செய்திகள் :

BB TAMIL 9 DAY 90: பம்மிய பாரு; பாரு - கம்ருதீன் வீழ்ச்சி தரும் பாடம்; 90வது நாளில் நடந்தது என்ன?

post image

மெயின் டோர் திறக்கிறது. பாரு தன்னந்தனியாக அதை நோக்கி நடக்கிறார். யாரும் அவரைக் கட்டியணைத்து வழியனுப்ப வரவில்லை. யாரும் கண்ணீர் சிந்தவில்லை.

பிக் பாஸின் குரல் கேட்கவில்லை. பயண வீடியோ இல்லை. முறையான வழியனுப்புதல் இல்லை. ரெட் கார்டு வாங்கியவர்களுக்குச் சம்பளமும் கிடைக்காது என்கிறார்கள். 

யாராவது ஏதாவது சொல்வார்களா என்கிற தவிப்புடன் பாரு நிற்கிறார். ‘அது நடக்காது’ என்பது புரிந்தவுடன் திரும்பி கதவை நோக்கி துயரத்துடன் நடக்கிறார். பரிதாபம்.  ‘டைட்டில் வின்னர்’ என்று சொல்லப்பட்டவருக்கு என்ன ஒரு வீழ்ச்சி?!


முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் வன்மமும் புறணியும் ஆபாச வசையும் அப்போதைக்கு போதைக்கான இன்பத்தைத் தரலாம். ஏன், சின்னச் சின்ன வெற்றிகளைக்கூட தரலாம். ஆனால் இறுதியில் ஒரே நொடியில் அதள பாதாளத்திற்கு நம்மை தள்ளி விடும் என்பதற்கான உதாரணம் பாருவும் கம்ருதீனும். 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 90

வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

சபரி, வினோத், திவ்யா என்று பலரும் பாரு - கம்ருதீன் அட்ராசிட்டி பற்றி வெகுண்டு கத்துகிறார்கள். ஆனால் பாரு அலட்டிக் கொள்ளவில்லை. ‘என்ன பண்ணிட்டேன் இப்போ?’ என்று அலட்சியமாகப் பேசுகிறார். 

“நீங்க யாரும் கார்ல இருந்து இறங்காதீங்க.. இவங்க ஜெயிக்கக்கூடாது” என்று மற்றவர்களை நோக்கி சபரி கத்துகிறார். கடைசியில் அதுதான் நடந்தது. பாருவும் கம்ருதீனும் தூங்கி ஆட்டத்தை விட்டு வெளியேறுகிறார்களா? இதற்காகவா இத்தனை அலப்பறை?!

பொதுவாக தன் மீதான வசைகளுக்குக் கூட பொறுமையாக நிற்கும் விக்ரம், கோபத்தின் உச்சத்தில் கத்துகிறார். ‘வாடா.. ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாம்’ என்று மல்லுக்கு நிற்கிறார் கம்ருதீன். சான்ட்ரா செய்வது நடிப்பாகவே இருந்தாலும் ‘அவருக்கு ஒருவேளை உண்மையாக ஏதாவது ஆகியிருந்தால்?’ என்கிற வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இருவரிடமும் இல்லை. 

கார் டாஸ்க்கில் பாரு - கம்மு தொடர்ந்து செய்த அட்ராசிட்டி

சான்ட்ராவைத்தான் தனிப்பட்ட கோபத்தில் தள்ளி விட்டார்கள் என்று பார்த்தால் திவ்யாவின் தலை மீது கால் படுமாறு அட்ராசிட்டி செய்கிறார் பாரு. எனில் இவர்கள் மற்றவர்களை வெறுப்பேற்றி வெளியேறுவதைத் திட்டமிட்டு செய்கிறார்கள் என்று புரிகிறது.

