செய்திகள் :

BB Tamil 9 Day 93: ஈகோ சண்டை; சாண்ட்ராவை கிண்டலடித்த வியானா - கடைசி வரை நெகட்டிவிட்டிதானா?

post image

முந்தைய சீசன்களில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும். சண்டை நடந்தால் கூட அது இயல்பாக நிகழும்.

ஆனால் இந்த முறை உள்ளே அனுப்பும் போதே ‘நீங்க பயங்கரமா கொளுத்திப் போடணும்’ என்று சொல்லி அனுப்பியிருப்பார்கள் போல. வருகிறவர்கள் டெரரான பட்டாசாக கொளுத்துகிறார்கள். நிறைய அகங்கார உரசல் நடக்கிறது. 

BB Tamil 9
BB Tamil 9

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 93


‘காசு பணம் துட்டு மணி’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. ‘நல்லவாயன் சம்பாதிச்சத நாரவாயன் தின்னுறான்’ என்கிற வரி வரும் போது, காமிரா சான்ட்ராவை காட்டியது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும். 

என்ன இருந்தாலும் வியானா கெஸ்ட். வீட்டில் உள்ளவர்கள்தான் பணிகளை பொறுப்பேற்று செய்ய வேண்டும். ‘தல’ என்று யாரும் இல்லாத காரணத்தால் (அப்படியே இருந்துட்டாலும்…!) பணிகள் சுணங்கிக் கிடக்கின்றன. 

“பாத்திரங்கள்லாம் கழுவாம இருக்கு. நான் சமைக்கறேன்.. யாராவது அதை செய்ய வாங்க’ என்று வியானா பொதுவாக சொல்ல “நீ போய் பாத்திரம் கழுவு. நாங்க சமையல் டீம்ல இருக்கோம்” என்று சான்ட்ரா அலட்சியமாக சொல்ல, வியானாவிற்கு கோபம் வந்தது. “உங்க டோன் நல்லால்ல’ என்று சொல்லி விட்டு உள்ளே வந்து திவ்யாவுடன் புறணி பேசத் துவங்கினார். 

கிறிஸ்டோபர் மூஞ்சை வெச்சிக்கிட்டு’ - சான்ட்ராவை கிண்டலடித்த வியானா


“ஒரே டாக்ஸிக்கா இருக்கு. இதுக்கு நான் வீட்லயே இருந்திருக்கலாம். ஊரை ஏமாத்தி ஒவ்வொரு வாரமும் ஒருத்தரை டார்கெட் பண்ணி வெளிய அனுப்பிச்சாங்க.. இவங்களே என்னை நாமினேட் பண்ணிட்டு அப்புறம் வந்து விசாரிச்சாங்க.. கிறிஸ்டோபர் மூஞ்சை வெச்சிக்கிட்டு” என்று சான்ட்ராவைப் பற்றி புலம்பி தீர்த்தார் வியானா. இதையெல்லாம் சான்ட்ராவிடமே சொல்லியிருக்கலாம். (அதெல்லாம் இருக்கட்டும், யார் அந்த கிறிஸ்டோபர்!)


‘வந்துன்டான்யா.. வந்துன்டான்யா..’ என்பது மாதிரி திவாகரின் என்ட்ரி. கூடவே பிரவீன் காந்தி. வந்தவுடனேயே அலப்பறையை ஆரம்பித்து விட்ட திவாகரை “ரீல்ஸ் போட ஆரம்பிச்சாச்சா?” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். “கவுண்டமணி கையில் செந்திலை ஒப்படைக்கிறேன்” என்ற பிரவீன்காந்தி, வினோத்தின் கைகளில் திவாகரை ஒப்படைக்க “ஹலோ.. மெய்யழகன்ல வர்ற அர்விந்த் சாமி - கார்த்தி மாதிரி’ என்று கெத்து விடாமல் சொன்னார் திவாகர். 

BB Tamil 9
BB Tamil 9

நீண்ட நாட்களாக கேட்காமல் இருந்த அந்த குரலை கேட்கும்படியாகி விட்டது. “தமிழக மக்களே.. உங்களின் நடிப்….. பு…. அரக்கன்’ என்று கைகளை கத்தி வெட்டுவது மாதிரி வைத்துக் கொண்டு ஆரம்பித்தார் திவாகர். “ரீல்ஸ் போடுவே காமிரா முன்னாடி. அதனால உடைஞ்சது பல கண்ணாடி’ என்கிற மாதிரி ரைமிங்கில் கிண்டலடித்தார் திவாகர். 

