செய்திகள் :

BB Tamil 9 Day 94: பற்றிக்கொண்ட பழைய கதை; உளவியல் போரில் முன்னாள், இந்நாள் போட்டியாளர்கள்! டைட்டில்?

post image

‘சரி.. ஆரம்பிச்சாச்சு.. முடிச்சு வைப்போம்’ என்கிற மாதிரி சோர்வான கிளைமாக்ஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, இந்த சீசன்.

‘சீக்கிரம் முடிங்கப்பா.. நாங்களும் அடுத்த வேலையைப் பார்க்க போகணும்’ என்கிற மாதிரியே பார்வையாளர்களும் இருப்பது போல தோன்றுகிறது. 

‘டைட்டில் யாருக்கு?’ என்கிற ஆர்வம் யாரிடமும் சுத்தமாக இல்லை. 

BB TAMIL 9 DAY 94
BB TAMIL 9 DAY 94

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 94

திரும்பவும் உள்ளே வரும் போட்டியாளர்கள், பழைய விவகாரங்களைக் கிளறி போட்டியாளர்களின் மீது உளவியல் தாக்குதல் நடத்துவார்கள் என்பது தெரிந்த கதைதான். இந்த சீசனில் அது அதிகமாக நடக்கிறது. இது விக்ரமிற்கு தெரியாதா?

சாண்ட்ரா, திவ்யா போன்ற கடப்பாறைகளையெல்லாம் விழுங்கியவர், வியானா என்கிற குண்டூசி தாக்குதலுக்கு உடைந்து போகிறார். திவ்யா பிரச்னை அவரை பலமாக தாக்கியிருக்கிறது போல. “நான் போறேன்யா.. என்னை விட்டுடுங்க..” என்று தேவர் மகன் கமல் மாதிரி தழுதழுத்தவருக்கு இன்று காலையில் ஞானோதயம். 

காமிரா முன்னால் வந்து “வியானாவிற்கு தமிழ் வேற சரியா தெரியாது. சோஷியல் மீடியால சொல்றத வச்சு வந்து பேசறாங்க.. நான் தப்பா நடந்திருந்தா மக்கள் என்னை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்க மாட்டாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. அந்த அளவிற்கு உழைச்சிருக்கேன்.” என்று சரியான டிராக்கில் சென்றவர், மீண்டும் குட்டையைக் குழப்பி, “எனக்கு டைட்டில் மேல ஆசையில்ல. ஆனா மக்களுக்காக விளையாடுவேன்” என்று யூடர்ன் அடித்தார். (‘ஒண்ணு தலன்னு சொல்லு.. இல்ல தளபதின்னு சொல்லு. கமல் மாதிரியே பேசாத’ மோமெண்ட்!)

“இப்படியல்லாம் பேசறது தப்புன்னு எனக்கே தெரியுது” என்றும் சொல்கிற விக்ரம், கிளைமாக்ஸ் நேரத்தில் இப்படி பேசுவது அவருக்கு வீழ்ச்சியைத் தரும் என்று தெரியாதா?

திவாகர் - வினோத் காம்போ 2.O - மறுபடியும் வம்பு, வன்மம்

வினோத்தும் திவாகரும் பரஸ்பர வன்மத்துடன் சீண்டிக் கொள்வது மீண்டும் தொடர்கிறது.  திவாகரிடம் வினோத் ஒரண்டை இழுப்பதும், “இதோ பாருங்க வினோத் சார்.. நான் பாட்டுக்கு இருக்கேன். என்னைச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்ல” என்று திவாகர் அனத்துவதும், “போய்யா.. டிராமா பண்ணாத” என்று வினோத் கலாய்ப்பதும் பார்க்க நன்றாக இல்லை. 