“இவங்க தெரியாம பண்றாங்கன்னா நெனக்கற?” என்று சபரி சொல்வதும் இதைத்தான். “உங்க அம்மா சொல்லியே திருந்தலை.. நான் சொன்னாவா திருந்த போறே?” என்று பாருவைச் சரியாக கேள்வி கேட்கிறார் திவ்யா. 

சிகிச்சை முடிந்து சான்ட்ரா திரும்புகிறார். நடுக்கத்துடன் அவர் வீட்டிற்குள் வர, “வாங்க பயப்படாதீங்க.. எங்க அக்கா, தங்கச்சிக்கு இப்படி நடந்தா விட்டுறுவமா?” என்று அரவணைத்து செல்கிறார் சபரி. இத்தனை நாட்கள் போயிருந்த இமேஜை எல்லாம் இந்த ஒரே சம்பவத்தில் சபரி ஈடுகட்டி விடுவார் போலிருக்கிறது.

டாஸ்க் போனால் போகட்டும் என்று காரில் இருந்து இறங்கியது முதல் கம்ருதீனைத் துணிச்சலாக எதிர்த்தது வரை ஒரு ஹீரோவாக கண்ணுக்குத் தெரிகிறார். 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

“வினோத் டாஸ்க் ஆட மாட்டார்ன்னு சொல்றாங்க. இந்த டாஸ்க்லதான் எனக்குச் சௌரியமா உட்கார இடம் கிடைச்சது. அதையும் கெடுத்தானுங்கடா” என்று வினோத் காமெடியாகச் சொல்ல சான்ட்ரா சிரிக்கிறார்.

எனில் அவர் நார்மலுக்கு வந்து விட்டார் என்பது புரிகிறது. “வாட்டர்மெலன் விட்ட சாபம்” என்று விக்ரம் சொல்ல, டிவியில் சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியே புன்னகைத்து விடுகிறார். 

வெளுத்து வாங்கிய திவ்யா - பம்மி அமர்ந்திருந்த பாரு

அத்தனையும் செய்து விட்டு, “நாம யாரையாவது தரம் தாழ்த்தி பேசியிருக்கோமா?” என்று பாரு கம்ருதீனிடம் சொல்ல “பதிவு பண்றாங்களாமாம்” என்று சொல்லி விசே சிரிக்கிறார். உள்ளே வரும் கம்ருதீனைப் பார்த்து, பூச்சாண்டியைக் கண்ட குழந்தை மாதிரி சான்ட்ரா அலறி படுக்கையின் அடியில் ஒளிகிறார். ஹாரர் படத்தின் காட்சி மாதிரி இருக்கிறது. (சான்ட்ரா செய்வது கொஞ்சம் ஓவரோ?!)

கம்ருதின் சென்ற பிறகு காரில் தனியாக மாட்டிக் கொண்ட பாருவை திவ்யா வெளுத்து வாங்குகிறார். ஆனால் பாருவிடம் பலவீனமான எதிர்ப்பு மட்டுமே வருகிறது. கும்பலாக இருக்கும் போது குற்றம் செய்யும் துணிச்சல் தன்னால் வந்து விடுகிறது என்பதற்கான உதாரணம். 

அதுவரை அமைதியாக இருந்த சுபிக்ஷா மற்றும் அரோரா கூட கோபத்துடன் பாரு மீது பாய்கிறார்கள். கூட்டத்தில் யாராவது ஒருவர் துணிச்சலாக எழும் போது மற்றவர்களும் இணைகிறார்கள் என்பதற்கான உதாரணம். 

“ஏன் சான்ட்ராவைத் தள்ளி விட்டே.. இது ஸ்ட்ராட்டஜியா என்னது..?” என்று திவ்யா ஆவேசத்துடன் கேட்க “வீக்கெண்ட்ல பதில் சொல்லிக்கறேன்” என்கிறார் பார்வதி. அதாவது உனக்கு பதில் சொல்ல அவசியமில்லை என்று ஒரு பொருள்.