“வெளியே ஃபுல்லா.. பிரமோல நாமதான்.. கலக்கிட்டம்ல” என்று வினோத்திடம் திவாகர் வாயை விட “எனக்கு மட்டும் ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் சொல்லி அனுப்பிச்சாங்க.. நீங்க மட்டும் எல்லாத்தையும் சொல்றீங்க” என்று வியானா சிணுங்க, பிக் பாஸ் உள்ளே வந்தார். “வெளியுலக விஷயங்களை பேசினா வெட்டிடுவேன். அப்புறம் மெயின் டோர்தான்” என்று வார்னிங் தர, கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டார் திவாகர். “அப்புறம்.. வெளில என்ன நடக்குது?” என்று சபரி வேண்டுமென்றெ வாயைப் பிடுங்க முயல ‘அது தூத்துக்குடியிலோ.. திருநவேலியோ’ என்கிற மோடிற்கு சென்றார் திவாகர். 

பிரவீன்ராஜிற்கும் வினோத்திற்கும் இடையே நிழல் யுத்தம்


சம்பாதித்த பணத்தை (சிகரெட்டால்) ஊதியே கோட்டை விட்டவர்கள் பலர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் ஊதினால் பணம் கிடைக்கும். சிவப்பு பந்துகளும் மஞ்சள் பந்துகளும் கலந்திருக்கும். அவற்றில் சிவப்பு பந்துகளை மட்டும் ஊதி விட்டு மஞ்சள் பந்தை தக்க வைத்தால், ஒவ்வொரு பந்துக்கும் ரூ.10000

ஆனால் இந்த டாஸ்க் அத்தனை எளிதானதாக இல்லை. வினோத்தும் திவ்யாவும் மட்டுமே ஆளுக்கு ஒரு பந்தை தக்க வைத்து இருபதாயிரம் ரூபாய் சம்பாதித்தார்கள். 

BB Tamil 9
BB Tamil 9

பிரவீன்ராஜ் என்ட்ரி. பழைய பகையை தீர்ப்பதற்கான மெயின் அஜெண்டாவுடன் வந்திருக்கிறார் போலிருக்கிறது. அல்லது பிக் பாஸ் தந்த டிரையினிங் அப்படியோ, என்னவோ. ‘சம்பவம் பண்றதுக்காகத்தான் வந்தேன்’ என்று பில்டப் தந்தார். 

பிரவீன்ராஜைப் பார்த்தவுடன் ஆவலாக கட்டிப் பிடித்தார் வினோத். ஆனால் இருவருக்கும் பயங்கரமாக முட்டிக் கொண்டது. பழைய வாய்க்கா வரப்பு தகராறுகளை வைத்துக் கொண்டு ‘டேய்.. உன்னை தெரியுண்டா.. எனக்கு.. நீ மட்டு ஒழுங்கா?” என்கிற ரேஞ்சில் சிரித்துக் கொண்டே பயங்கரமாக குத்திக் கொண்டார்கள். 

மூன்று லட்சத்துடன் ஆரம்பித்திருக்கும் பணப்பெட்டி - யார் எடுப்பார்கள்?


“நீ தொன்னூறு நாளைக்கு மேலே இருந்தத.. நான் முப்பத்து மூணு நாள்ல சாதிச்சிட்டேன்” என்று வினோத்திடம் ஒழுங்கு காட்டினார் பிரவீன். “இதர் ஆவோ பாய்.. ஜாவ் ஜாவ்’ என்று அரைகுறை இந்தியில் சிரித்து அந்த வெறுப்பை மறைத்துக் கொண்டார் வினோத். 


பிரவீன் வெறுப்பேற்றியது வினோத்தை நிறைய பாதித்திருக்கும் போல. இன்று முழுவதும் உக்கிரமான மோடில் இருந்தார். ஆனால் சிரிப்பால் மறைத்துக் கொண்டார். சபரி சாதாரணமாக ஏதோ சொன்னதற்கு வினோத் எரிந்து விழ “நான் என்னப்பா பண்ணேன்?” என்று நொந்து போனார் சபரி. இதற்கான காரணத்தை சரியாக decode செய்து சொன்னார் அரோரா. 

BB Tamil 9
BB Tamil 9

ஊதிய பந்துகளை இப்போது உருட்டி நகர்த்த வேண்டும். பணப்பெட்டிக்கான அடுத்த டாஸ்க். “உங்களை என்கரேஜ் பண்ண நாங்களும் வரோம்” என்று அடம்பிடித்த திவாகர், ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்கு வந்து.. ‘என்னப்பா.. விக்ரம்.. இப்படி ஆகிடுச்சே.. என்னா சபரி.. என்னத்த ஆடற நீ” என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். 

