செய்திகள் :

Maduro: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் பக்தர்; இந்தியாவுடனான வெனிசுலா அதிபரின் ஆன்மிக தொடர்பு!

post image

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவர் மனைவி சிலியா புளோரஸ் தம்பதியை அமெரிக்க படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தி சிறைபிடித்துச் சென்றுள்ளன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் போதைப்பொருள் தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டி இருக்கிறார். தீவிர கத்தோலிக்க கிறிஸ்தவரான நிகோலஸ், இந்து மதத்தின் மீது பற்று வைத்திருந்தார். குறிப்பாக சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தராக நிகோலஸும், அவரின் மனைவியும் விளங்கினர்.

20 ஆண்டுகளுக்கு முன்பே சத்ய சாய்பாபாவிற்கு நிகோலஸ் மதுரோ அறிமுகமாகி இருக்கிறார். 2005-ம் ஆண்டுக்கு முன்பு சிலியா, அப்போது தனது காதலனாக விளங்கிய நிகோலஸ் மதுரோவை சத்ய சாய்பாபாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

நிகோலஸ் தம்பதி

நிகோலஸ் அரசியலில் பெரிய இடத்தை அடையவேண்டும் என்பதற்காக இத்தம்பதி 2005ம் ஆண்டு தனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு வந்து புட்டபர்த்தி பிரசாந்தி நிலைய ஆசிரமத்திற்குச் சென்று சாய்பாபாவை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசி வாழ்த்து பெற்றுள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது நிகோலஸ் மற்றும் அவரின் காதலி சிலியா புளோரஸ் ஆகியோர் சத்ய சாய்பாபா காலடியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம், இப்போது வெளியாகி இருக்கிறது.

அன்றிலிருந்து புட்டப்பர்த்தி சாய்பாபா மீது நிகோலஸ் மிகுந்த மரியாதை வைத்துள்ளார். அதோடு தனது அரண்மனையில் உள்ள தனிப்பட்ட அலுவலகத்தில் சைமன் பொலிவர் மற்றும் ஹ்யூகோ சாவேஸ் ஆகியோரின் படங்களுடன் சத்ய சாய்பாபாவின் உருவப்படம் முக்கியமாக தொங்கவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகோலஸ்-சிலியா (அமர்ந்துள்ளனர்)

2011ம் ஆண்டு சாய்பாபாவின் மரணத்தைத் தொடர்ந்து, வெனிசுலாவின் வெளியுறவு அமைச்சராக இருந்த மதுரோ, தேசிய பாராளுமன்றத்தில் அதிகாரபூர்வ இரங்கல் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதோடு சத்ய சாய்பாபாவின் ஆன்மிகப் பங்களிப்பை முறையாக அங்கீகரிப்பதற்காக அவரது இறந்தநாளை தேசிய துக்க நாளாக அறிவித்தார்.

மதுரோவின் ஆட்சியில், பல வெளிநாட்டு ஆன்மிக அமைப்புகள் வெளியேற்றப்பட்டபோதிலும், வெனிசுலாவில் சத்ய சாய் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. வெனிசுலா இப்போது லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய சாய்பாபா பக்தர் சமூகங்களில் ஒன்றாக விளங்குகிறது.

1974 ஆம் ஆண்டிலிருந்து இங்கு சத்ய சாய்பாபா அமைப்பு செயல்பட்டு வருகிறது. அமெரிக்க படையால் பிடிபடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மதுரோ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு விழாவை பகிரங்கமாக நினைவு கூர்ந்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் சத்ய சாய்பாபாவை "ஒளியின் மனிதர்" என்று விவரித்தார். அவர் தனது அறிக்கையில், ''நான் எப்போதும் அவரை நினைவில் கொள்கிறேன். இந்த சிறந்த ஆசிரியரின் ஞானம் தொடர்ந்து எங்களுக்கு அறிவூட்டட்டும்" என்று அவர் கூறினார். மதுரோவின் அரசியல் சர்ச்சைகள் அதிகரித்தாலும், சத்ய சாய்பாபாவுடனான அவரது ஆன்மிக தொடர்பு அவரது பொது வாழ்க்கையுடன் அமைதியாக தொடர்ந்தது.