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

வார இறுதியில் வாய் சாமர்த்தியத்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று இன்னொரு பொருள். தன் நெகட்டிவிட்டியால்தான் இத்தனை வாரம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற துணிச்சல் பார்வதிக்குள் வந்திருக்கலாம். 

பாரு தூங்கி தோல்வியைச் சந்திக்கும்போது பார்வையாளர்களின் மகிழ்ச்சியான கூக்குரல்கள் கேட்கின்றன. இறுதியில் அரோரா விட்டுத் தர சுபிக்ஷா கார் டாஸ்க்கில் வெற்றியடைகிறார். ‘சாதிச்சிட்டீங்க” என்று வி்க்ரமும் சபரியும் பாராட்டுகிறார்கள். இந்த டாஸ்க்கில் தோற்றாலும் அரோராதான் டிக்கெட்டைப் பெறுவார் என்பது மாதிரியான நிலைமை. 

சான்ட்ராவின் பயக்கூச்சல் - உண்மையா, நாடகமா?

மறுநாள் காலை. பாருவிற்குள் அச்சமும் குற்றவுணர்வும் எழுந்திருக்க வேண்டும். “இந்த வாரம் என்னைத் துரத்தினா ஏத்துக்கறேன்” என்று முனகுகிறார். வேக் அப் பாடலின் போது இறங்கி குத்தி ஆவேசமாக ஆடுகிறார்.

இதுதான் கடைசி ஆட்டம் என்பது அவருக்கே தெரிந்து விட்டதோ, என்னமோ. ‘உன் பொண்டாட்டி நான் இல்லடா’ என்று பாடல் ஒலிக்கும் போது வினோத்தை நோக்கி குறும்பாக கை காட்டுகிறார் அரோ. 

பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்குக்கூட அச்சப்படுகிற சான்ட்ராவை, ‘நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் படுத்தி அழைத்து வருகிறார் அரோ. எல்கேஜி குழந்தை போன்று நடுக்கத்துடன் வருகிறார் சான்ட்ரா. அது உண்மையான மனப்பதட்டமா அல்லது அனுதாப நோக்கிலான நடிப்பா என்பது அவருக்கே வெளிச்சம். 

“நான் ஒண்ணும் வில்லன் கிடையாது. சான்ட்ராதான் என்னை டிரிக்கர் பண்ணாங்க. காமருதீன்னு சொன்னாங்க” என்று இன்னமும் தன்னை நியாயப்படுத்துகிற கம்மு, அதற்காக விக்ரமை அடிக்கவும் துணிகிறார்.  “எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனா அடிடா பார்க்கலாம்” என்று மல்லுக்கட்டுகிறார் விக்ரம். 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

பாருவும் கம்முவும் சரண்டர் ஆகி விடும் மனநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கம்மு சொன்ன விளக்கம் காமெடியாக இருந்தது. “நான் உதைக்கல. காலால புஷ் பண்ணேன்”... 

இவற்றையெல்லாம் டிவியில் பார்த்த விசே “என்னால முடியல.. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு” என்று சிரித்தபடி நகர்கிறார். விசே உள்ளே வருவதற்கு முன்னால் ‘மதுரைக்குப் போகாதடி’ பாடலுக்கு பாருவும் கம்முவும் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி நடனம் ஆடுகிறார்கள். சானல் காப்பாற்றி விடும் என்கிற நம்பிக்கை. ஆனால் பாருவை மதுரைக்கே அனுப்பி வைத்து விட்டார்கள். 

“நீங்க ஏன் தட்டிக் கேட்கலை?” - விக்டிமை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறாரா விசே?

விசே உள்ளே வந்தவுடன், மற்றவர்களிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்தார்.. “ஏன் பொறுத்துப் போனீங்க.. ஏன் எதிர்க்கலை.? என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் வேலை மாதிரி ஒன்று செய்தார். பிறகு பாரு கம்முவை விசாரித்தார். அவர்கள் ஏதோ சப்பைக் கட்டு கட்ட “அதெல்லாம் செல்லாது”என்று இரண்டு ரெட் கார்டுகளை தூக்கிக் காட்டினார். பார்வையாளர்களின் உற்சாகக் கூச்சல். அறத்தை நிலைநாட்டிய தோரணையோடு விசே நிகழ்ச்சியை முடித்தார். பாருவும் கம்முவும் சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை. 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

இது தொடர்பாக சில விஷயங்களை விரிவாக பார்த்து விடுவோம். 

