செய்திகள் :

`'பராசக்தி' வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி' ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

post image

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.

இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அனைவரும் அறிந்ததே.

அரசியலில் தி.மு.க-வுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்துள்ள விஜய், சினிமாவில் தனது இடத்துக்கு அடுத்து `சிவகார்த்திகேயன்' எனச் சுட்டிக்காட்டியதாக வெளியான படக் காட்சியையும் பார்த்திருப்போம்.

ஆனால் முதல்வர் குடும்பத்துக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் சிவகார்த்திகேயனை விஜய்யுடன் மோதவிட்டிருக்கிறது.

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

இந்தச் சூழலில் 'பராசக்தி' வெளியாகும் அதே நாளில் 'மஹா சக்தி' என்கிற குறும்படத்தை வெளியிட இருக்கிறார் சின்னத்திரை நடிகரும் பா.ஜ.க ஆதரவாளருமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன். சனாதனக்கு எதிராகப் பேசினார் என கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்து, அது காவல் துறை புகார் வரை சென்றதே, அந்தப் பஞ்சாயத்துக்கு காரணமான அவரேதான். குறும்படம் வெளியாவது, ஹெச்.ராஜா நடிப்பில் வெளியான படம் ரிலீஸ் ஆனதே அதே தாமரை சேனலில்தானாம்.

'என்னங்க இது' என அவரிடமே கேட்டோம்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம்

''ஏட்டிக்குப் போட்டி பண்றதெல்லாம் திமுக-காரங்க வேலை. நாங்க வரலாற்றுல என்ன நடந்ததோ அதை மட்டுமே சொல்வேம். 'இந்தி எதிர்ப்பு'ங்கிற ஒரு வார்த்தையை வச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கும் மேலா தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கிட்டு இருக்கிறாங்க. இப்ப ஏ.ஐ., யுகம். இப்ப இந்த வாதமெல்லாம் எடுபடாது. இனி வரும் தேர்தல்களில் திமுக-வின் இந்தக் கோஷம் எடுபடாது.

அன்னைக்கு நடந்த போராட்டமும் உண்மையிலேயே மொழி மீது அக்கறை கொண்டு நடந்ததில்லை. மொழி வெறியை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தூண்டிவிட்டு, அந்த உணர்ச்சியை தங்களது அரசியலுக்குப் பயன்படுத்திக் கிட்டாங்க. கேட்டா, 'நாங்க இந்தியை எதிர்க்கலை, திணிப்பைத்தான் எதிர்க்குறோம்'னு சப்பைக் கட்டு கட்டுவாங்க. எதுவும் அழுத்தமா பதிகிற மாணவப் பருவத்துல ஒரு மொழி மீது வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டுட்டு, பிறகு 'படிக்கறவங்க படிச்சுக்கட்டும்'னு சொன்னா, யார்தான் அந்த மொழியைப் படிக்க ஆர்வம் காட்டுவாங்க?

தொண்டர்கள் மத்தியில நரம்பு புடைக்க இப்படிப் பேசற திமுக தலைவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கிறதை மட்டும் தடுக்கவே மாட்டாங்க. தயாநிதி மாறன், கனிமொழிக்கெல்லாம் இந்தி சரளமா வரும். அதைக் கேட்டா மழுப்புவாங்க.

Parasakthi - பராசக்தி
Parasakthi - பராசக்தி

இந்த வண்டவாளங்களையெல்லாம் புட்டு புட்டு வைக்கணும்னுதான் இப்படியொரு குறும்படம்.

இந்தி எதிர்ப்பு போராட்டம்கிற பேர்ல திமுக நடத்திய பித்தலாட்டங்களை மக்களுக்குப் படம் பிடிச்சுக் காட்டியிருக்கோம்.

இதுல நடிச்சிருக்கிற யாருமே நடிகர்கள் கிடையாது. 'பராசக்தி' வெளியாகுற அதேநாள் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம்" என்கிறார் ரவிச்சந்திரன்.

BB Tamil 9: `என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணிட்டேன்?"- சண்டைப்போட்ட ரம்யா; அழும் சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 94 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 94: பற்றிக்கொண்ட பழைய கதை; உளவியல் போரில் முன்னாள், இந்நாள் போட்டியாளர்கள்! டைட்டில்?

‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன்.‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க போகணும்’ என்கிற மாதிர... மேலும் பார்க்க

BB 9: "என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?"- விக்ரமைச் சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

'மகாநதி' சீரியலில் கம்ருதீன் மீண்டும் வர வாய்ப்புள்ளதா? - சீரியல் தரப்பின் பதில் இதுதான்!

'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கம்ருதீன் முன்பு நடித்து வந்த 'மகாநதி' சீரியலில் இருந்தும் வெளியேற்றப் பட்டுவிட்டார்'கம்ருதீன் குறித்து இப்படியொரு தகவல் இர... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 93: ஈகோ சண்டை; சாண்ட்ராவை கிண்டலடித்த வியானா - கடைசி வரை நெகட்டிவிட்டிதானா?

முந்தைய சீசன்களில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும். சண்டை நடந்தால் கூட அது இயல்பாக நிகழும்.ஆனால் இந்த முறை உள்ளே அனுப்பும் போதே ‘நீங்க பயங்கரமா கொளுத்திப் போடணும்’ என்று சொல்ல... மேலும் பார்க்க