`எதுக்கு தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; ஆனா...' - மனநலம் குன்றியவர்களை அரவணைக்க...
BB 9: "என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?"- விக்ரமைச் சாடிய திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.
கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் திவ்யா, விக்ரம் குறித்து ரம்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். "என்னைய ஃபிராடு, கோழைன்னு எல்லாத்தையும் சொல்லிட்டு, அவர் மன்னிப்பு கேட்டா, அந்த மன்னிப்பை நான் ஏத்துக்கணுமா? அந்த மன்னிப்பு எனக்கு வேணாம். உனக்கு கோவம் வந்தா கத்திப் பேசலாம்.

ஆனா மத்தவங்க கோவப்பட்டா சிரிச்சு பேசணுமா? அவர் ரூல் ப்ரேக் பண்ணா தெரியாம பண்றது. மத்தவங்க பண்ணா தெரிஞ்சு தான் பண்றாங்கன்னு சொல்லுவாரு. அவர் பேசுற பாயின்ட் தான் கரெக்ட், அவர் சொல்றதுதான் நியாயம். அன்னைக்கு என்ன பத்தி பேசுனதெல்லாம் ரொம்ப ஹர்ட் ஆயிருச்சு" என திவ்யா விக்ரமைச் சாடுகிறார்.




















