செய்திகள் :

ரூ.5 கோடி மோசடி புகார்; மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற பிக் பாஸ் பிரபலம் மும்பை விமான நிலையத்தில் கைது

post image

பிக் பாஸ் பிரபலமான ஜெய் துதானே, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தனது நீண்ட நாள் காதலி ஹர்ஷலா பாட்டீலை திருமணம் செய்து கொண்டார். அவர் தனது மனைவி, சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோருடன் தேனிலவுக்கு புறப்பட்டார். மும்பை விமான நிலையத்தில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கும் வகையில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு இருந்தது. விமானநிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தவுடன் அவருக்கு எதிராக தேடப்படும் நபர் நோட்டீஸ் வெளியிடப்பட்டு இருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டு இது குறித்து அவரிடம் தெரிவித்தனர்.

மேலும் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து அவரை கைது செய்துள்ளனர். ஜெய் துதானே கடை ஒன்றை போலி ஆவணங்கள் மூலம் பலருக்கு விற்று ரூ.5 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மனைவியுடன் ஜெய்

இது தொடர்பான வழக்கில்தான் இந்த நோட்டீஸ் வெளியிடப்பட்டு இருந்தது. இது ஜெய் துதானேவிற்கு தெரியாமல் இருந்தது. கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படும் போது நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜெய் துதானே,''என் மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.

இதில் எனக்கு எந்த வித தொடர்பும் கிடையாது. நான் கவலைப்படப்போவதில்லை. சூழ்நிலையை எதிர்கொள்வேன். என் மீதான ரூ.5 கோடி புகாரை கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. என் மீதான புகாருக்கு யாராவது ஆதாரத்தை காண்பிக்க முடியுமா?. ஒரு கடையை விற்பனை செய்ய பதிவு செய்யப்பட்டுவிட்டால் அதனை மீண்டும் விற்பனை செய்ய முடியாது.

நான் எனது மனைவியோடு தேனிலவுக்கு சென்று கொண்டிருந்தபோது என்னால் வெளிநாடு செல்ல முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்''என்றார். இம்மோசடி தொடர்பாக ஜெய் துதானேயின் தாயார், சகோதரி, தாத்தா, பாட்டி ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அனைவர் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ஜெய் துதானே மராத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதோடு மாடலாகவும், உடல் பயிற்சியாளராகவும், நடிகராகவும் இருக்கிறார்.

மரணத்தை வென்ற மனிதம்; விற்று தீர்ந்த 50 டன் சர்க்கரைக் கிழங்கு - மனைவி உயிர்காத்த கணவனின் போராட்டம்!

ஒரு தனிமனிதனின் துயரம் எப்படி ஒரு சமூகத்தின் கூட்டு முயற்சியாக மாறி, ஓர் உயிரைக் காப்பாற்றியது என்பதற்கு, சீனாவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். தன் மனைவியின் உயிரைக் காக்கப் போர... மேலும் பார்க்க

10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து தவித்த வீடியோ வைரல்!

ஹரியானாவில் ஒரு தம்பதிக்குத் தொடர்ச்சியாக 10 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அங்குள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் உஷனா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார்(38). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின... மேலும் பார்க்க

Maduro: புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் பக்தர்; இந்தியாவுடனான வெனிசுலா அதிபரின் ஆன்மிக தொடர்பு!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவர் மனைவி சிலியா புளோரஸ் தம்பதியை அமெரிக்க படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தி சிறைபிடித்துச் சென்றுள்ளன. தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

'ஓர் ஆண்டு வாழ்க்கை; 10 ஆண்டுக்கால வழக்கு; ரூ.1000 கோடி ஜீவனாம்சம்' - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெய்தேவ் ஷெராப்பிற்குக் கடந்த 2004ம் ஆண்டு பூனம் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்திருமணம் ஓர் ஆண்டு கூட நிலைக்கவில்லை.2005ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். 2015ம் ஆண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தலில் பணம், அதிகாரபலம்? - தேர்தல் நடக்கும் முன்பே பா.ஜ.க கூட்டணி 66 இடங்களில் வெற்றி

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலைதான் வெளியானது. அதேசமயம் தேர்தல் நடக்கும் முன்பு பா.ஜ.க மற்றும் அ... மேலும் பார்க்க

மருமகளை வரவேற்க தயாராகும் பிரியங்கா காந்தி - ரைஹானுக்கு நீண்டகால காதல் தோழியுடன் நிச்சயதார்த்தம்!

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மற்றும் தொழிலதிபர் ராபர்ட் வதேரா தம்பதியின் மகன் ரைஹான் வதேராவிற்கு அவரது நீண்ட கால தோழி அவிவா பைக் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க