செய்திகள் :

வெனிசுலா: ``உலகின் காவலராக எந்த நாடும் செயல்பட முடியாது" - சீனாவின் விமர்சனமும் புதிய சிக்கலும்!

post image

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கடந்த 3-ம் தேதி அவரை அமெரிக்க அரசு சிறைப்பிடித்தது. அதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றன.

அமெரிக்காவிலிருந்தே அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராகப் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சீனா, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.

நேற்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களைச் சந்தித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ``எந்த நாடும் உலகின் காவலராகச் செயல்பட முடியாது. அதை நாங்கள் எப்போதும் நம்பியதுமில்லை. எந்த நாடும் தன்னை உலகின் நீதிபதி என்று கூறிக்கொள்வதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

அனைத்து நாடுகளின் இறையாண்மையும் பாதுகாப்பும் சர்வதேச சட்டத்தின் கீழ் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

சமீப ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வெனிசுலா நாட்டுக்கான பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல தடைகளைத் தீவிரப்படுத்தின. அப்போது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2017-ம் ஆண்டிலிருந்து வெனிசுலாவிற்கு ஒரு பொருளாதார உயிர்நாடியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் கிடைத்த தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட சுமார் 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை சீன அரசு வெனிசுலாவிடமிருந்து வாங்கியுள்ளது.

சீன வெளிநாட்டு நிறுவன முதலீடுகளைக் கண்காணிக்கும் அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் என்ற குழுவின் தரவுகளின்படி, சீன அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் 2018-ஆம் ஆண்டுக்குள் வெனிசுலாவில் சுமார் 4.6 பில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தன.

இந்த நிலையில்தான் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கைது நடந்தேறியிருக்கிறது. வெனிசுலா அரசை தற்போதைக்கு அமெரிக்கா மேற்பார்வையிடும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார் என்பதால், வெனிசுலாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான சுமார் 50 ஆண்டுகால ராஜதந்திர உறவுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

தமிழே உயிரே : `மார்பில் குண்டு பாயட்டும்!' | மொழிப்போரின் வீர வரலாறு - 2

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 2‘இந்தி எதிர்த்திட வாரீர் – நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்’ என்று இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு விடு... மேலும் பார்க்க

ஹைவேயில் அன்புமணி ; ட்ராஃபிக்கில் ராமதாஸ்; U-Turn போடும் டிடிவி? | தேர்தல் பரபர

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அ.தி.மு.க பரபரப்பாக தன் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது. 'அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி ஒரு வலிமையான கூட்டணியாக அமையும்' எனத் தொடர்... மேலும் பார்க்க

இந்தியா அல்ல; `வங்கதேச மாணவர் தலைவர் கொலைக்குக் காரணம், இவர்கள்தான்!' - போலீஸ் தகவல்

மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் கொலை வங்கதேசத்தை மீண்டும் கலவர பூமியாக்கியது. இந்தக் கொலைக்குப் பின்னால் இந்தியா இருக்கிறது என்று வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை துன்புறுத்தி வந்தனர் போராட்டக்காரர... மேலும் பார்க்க