செய்திகள் :

'அப்செட் அமித் ஷா' ; எடப்பாடியின் கறார் பேட்டியும் மாபெரும் சவாலும்! - டெல்லி விசிட்டின் பின்னணி

post image

50 ஆண்டுகளாக தேர்தலில் கைகொடுக்கும் `பிரம்மாஸ்திரம்' - எடப்பாடி ஸ்கெட்ச்; சமாளிப்பாரா ஸ்டாலின்?'ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா மூவரையும் கட்சியில் சேர்க்க முடியாது. எத்தனையோ தடவை சொல்லிட்டேன். டெல்லிலையும் நான் சொல்லிட்டேன்' என அமித் ஷாவை சந்தித்த பிறகு டெல்லி விமானநிலையத்தில் கறாராக பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. டெல்லி சந்திப்பில் நடந்தது என்ன? அதன்வழி எடப்பாடிக்கு உருவாகியிருக்கும் சவால்கள் என்னென்ன?

எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா
எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா

கடந்த வாரத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து வைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்திருந்தார். இரண்டு நாட்களாக தமிழகத்தில் முகாமிட்டிருந்த அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி அமித் ஷாவிடம் அப்பாய்ண்ட்மெண்டே வாங்கவில்லை.

சேலம், கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டங்களை காரணம் காட்டி சந்திப்பை தவிர்த்துவிட்டார். எதிர்பார்த்த சந்திப்பு நிகழாததால் அப்செட்டாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் அமித் ஷா. இந்த விஷயம் எடப்பாடி தரப்புக்கு சொல்லப்பட்ட பிறகுதான், உடனடியாக விமானம் ஏறி டெல்லி பறந்திருக்கிறார் எடப்பாடி.

நேற்றிரவும் 9:30 மணிக்கு மேல் அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசானி கூட்டணி குறித்து சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருக்கிறார். அதிமுகவுக்குள் சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோரின் எதிர்பார்ப்புகள் என்னவென்பதை எடப்பாடியிடம் அமித் ஷா கூறியதாக சொல்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எல்லாவற்றையும் காது கொடுத்து கேட்டுக் கொண்ட எடப்பாடி ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி மூவரையும் கட்சிக்குள் மட்டுமே சேர்க்கவே மாட்டேன் என உறுதியாக கூறியிருக்கிறார். இதைத்தொடர்ந்துதான் பத்திரிகையாளர் சந்திப்பிலும், 'எத்தனை தடவை இதையே கேட்டு, கட்சி பலவீனமா இருக்குற மாதிரியே தோற்றத்தை உருவாக்குவீங்க' என சீறியிருக்கிறார்.

இந்த மாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவிருக்கிறார். அதற்குள் கூட்டணியை உருவாக்கி கூட்டணி கட்சித் தலைவர்கள் அத்தனை பேரையும் பிரசார மேடையில் ஏற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம் என்கின்றனர். அதற்கு மேலும் தாமதப்படுத்தினால் கூட்டணியை கூட அமைக்க முடியவில்லை என்கிற விமர்சனம் மேலெழுந்து பின்னடைவை கொடுக்கும் என நினைக்கின்றனர். இதை மனதில் வைத்துதான் அப்பா - மகன் சண்டை ஓயாவிடிலும் அன்புமணியை அழைத்து கைகுலுக்கி கூட்டணியில் சேர்த்திருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி - அன்புமணி
எடப்பாடி - அன்புமணி

ஆனால், பிரதமர் வருவதற்குள் கூட்டணியை இறுதி செய்வதில் எடப்பாடிக்கும் தமிழக பாஜகவுக்கும் நிறைய சவால்கள் இருக்கிறது. அன்புமணி காலையில் க்ரீன்வேஸ் சாலையில் எடப்பாடியோடு கூட்டணியை உறுதி செய்கிறார். 'அன்புமணியை பாமகவின் தலைவர் என குறிப்பிட்டதே சட்டவிரோதமானது' என மதியமே எடப்பாடிக்கு எதிராக அறிக்கை விடுகிறார் ராமதாஸ்.

