ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
'பராசக்திக்கு U/A சான்றிதழ்!' - திட்டமிட்டப்படி நாளை ரிலீஸ்!
பொங்கலை முன்னிட்டு நாளை வெளியாகவிருக்கும் பராசக்தி படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கியிருக்கிறது தணிக்கைத்துறை.

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தயாராகியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் ஒரு சில இடங்களில் மாற்றம் செய்யுமாறு கோரியிருந்தனர். இதனால் சான்றிதழ் கிடைப்பதில் தாமதமானது.
ஏற்கனவே ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழ் கிடைக்காவிடில் பராசக்தி படத்தின் ரிலீஸூம் தள்ளிப்போகுமோ எனும் சந்தேகம் எழுந்திருந்தது. இயக்குனர் சுதா கொங்காரா உட்பட படக்குழுவினர் தணிக்கை சான்றிதழ் பெறும் வேலையில் தீவிரமாக இறங்கியிருந்தனர். இதனைத் தொடர்ந்து பராசக்தி படத்துக்கு U/A சான்றிதழை தணிக்கைக் குழு இப்போது வழங்கியிருக்கிறது.

சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்ட நிலையில், படத்துக்கான டிக்கெட் புக்கிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. திட்டமிட்டப்படியே படமும் நாளை வெளியாகவிருக்கிறது.
