வினோத் - திவாகர் காம்போ காமெடி ஒரு வகையில் நன்றாக இருந்தாலும் உள்ளே பொங்கும் வன்மத்துடன் இருவரும் உரசிக் கொண்டே இருப்பது நெருடலாக இருக்கிறது. வினோத் திவாகரை நோண்டிக் கொண்டே இருக்கிறார் என்றால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் திவாகரும் எதையாவது செய்து விட்டு வருகிறார். இப்போது வினோத்தின் கூட பிரவீன்ராஜூம் இணைந்து கலாய்ப்பதால் திவாகரின் டேமேஜ் அதிமாக இருக்கிறது. 

சட்டை போடாமல் அரை நிர்வாணமாக உலவிக் கொண்டிருந்த திவாகர், “உங்க அளவுக்கு எனக்கு திறமை இல்லை. நான் உருவக்கேலி பண்ணலை. உங்களாலதான் நான் முன்னுக்கு வந்தேனா.. மன்னிச்சிடுங்க” என்று சர்காஸமாக வினோத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். 

BB TAMIL 9 DAY 94
BB TAMIL 9 DAY 94

வியானாவிடம் கடலை போடும் திவாகர் 

‘நவரச முகபாவங்களையும் காட்டுங்க’ என்று திவாகரிடம் வியானா கேட்க, அவர் வழக்கம் போல அஷ்டகோணலாக விதம் விதமாக காட்டி விட்டு அதுதான் நடிப்பு என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். தன்னை வைத்து மக்கள் டைம்பாஸ் செய்கிறார்கள் என்பது கூடவா தெரியவில்லை. திவாகர் செய்த ஒரு எக்ஸ்பிரஷனை “மிதிக்கக்கூடாதை மிதிச்ச மாதிரி இருக்கு” என்று சொல்லி சிரித்தார் திவ்யா. 

ஆனால் திவாகர் எதைப் பற்றியும் கவலைப்படுவதாக இல்லை. அவரை தூக்கத்திலிருந்து எழுப்பி ‘கர்ணன் படக் காட்சி பண்ணுங்க’ என்றால் உடனே முகத்தைச் சுருக்கி வலிப்பு வந்தவர் போல் செய்து விடுவார் போலிருக்கிறது. திவாகரின் நடிப்புத் திறமைக்கு தீனி போட உலக லெவலில் கூட எந்த டைரக்டரும் இல்லை. 

வியானா மற்றும் அரோவிடமும் தீவிரமாக கடலை வறுத்துக் கொண்டிருந்தார் வினோத். அவர்களும் பதிலுக்கு கலாய்க்கிறார்கள். திவாகரும் இப்படியே. வீட்டில் முன்னர் செய்து கொண்டிருந்த வேலையை இப்போதும் செய்கிறார். ‘வியானா குட்டி.. ‘ என்று அவர் கூடவே அலைந்து கொண்டிருக்கிறார். பதிலுக்கு ‘திவாகர் அண்ணா..’ என்று பாதுகாப்பு கவசத்தை வியானா கொண்டிருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் திவாகருக்கு கவலையில்லை. பாருவிடமே ‘டார்லிங்’ என்று வழிந்தவர்தானே?!

BB TAMIL 9 DAY 94
BB TAMIL 9 DAY 94

நடுத்தர வயதை எட்டிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு, தாங்கள் இளமையை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ள அத்தனை எளிதில் மனம் வராது. ஜீன்ஸ், டிஷர்ட், மேக்கப் என்று ‘தாங்களும் யூத்துதான்’ என்பதைக் காட்டிக் கொள்ள பிரயத்தனப்படுவார்கள். அதில் ஒன்றுதான் இளம்பெண்களிடம் flirting. அவர்கள் பதிலுக்கு ‘அங்கிள்’ என்று அழைத்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். வினோத்தும் திவாகரும் செய்வதைப் பார்த்தால் இப்படித்தான் தெரிகிறது. 

சாண்ட்ரா ஃபைனலுக்கு தகுதியே இல்லை - சரமாரியான புகார்

பசையில் உருள்வது, பலூன்களை மிதிப்பது என்று பணம் சேர்க்கும் வேலையை போட்டியாளர்களிடமே தள்ளி விடுகிறார் பிக் பாஸ். எபிசோடை இழுக்க வேண்டுமே? அடுத்த சீசனில் “பணத்தை நீங்களே பிரிண்ட் செய்ய வேண்டும்’ என்று சொல்லி விடுவார்கள் போலிருக்கிறது. 