'தந்தைக்கு துரோகம் செய்தவனுக்கு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?' என பத்திரிகையாளர்களை அழைத்து அன்புமணியையும் கிழித்து தொங்கவிடுகிறார். ராமதாஸ் இல்லாமல் வட மாவட்டங்களில் என்.டி.ஏ கூட்டணியால் எதிர்பார்க்கும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால், மகனுக்கு எதிரான யுத்தத்தில் அவர் இறங்கி வருவதாகவே தெரியவில்லை.

இன்னொரு பக்கம் பிரேமலதாவும் எந்தப் பக்கமும் பிடிகொடுக்காமல் கபடி ஆடிக்கொண்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்யசபா சீட் உட்பட உறுதியளிக்கப்பட்ட சில விஷயங்கள் தேமுதிகவுக்கு கிடைக்கவில்லை. அதனால் இந்த முறை தங்களுக்கு தேவையானவற்றுக்கு வலுவான பிடியை ஏற்படுத்திக் கொண்டே கூட்டணியை உறுதி செய்யும் மனநிலையில் இருக்கிறார் பிரேமலதா. அதனால்தான் திமுகவுக்கு எதிராகவும் பெரிதாக எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் காத்திருக்கிறார்.

பிரேமலதா
பிரேமலதா

நாளை கடலூரில் மாநாடு கூட்டியிருக்கிறார். மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக கூறியிருந்தார். எதிர்பார்க்கும் விஷயங்களுக்கான உறுதி அதிமுகவிடமிருந்து கிடைக்கவில்லையெனில், கடலூரிலும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் பொத்தாம் பொதுவாகவும் பேசிவிட்டு செல்ல வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் முரசு கட்சியினர்.

ஓ.பி.எஸ், டிடிவியை முதலில் கூட்டணியில் இணைக்க வேண்டும். எடப்பாடியின் தலைமையை ஏற்க முடியாது என்கிறார் ஓ.பி.எஸ். அரசியலில் நட்பு, துரோகம் எல்லாம் பார்க்க முடியாது என்றாலும் சீட்டுகளை பார்த்துதான் ஆக வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறார் டிடிவி. அதனால்தான் கௌரவமான இடங்களும் ஆட்சியில் பங்கும் தருபவர்களுடன் தான் கூட்டணி என அறிவித்திருக்கிறார் டிடிவி. இவர்கள் போக இன்னும் கிருஷ்ணசாமியையும் ஜான் பாண்டியனையும் மேடை ஏற்ற வேண்டும். எல்லாம் ஜனவரி இறுதியில் மோடியின் தமிழக வருகைக்குள் நடக்க வேண்டும். இதுதான் எடப்பாடிக்கான இமாலயச் சவால்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவை கழட்டி விட்ட சமயத்திலிருந்தே மெகா கூட்டணி...மெகா கூட்டணி என சவுண்ட் மட்டுமே கொடுத்து வருகிறார் எடப்பாடி. அவர் சொல்லும் மெகா கூட்டணி 2026 தேர்தலை முன்னிட்டு அமையவில்லையெனில், அது அதிமுகவில் எடப்பாடியின் தலைமை மீதே பெரும் கேள்வியை எழுப்பக்கூடிய விஷயமாக மாறும்.!

கிரீன்லாந்து:``ஒவ்வொருவருக்கும் பணம் கொடுப்போம்" - அமெரிக்க அதிபர் 'சதி': கொந்தளிக்கும் உலக நாடுகள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். டென்மார்க்கும் அமெரிக்காவும் பரஸ்பரம் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும... மேலும் பார்க்க

Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தைக் கைப்பற்ற விரும்புவதாகத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.ஆர்க்டிக் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் ராணுவ ரீதியான முக்கியத... மேலும் பார்க்க

49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (08-01-2026) தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``அறிவு சங்கமத்தை, அறிவு திருவிழாவை தொடங்கி வைப்பதில் மிகு... மேலும் பார்க்க