‘வாடா.. செல்லம் வந்துடுமா” என்று அரோ கொஞ்சியதைக் கேட்டு பந்தும் மனம் இளகி சரியாக நின்று பத்தாயிரம் சம்பாதித்து கொடுத்தது. இந்த டாஸ்க்கின் மூலம் லம்ப்பாக 140000 கிடைத்தது. ஆக மொத்தம் 335000 பணம் சேர்ந்திருக்கிறது. ‘பணப்பெட்டி எடுப்பவர்கள் எடுக்கலாம்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் பிக் பாஸ். பணம் இன்னமும் உயரும் போது யார் எடுப்பார்கள் என்று பார்க்க வேண்டும்.

ஒருவேளை விக்ரம்?!

திவாகரும் வினோத்தும் போட்ட ஈகோ சண்டை

பிரவீன்ராஜூடன் மல்லுக்கட்டியது போதாதென்று, அடுத்தபடியாக திவாகருடன் நிழல் யுத்தத்தை நிகழ்த்த வேண்டிய சூழல் வினோத்திற்கு ஏற்பட்டது. இனிப்பு உருண்டையை ‘சொய்ங் உண்டை’ என்று சென்னை வழக்கில் சொல்வார்கள் என்று வினோத் சொல்ல அதைக் கேட்டு திவாகரும் திவ்யாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். 


‘பிரெண்ட்ஸ்’ படத்தின் காமெடி காட்சி மாதிரி அனைவரும் சிரித்து முடித்தபிறகும் விஜய் இன்னமும் சிரிப்பதைப் போல திவாகர் விடாமல் சிரித்துக் கொண்டே இருக்க, வினோத் காண்டாகி விட்டார். “எங்க ஊர்ல அப்பம்ன்னு சொல்வோம்” என்று மதுரையை திவாகர் இழுக்க “அப்ப சொல்றது இருக்கட்டும். இப்ப என்ன சொல்வீங்க” என்று பதில் காமெடியை வினோத் சொல்லி விட்டு விழுந்து விழுந்து வம்படியாக சிரித்தார். திவாகரை பழி வாங்குகிறாராம். 

BB Tamil 9
BB Tamil 9

இருவரும் கிச்சு கிச்சு மூட்டி விளையாட கோபத்தில் நைசாக காலை வைத்து உதைத்தார் வினோத். திவாகருக்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இரவு நேரத்து உணவில் “கொஞ்சம் கூட மெச்சூரிட்டியே இல்ல” என்று வியானாவிடம் புலம்ப “அப்பவே சொல்ல வேண்டியதுதானே.. நான் வேணும்ன்ட்டு பண்ணலை. கிச்சு கிச்சு தாங்காம அசைஞ்சப்ப கால் பட்டுது” என்று சமாளித்தார் வினோத். 

“வந்தமா சாப்பிட்டமா போனமான்னு இருக்கணும். இருக்கப் போறது இன்னமும் ரெண்டு வாரம். ஏழரையைக் கூட்டாத” என்று வினோத் எச்சரிக்க “இது ஒண்ணும் உங்க வீடு இல்ல வினோத் சார்” என்று மல்லுக்கட்டினார் திவாகர். சூப்பர் டீலக்ஸ் வீட்டில், வியானா இருக்கும் இடத்தில்தான் தூங்குவேன் என்று திவாகர் அடம்பிடிக்க “அங்க பிரவீன்காந்தி கர்ச்சிப் போட்டிருக்காரு’ என்று திவாகரின் பெட்டியை வினோத் வெளியே எடுத்துப் போட இன்னொரு சண்டை.

BB Tamil 9
BB Tamil 9

விருந்தினர்களின் எண்ணிக்கை கூடும் போது இது போன்ற நிழல் யுத்தங்களும் அகங்கார உரசல்களும் அதிகரிக்கும் போல் இருக்கிறது. ஆக கடைசி வரை நெகட்டிவிட்டிதான் இந்த சீசனின் முக்கியமான அடையாளம் போல.!

BB Tamil 9: `என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணிட்டேன்?"- சண்டைப்போட்ட ரம்யா; அழும் சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 94 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 94: பற்றிக்கொண்ட பழைய கதை; உளவியல் போரில் முன்னாள், இந்நாள் போட்டியாளர்கள்! டைட்டில்?

‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன்.‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க போகணும்’ என்கிற மாதிர... மேலும் பார்க்க

`'பராசக்தி' வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி' ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அன... மேலும் பார்க்க

BB 9: "என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?"- விக்ரமைச் சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

'மகாநதி' சீரியலில் கம்ருதீன் மீண்டும் வர வாய்ப்புள்ளதா? - சீரியல் தரப்பின் பதில் இதுதான்!

'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கம்ருதீன் முன்பு நடித்து வந்த 'மகாநதி' சீரியலில் இருந்தும் வெளியேற்றப் பட்டுவிட்டார்'கம்ருதீன் குறித்து இப்படியொரு தகவல் இர... மேலும் பார்க்க