செய்திகள் :

'கோட்டையில் ஓட்டை போட திமுக சம்மட்டியுடன் தயாராக உள்ளது!' - அதிமுகவினருக்கு எஸ்.பி. வேலுமணி வார்னிங்

post image

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் அனல் பறக்க தொடங்கிவிட்டன. கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக உள்ளனர்.

செந்தில் பாலாஜி

திமுக வெற்றிக்காக செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அண்மையில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்றது. விரைவில் திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு அரசு திட்டங்களை நிறைவேற்ற திமுக திட்டமிட்டுள்ளது. பல முக்கிய அறிவுப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்து கொங்கு மண்டலத்தில் தங்கள் செல்வாக்கை தக்கவைப்பதற்கு அதிமுக திட்டமிட்டுள்ளது. 

கோவை

பவர் சென்டர்

கொங்கு மண்டல அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முக்கிய பவர் சென்டர். கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய காரணமாக உள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “அதிமுக கூட்டணியில் இனி ஒவ்வொரு கட்சியாக வருவார்கள். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். ஒரு தோல்வியை சந்தித்தால் அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்.

எஸ்.பி வேலுமணி

ஒரு தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த தேர்தலில் திமுக தோற்று விடும். இது வரலாறு. அதேநேரத்தில் நாம் திமுகவை குறைத்து மதிப்பிட கூடாது. கோட்டையில் ஓட்டை போட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் சம்மட்டியுடன் தயாராக இருக்கிறார்கள்.

மாயை

கொலுசு மற்றும் ரூ.1,000 பணம் கொடுத்து ஏமாற்றுவார்கள். பூத்திற்கு சராசரியாக 50 ஓட்டுகள் மாற்றினால்  தொகுதிக்கு 35,000 ஓட்டுகள் வரும். தற்போது புதிது புதிதாக ஏதேதோ கட்சிகள் வந்துவிட்டன. இளைஞர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் மாயை.

தவெக தலைவர் விஜய்

யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பூத் வாரியாக கோயில், ஜமாத் கமிட்டி, குடியிருப்போர் சங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, இறங்கி வேலை பார்க்க வேண்டும். திமுக வேலை செய்யாதது போல இருக்கும். ஆனால் இறங்கி வேலை பார்ப்பார்கள்.

பெண்கள் மற்றும் இளைஞர்கள் துண்டு பிரசுரங்களுடன் வீடு வீடாக பிரசாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 70 தெருமுனை கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிரியை எந்த காலத்திலும் முந்த விடக்கூடாது. கோவைக்கு அத்தனை திட்டங்களையும் அதிமுக தான் நிறைவேற்றியுள்ளோம்.

வேலுமணி
வேலுமணி

திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று எடப்பாடியை முதல்வராக அமர வைக்க வேண்டும். அதுதான் நம் லட்சியம்” என்றார்.

`நீட்' எழுதி தேர்வான 50 மாணவர்கள்; கல்லூரிக்கு திடீர் அனுமதி ரத்து - கொண்டாடிய இந்துத்துவ அமைப்பினர்

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி (SMVDIME) செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 50 இடங்களுடன் எம்பிபிஎஸ்... மேலும் பார்க்க

மதுரோ–சதாம் ஹுசைன் சிறைபிடிப்பு: இரண்டுமே அமெரிக்கா செய்தது தான்; ஆனால், வித்தியாசம் உண்டு - எப்படி?

கடந்த ஜனவரி 3-ம் தேதி வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவிற்கு சிறைபிடித்து வரப்பட்டார். இதற்கு முன்பு, 2003-ம் ஆண்டு, ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படையினரால் ஈராக்கில் சிறைபிடிக்... மேலும் பார்க்க

தமிழே உயிரே : இந்தி ‘நெவர்’... இங்கிலீஷ் ‘எவர்’ - தமிழனின் வெற்றி! | மொழிப்போரின் வீர வரலாறு – 3

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 3‘குண்டுக்கஞ்சோம் வடவர்கள் கூட்டுக்கஞ்சோம் பலபல குண்டர்க்காம் செய்தித்தாள் கூற்றுக்கஞ்சோம் அண்டிற்றா இந்நாட்டில் அயலானின் இந்திம... மேலும் பார்க்க

"தூய்மைப் பணியாளர்கள் போராடினால் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும்" - போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னைக்குள் தொடர் போராட்டங்களை தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று முதல் (10.01.26) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அரு... மேலும் பார்க்க

கடலூர்: தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0; குவிந்த தொண்டர்கள் | Photo Album

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மா... மேலும் பார்க்க

USA: ``நான் சீன, ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால்.!" - அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேட்டி

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில், சுயாட்சி செய்துவரும் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என வல்லரசுகள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. கிரீன்லாந்தில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட தாது பொருள்களும், பணி உ... மேலும் பார்க்க