செய்திகள் :

'மகாநதி' சீரியலில் கம்ருதீன் மீண்டும் வர வாய்ப்புள்ளதா? - சீரியல் தரப்பின் பதில் இதுதான்!

post image

'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கம்ருதீன் முன்பு நடித்து வந்த 'மகாநதி' சீரியலில் இருந்தும் வெளியேற்றப் பட்டுவிட்டார்'

கம்ருதீன் குறித்து இப்படியொரு தகவல் இரண்டு மூன்று தினங்களாக பரவி வருகிறது.

ஒரு சம்பவம் நடந்தால் அதையொட்டிய கிளைத் தகவல்கள் தாறுமாறாகப் பரவுதை இந்த டிஜிட்டல் யுகத்தில் தடுக்க இயலாது.

எனவே உண்மை நிலவரம் தெரிய 'மகாநதி' சீரியலின் யூனிட்டிலேயே பேசினோம்.

Mahanadhi Serial

''அந்த சீரியலில் கம்ருதீன் நடிச்சிட்டிருந்தார். அவருடைய கேரக்டரை முக்கியமான ஒரு துணைக் கதாபாத்திரம்னு சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்க அவருக்கு வாய்ப்பு வந்த போது 'எங்க யூனிட்ல இருந்து ஒருத்தர் போறதுல‌ எங்களுக்கு சந்தோஷம்கிறதால உற்சாகமா அனுப்பி வச்சோம்.

அந்த ஷோவுல அவர் எப்படி ஆடுவார், எவ்வளவு நாள் இருப்பார்ங்கிறதெல்லாம் யாருக்கும் தெரியாதுங்கிறதால அவருடைய கேரக்டரை தற்காலிகமா வெளிநாடு போற மாதிரி காட்டியிருப்போம்.

அவர் அந்த நிகழ்ச்சியில் நல்லா விளையாண்டதால ஓரிரு வாரத்துல திரும்ப வாய்ப்பில்லைனு தெரிஞ்சது. அதனால சேனல் தரப்புல டிஸ்கஸ் பண்ணினப்ப, 'ஆள் மாத்தறதா இருந்தா மாத்திக்கோங்க'னு கூடச் சொல்லிட்டாங்க. ஆனாலும் வேற ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்யாம வெளிநாட்டுல செட்டில் அகிட்ட மாதிரி காமிச்சு கேரக்டர் முடிக்கப்பட்டுச்சு.

கமருதீன்

அதனால 'பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டது போல 'மகாநதி' தொடரிலிருந்தும் அவர் இப்பதான் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்'ங்கிற ரீதியில தகவல் பரவுறது. உண்மை நிலை இதுதான்' என்றார்கள் அவர்கள்.

'ஒருவேளை மீண்டும் தொடருக்குள் கம்ருதீன் வர வாய்ப்புள்ளதா' என்ற கேள்விக்கு, 'இப்ப கதை வேற ட்ராக் மாறி போயிட்டிருக்கறதால, அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை' என்பதே அவர்களின் பதில். எனினும் ரெட் கார்டுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்கிறார்கள்.!

BB Tamil 9: `என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணிட்டேன்?"- சண்டைப்போட்ட ரம்யா; அழும் சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 94 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 94: பற்றிக்கொண்ட பழைய கதை; உளவியல் போரில் முன்னாள், இந்நாள் போட்டியாளர்கள்! டைட்டில்?

‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன்.‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க போகணும்’ என்கிற மாதிர... மேலும் பார்க்க

`'பராசக்தி' வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி' ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அன... மேலும் பார்க்க

BB 9: "என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?"- விக்ரமைச் சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 93: ஈகோ சண்டை; சாண்ட்ராவை கிண்டலடித்த வியானா - கடைசி வரை நெகட்டிவிட்டிதானா?

முந்தைய சீசன்களில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும். சண்டை நடந்தால் கூட அது இயல்பாக நிகழும்.ஆனால் இந்த முறை உள்ளே அனுப்பும் போதே ‘நீங்க பயங்கரமா கொளுத்திப் போடணும்’ என்று சொல்ல... மேலும் பார்க்க