பஸ் டிரைவராக இருந்து உலக தலைவரான மதுரோ

1962ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஒரு தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த மதுரோ, 1990 களின் முற்பகுதியில் பேருந்து ஓட்டுநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியில் தோல்வியடைந்த ஹ்யூகோ சாவேஸின் ஆரம்பகால ஆதரவாளராக மதுரோ செயல்பட்டார். 2013 இல் சாவேஸின் மரணத்திற்குப் பிறகு மதுரோ தேசிய பாராளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் வெளியுறவு அமைச்சராகவும், இறுதியில் ஜனாதிபதியாகவும், அரசியல் தரவரிசையில் படிப்படியாக உயர்ந்தார். அவரது பதவிக்காலத்தில் பொருளாதார சரிவு, பணவீக்கம், உணவுப் பற்றாக்குறை மற்றும் நீடித்த அரசியல் அமைதியின்மை போன்றவற்றால் வெனிசுலா திண்டாடியது.

2013 இல் பணவீக்கம் அதிகரித்ததால், மதுரோ வீட்டு உபயோகப் பொருள்களை விற்கும் கடைகளை ஆக்கிரமிக்க ராணுவத்தை அனுப்பினார். 2018 ஆம் ஆண்டில், கராகஸ் அவென்யூவில் அவர் உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் வெடிபொருள்கள் நிறைந்த ட்ரோன்களை அனுப்பி தீவிரவாதிகள் படுகொலை செய்ய முயன்றனர்.

அவரது வாழ்க்கை முழுவதும், சிலியா புளோரஸ் வெனிசுலாவின் அதிகார அமைப்பில் ஒரு முக்கிய நபராக இருந்தார். அட்டர்னி ஜெனரல் மற்றும் பாராளுமன்றத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார்.

மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். தன் மனைவியின் உயிரைக் காக்கப் போர... மேலும் பார்க்க

10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!

ஹரியானாவில் ஒரு தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அங்குள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் உஷனா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(38). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின... மேலும் பார்க்க

ரூ.5 கோடி மோசடி புகார்; மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற பிக் பாஸ் பிரபலம் மும்பை விமான நிலையத்தில் கைது

பிக் பாஸ் பிரபலமான ஜெய் துதானே, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தனது நீண்ட நாள் காதலி ஹர்ஷலா பாட்டீலை திருமணம் செய்து கொண்டார். அவர் தனது மனைவி, சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோருடன் தேனிலவுக்கு ... மேலும் பார்க்க

'ஓர் ஆண்டு வாழ்க்கை; 10 ஆண்டுக்கால வழக்கு; ரூ.1000 கோடி ஜீவனாம்சம்' - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெய்தேவ் ஷெராப்பிற்குக் கடந்த 2004ம் ஆண்டு பூனம் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்திருமணம் ஓர் ஆண்டு கூட நிலைக்கவில்லை.2005ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். 2015ம் ஆண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தலில் பணம், அதிகாரபலம்? - தேர்தல் நடக்கும் முன்பே பா.ஜ.க கூட்டணி 66 இடங்களில் வெற்றி

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலைதான் வெளியானது. அதேசமயம் தேர்தல் நடக்கும் முன்பு பா.ஜ.க மற்றும் அ... மேலும் பார்க்க

மருமகளை வரவேற்க தயாராகும் பிரியங்கா காந்தி - ரைஹானுக்கு நீண்டகால காதல் தோழியுடன் நிச்சயதார்த்தம்!

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேரா தம்பதியின் மகன் ரைஹான் வதேராவிற்கு அவரது நீண்ட கால தோழி அவிவா பைக் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க