ரம்யாவும் அப்சராவும் உள்ளே வந்தார்கள். அப்சராவால் எந்த கன்டென்டும் கிடைக்க வாய்ப்பில்லை. அவர் புறணி பேச மாட்டார். ரம்யாவால் ஏதாவது நடக்கலாம். 

“இவங்கள்லாம் எப்படித்தான் ஃபைனலுக்கு வந்தாங்களோ.. இதுக்கு நானே பரவாயில்ல” என்று முன்னாள் போட்டியாளர்கள் சொல்ல வேண்டும். இதில் பெரும்பாலோனார் சாண்ட்ராவை பகிரங்கமாக சொல்லியது மிகச் சரி.

BB TAMIL 9 DAY 94
BB TAMIL 9 DAY 94

எப்படி அவர் இறுதிப் போட்டியாளராக வந்தார் என்பது இன்னமும் மர்மமாக இருக்கிறது. தன் மீது வீசப்படும் புகார்களை ரோபோ முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார் சாண்ட்ரா. தக்க நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும். 

சான்ட்ராவிற்குப் பிறகு அரோவை சொன்னதும் சரியே. தேர்விற்கு முதல் நாள் படித்து மாநிலத்தில் முதலிடம் வந்தது போல் இருக்கிறது அரோவின் பொஷிஷன். மற்ற இருவரோடு விக்ரமின் பெயரையும் வியானா சொன்னது அப்பட்டமான வன்மம். அப்படி வன்மம் காட்டுமளவிற்கு விக்ரம் என்ன செய்தார் என்று தெரியவில்லை. ‘வினோத்’ பெயரைச் சொல்லி பழிவாங்கினார் திவாகர். இதைப் புரிந்து கொண்ட சபை நமட்டுச் சிரிப்பு சிரித்தது. 

ரம்யா ஒரு பாம்பு மாதிரி - பற்றிக் கொண்ட பழைய கதை

தன்னைப் பற்றி கடுமையான புகார் சொன்ன ரம்யாவிடம், “அந்த இடத்துல நின்னாதான் புரியும்” என்றார் சாண்ட்ரா. பிறகு விக்ரமிடம், “நான் அழுவறதுல இவங்களுக்கு என்ன பிரச்னை?” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அடிப்படையில் சென்சிட்டிவ்வாக உள்ளவர்கள் சட்டென்று அழுவது ஓகே. ஆனால் சாண்ட்ரா அதை மட்டும்தான் செய்து கொண்டிருந்தார் என்பதுதான் பிரச்னை. டாஸ்க்கும் சரியாக ஆடாமல், வேலையும் செய்யாமல் வீட்டிற்கு வந்த கெஸ்ட் மாதிரி இருப்பவரை எப்படி இறுதிப் போட்டியாளர் என்று ஒப்புக் கொள்ள முடியும்?

“நான் இந்த இடத்துக்கு பல வருடம் போராடி கஷ்டப்பட்டு வந்திருக்கேன்” என்று வினோத் அனத்த “திவாகர் சொல்றத எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க. அவருக்கு பொறாமை” என்று இரண்டு பிரவீன்களும் ஆறுதல் சொன்னார்கள். 

BB TAMIL 9 DAY 94
BB TAMIL 9 DAY 94

“ரம்யா ஒரு பாம்பு மாதிரி, அவளை நம்பாதே’ன்னு பாரு கிட்ட சாண்ட்ரா சொன்னாங்க. ஆனா மறுநாளே கட்டிப்பிடிச்சு அழுதாங்க.. நான் மறுபடியும் வந்தப்பவும் கண்கலங்கினாங்க. என்ன மாதிரி ஆக்டிங் இது?” என்று திவ்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ரம்யா. “பாருவும் சாண்ட்ராவும் ஒண்ணு, அறியாதவங்க வாயில மண்ணு” என்கிற மாதிரி வழிமொழிந்தார் திவ்யா. “இருக்கட்டும் கேட்கமயா போயிடுவேன்” என்று ரம்யா சபதம் எடுத்தார். (அப்ப ஒரு சம்பவம் இருக்கு!)

