49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முத...
BB Tamil 9: "டிராமா பண்ணி எல்லாரையும் அனுப்பிச்சு விடுறாங்க"- சாண்ட்ராவை சாடிய வியானா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 92 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.
கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. நேற்று வியானா பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இன்று திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர்.
தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், " வேலை செய்ய அவங்களுக்கு வலிக்குது. உடம்பு முழுசும் ஈவில்னஸ் இருக்கு. என்னைய நாமினேட் பண்ணி வெளியே அனுப்பிச்சிட்டு, உன்னை நினைச்சேன்னு பொய் சொல்றாங்க. நல்லா சீரியல் நடிச்சு நடிச்சு... டிராமா பண்ணி எல்லாரையும் அனுப்பிச்சு விடுறாங்க" என்று சாண்ட்ராவை சாடியிருக்கிறார் வியானா.



















