ஜனநாயகன்: `யு/ஏ சான்றிதழ் வழங்குக' - உயர் நீதிமன்றம்; உடனடி மேல்முறையீடு! தீர்ப்...
"ஆட்சியில் பங்கு என விஜய் ஆஃபர் போட்டு காத்துக்கொண்டிருக்கிறார்" - திருமாவளவன்
திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தவெக கட்சி கூட்டணிக்காக அனைத்து கதவுகளையும் திறந்து வைத்திருக்கிறது.
தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல, ஆட்சியில் பங்கு தருகிறோம் என ஆஃபர் கொடுக்கிறது.

இதுதான் தற்போது நடிகர் விஜய் தலைமையிலான கட்சியின் நிலைமை. விஜய் பெரும் மக்கள் செல்வாக்கு உள்ள நடிகர், அவர் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நம்பக்கூடியவர்.
ஆனால் அவர் சட்டமன்றத் தேர்தலுக்காக ஆஃபர் போட்டுக் காத்திருக்கிறார். அங்கேயும் இன்னும் ஒரு கூட்டணி அமையவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.
அதேபோல ஏற்கெனவே கூட்டணியில் இருந்த பாமக தற்போது மீண்டும் இணைந்ததைக் காட்டி மார்தட்டிக் கொள்கிறது அதிமுக.
புதிதாக வேறு எந்த ஒரு கட்சியும் அங்கு சேரவில்லை. பாமக-விலேயே இன்னும் உட்கட்சி மோதல் தீர்ந்தபாடில்லை.
ஆனால், பாமக எங்கள் அணிக்கு வந்துவிட்டது என்கிறது அதிமுக. அதிமுக - பாஜக தலைமையில் கூட்டணி அமைவதற்கே திண்டாட்டமான நிலை.
ஆனால் ஊடகங்கள் இதையெல்லாம் மறைத்து திமுக கூட்டணி பலவீனமாக உள்ளதுபோல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.

அதுவும் சங் பரிவார்களின் செயல் திட்டம்தான். தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளார்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று பேசியிருக்கிறார்.
















