`எதுக்கு தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; ஆனா...' - மனநலம் குன்றியவர்களை அரவணைக்க...
இந்தியா அல்ல; `வங்கதேச மாணவர் தலைவர் கொலைக்குக் காரணம், இவர்கள்தான்!' - போலீஸ் தகவல்
மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் கொலை வங்கதேசத்தை மீண்டும் கலவர பூமியாக்கியது.
இந்தக் கொலைக்குப் பின்னால் இந்தியா இருக்கிறது என்று வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை துன்புறுத்தி வந்தனர் போராட்டக்காரர்கள்.
இந்த நிலையில், ஷெரீப்பின் கொலைக்குப் பின்னால், 'யார் இருக்கிறார்கள்?' என்பது குறித்த தகவலை வங்கதேச போலீஸ் வெளியிட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவின் கட்சி அவாமி லீக். அந்தக் கட்சியின் மாணவர் அணி சத்ரா லீக்.
2024-ம் ஆண்டு, வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த பின், இந்த இரண்டு கட்சிகளுமே தடை செய்யப்பட்டது.

இந்தக் கட்சிகளை குறித்து பொது மேடைகளிலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து சாடிப் பேசு வந்திருக்கிறார் ஷெரீப்.
இதில் கோபமடைந்த அந்தக் கட்சிகளின் தலைமைகள், அவரைப் பழிவாங்க இந்தக் கொலையை செய்து முடித்திருக்கிறார்கள்.
'இந்தக் கொலை அரசியல் நோக்கிலானது' என்று டாக்கா பெருநகர காவல்துறையின் துப்பறியும் பிரிவின் கூடுதல் ஆணையர் எம்.டி. ஷஃபிகுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் 17 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.














