Jana Nayagan release ஆவதில் சிக்கல், நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன? | PMK | ...
"அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" - காங். எம்.பி மாணிக்கம் தாகூர்
"அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதுதானே" என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழத்துடன், காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகப் பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்தப் பதிவு மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "யாருக்கு வாக்கு?” – IPDS தரவு சொல்லும் தகவல். தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.
ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்தத் தரவில் காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாகப் பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல – அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதுதானே" என்று பதிவிட்டிருக்கிறார்.
யாருக்கு வாக்கு?” – IPDS தரவு சொல்லும் தகவல்.
— Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) January 5, 2026
தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.
ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது.
இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
ஆனால்
கூட்டணி இல்லாமல்… pic.twitter.com/5haidr2CnU


