‘அப்ப யாருதான் டைட்டில் வின்னர்? - குழப்பமா இருக்கே?’

அடுத்ததாக விக்ரமிடம் சென்ற ரம்யா, “நான் ரொம்ப அழறேன்னு சொல்லி நாமினேட் பண்ணீங்க. இப்ப நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. ஏன் நிறைய அழறீங்க?” என்று பாசத்துடன் கேட்க “என்னம்மா பண்றது.. என் நிலைமை அப்படி” என்று சிவாஜி பாணியில் சோகத்துடன் நின்றார் விக்ரம். 

“சபரி மிக்சர் சாப்பிட்டு்ட்டு உக்காந்திட்டு இருக்கார்” என்று வியானா சொன்ன கமெண்ட் சபரியை உள்ளுக்குள் பாதித்திருக்க வேண்டும். பலூன் டாஸ்க்கில் ஜெயித்த பிறகு “இப்பத் தெரியுதா.. யார் மிக்சர் சாப்பிட்டதுன்னு?” என்று கேட்டு பதிலுக்கு கேட்டு மனதை ஆற்றிக் கொண்டார் சபரி.  “அவர் மிக்சர் சாப்பிட்டதைத்தானே சொன்னேன். இதுல எதுக்கு கோபம் வரணும்?” என்று திவ்யாவிடம் பிறகு புலம்பினார் வியானா. 

BB TAMIL 9 DAY 94
BB TAMIL 9 DAY 94

இன்னொரு பக்கம் அரோவின் புலம்பல். “ரம்யா.. என் கிட்ட சொல்றா.. அஞ்சு லட்சம் எடுத்துட்டு போயிடுவியான்னு.. அம்பது லட்சம் கிடைக்க வாய்ப்பிருக்கும் போது இதுக்கு ஏன் நான் போகணும்?” என்று சபரியிடம் அவர் அனத்த “இவங்க பண்றதையெல்லாம் பார்த்தா டாஸ்க் மாதிரி தெரியுது” என்றார் சபரி. 

ஆக.. இப்போதைய போட்டியாளர்களும் முன்னாள் போட்டியாளர்களும் ஒருமாதிரியான உளவியல் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பழைய விரோதங்கள் இருப்பது ஒரு பக்கம் இருக்க, சூத்ரதாரியான பிக் பாஸூம் இவர்களுக்கு பயிற்சி தந்து அனுப்பியிருக்கலாம். இரண்டு தரப்பிலான சண்டைகளை வைத்துதான் இறுதி நாட்களை நகர்த்திச் செல்வார்கள் போலிருக்கிறது. 

இந்த சீசனின் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டாலும் கூட ‘டைட்டில் வின்னர் யார்?’ என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உங்களுக்கு அப்படி யாராவது உறுதியாகத் தோன்றுகிறதா? இரண்டு வரி காரணத்துடன் சொல்லுங்கள்.

BB Tamil 9: "தவறான குற்றச்சாட்டை வச்சு, என் முதுகில குத்திருக்காங்க.!"- சாண்ட்ரா குறித்து திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் திடீர் திருப்பம் – பணப்பெட்டி எடுத்து வெளியேறினார் கானா வினோத்!

விஜய் டிவியில் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது பிக்பாஸ் தமிழ் சீசன் 9.வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொ... மேலும் பார்க்க

BB Tamil 9: `என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு என்ன பண்ணிட்டேன்?"- சண்டைப்போட்ட ரம்யா; அழும் சாண்ட்ரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 94 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க

`'பராசக்தி' வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி' ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அன... மேலும் பார்க்க

BB 9: "என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?"- விக்ரமைச் சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய ... மேலும் பார்க்க