Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
'ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றது மறந்துவிட்டதா?' - விஜய்யை சாடிய சரத்குமார்
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், “சென்சார் போர்டு ‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் நிறுத்தவில்லை. இதற்கு முன்பும் பல்வேறு படங்களை நிறுத்தியுள்ளார்கள். அண்மையில் ‘தக்லைப்’ படத்திற்கு நடந்தது அனைவருக்கும் தெரியும்.

விஜய் படத்திற்கு ஏற்கனவே இப்படி நடந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இப்படி நடந்து, விஜய் கைகட்டி ரோட்டில் நின்றார் தானே. இதில் அரசியல் இல்லை. அனைத்தும் அரசியல் ரீதியாக நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
எனக்கும் ஆசை உள்ளது
சென்சார் போர்டு அந்த படம் சரியாக இல்லை என்று நினைக்கிறது. அரசியல்வாதிகள் யாரும் சென்சார் போர்டில் இடம்பெறவில்லை. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. அதேபோல எனக்கும் ஆசை உள்ளது. படம் எடுப்பது மிகவும் கடினம்.

ஆனால் அது சட்டத்துக்குட்பட்டு இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. எதை அரசியலாக வேண்டும், எதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதறியாமல் இருக்கிறார்கள். எது மக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது என்று நினைக்கிறார்களோ, அதை சென்சார் போர்டு கூர்ந்து கவனிக்கிறது.
நான் நடித்த ‘அடங்காதே’ படமும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை. அடங்காதே திரைப்படத்திற்கு அனைத்து நடிகர்களையும் குரல் கொடுக்க கூறுங்களேன் பராசக்தி திரைப்படமும் மறு ஆய்வுக்கு சென்று தான் வந்தது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை. பாஜக வெற்றி பெறுவதற்காக உழைப்பேன். என்னுடன் பயணித்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து, அவர்கள் அமைச்சரானால் மகிழ்ச்சியடைவேன்” என்றார்.














