரோவின் சிறைபிடிப்பு முற்றிலும் வேறு. மதுரோ வெனிசுலாவில் இருந்து வெளியே அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நீதிமன்றத்தில் தான் அவர் அவருக்கு எதிரான வழக்கை சந்தித்து வருகிறார்". என்கிறார்.














