Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் - சிக்கிய மோசடி கும்பல்
பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்பித்து ஏராளமானோர் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளனர்.
அதாவது குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் சன்மானம் அல்லது சம்பளம் வழங்கப்படும் என்று இக்கும்பல் விளம்பரம் செய்து வருகிறது. அப்படியே சம்பந்தப்பட்ட பெண் கர்ப்பமாகாவிட்டாலும் பாதி பணம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வருகின்றனர்.
அதோடு மலிவு வட்டியில் கடன் கொடுக்கப்படும் என்றும் விளம்பரம் செய்தனர். பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்றவற்றில் இந்த விளம்பரம் வெளியானது. இலவச பாலியல் உறவு என்றும் இதனை மோசமாக விளம்பரம் செய்தனர்.
இதற்கு ஆசைப்பட்டு சம்பந்தப்பட்ட விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொள்பவர்களிடம் பதிவுக்கட்டணம் என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை முதலில் இக்கும்பல் வசூலித்து விடுகின்றனர். அதோடு அவர்களுக்கு ஏதாவது 4 முதல் 5 பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்கின்றனர்.

அந்த புகைப்படங்களில் எதாவது ஒன்றை சம்பந்தப்பட்ட நபரை தேர்வு செய்தவுடன், அதற்கு பதிவு கட்டணம் அனுப்பும்படி கூறுவது வழக்கம். அதன் பிறகு ஹோட்டல் கட்டணம் என்று அதற்கு குறிப்பிட்ட தொகையை வசூலித்து விடுகின்றனர். இப்படி எதாவது ஒரு காரணத்தை சொல்லி தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் இது மோசடி என்று உணரும் வரை அவரிடம் பணம் வசூலிக்கின்றனர். இது போன்ற மோசடி பீகார் மாநிலம் நவடா பகுதியில் நடந்துள்ளது.
விரைவில் லட்சங்களில் சம்பாதித்துவிடலாம் என்ற ஆசையில் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். இம்மோசடியில் பாதிக்கப்பட்ட பலர் இதை வெளியில் சொன்னால் தனக்குத்தான் பிரச்னை என்று கருதி அதிகமானோர் வெளியில் சொல்லாமல் இருக்கின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிலர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீஸார் இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தனர்.
இது பற்றி போலீஸ் அதிகாரி அபினவ் கூறுகையில், ''All India Pregnant Job திட்டத்தில் மோசடி செய்ததாக ரஞ்சன் குமார் மற்றும் ஒரு மைனர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து 4 மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நபர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் வேலையிலும் இக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது''என்று குறிப்பிட்டுள்ளார்.