‘’பாரு, சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபார்மட்டிற்குள்தான் வரும். வேறு ஷோக்களில் அவ்வாறு நடந்திருக்கிறது. எனவே இதில் தவறில்லை’...  என்று சமூகவலைத்தளங்களில் சிலர் நியாயம் கற்பிக்கிறார்கள். அது பாருவின் PR டீம் என்பதைத் தாண்டி, பாருவின் பக்தர்கள் சிலர் சொன்னதாகவே வைத்துக் கொள்வோம். 

எந்தவொரு பிஸிக்கல் டாஸ்க்கிலும் இவ்வாறான தள்ளுமுள்ளு நடப்பது வழக்கம்தான். ஆனால் அது முடிந்த பிறகு ‘ஸாரிடா மச்சான்’ என்று இரு தரப்பும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினையில்லை. ஆனால் பாரு மற்றும் கம்ருதீனின் கார் டாஸ்க் செய்கைக்குப் பின்னால் நிறைய bullying இருந்தது. பழிவாங்கல் உணர்ச்சி இருந்தது. சான்ட்ராவை டிரிக்கர் செய்ய வேண்டும் என்கிற அஜெண்டா இருந்தது. 

கார் டாஸ்க்கில் மட்டுமல்ல, சக போட்டியாளர்களின் மீது பாருவும் கம்ருதினும் தொடர்ச்சியாக abuse செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் சேர்ந்துதான் ‘சான்ட்ரா தள்ளி விடப்பட்ட’ சம்பவத்தை பார்க்க வேண்டும். அந்த ஒட்டுமொத்த கோபமும் இணைந்துதான் ‘ரெட் கார்ட் தர வேண்டும்’ என்று பெரும்பாலான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது. கூடவே சான்ட்ராவின் அனுதாபமும் இணைந்து கொண்டது.  இந்த ஆட்டத்தை பாருவும் கம்ருதீனும் ஸ்போர்ட்டிவ்வாக ஆடியிருந்தால் இத்தனை பெரிய எதிர்ப்பு வந்திருக்காது. “அவங்களா எமோஷனலி டிரையின் ஆகி போகட்டும்’ என்று திவ்யாவும் அரோவும் சொல்வதுதான் சரியானது. 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

கம்முவின் எவிக்ஷனுக்கு பாரு மட்டும்தான் காரணமா?

பாரு மனச்சோர்விற்கு ஆளாகியிருக்கும் போதெல்லாம் சான்ட்ரா உடன் நின்றிருக்கிறார். அது சந்தர்ப்பவாத கூட்டணி என்றாலும் பரவாயில்லை. பாருவிற்கு அந்த நன்றியுணர்ச்சி சிறிது கூட இல்லை. மறுபடியும் கம்முவுடன் இணைந்த உற்சாகத்தில் நிறைய அவதூறுகளை வீசிக் கொண்டேயிருந்தார். இதுவும் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஒரு காரணமாக இருக்கும். 

அடுத்ததாக “பாரு கூட சேர்ந்துதான் கம்ருதீன் நாசமாகப் போனார். தனியாக விளையாடினால் உருப்பட்டிருப்பார். அவருடைய எவிக்ஷனுக்கு பாருதான் காரணம்.. இனிமே அவ கூட சேராத” என்பது சக போட்டியாளர்களின் வலுவான கருத்தாக இருந்தது. 

இப்படி எல்லா கேஸையும் பாரு மீது மட்டும் எழுதி விட்டு கம்ருதீனை ‘ஒண்ணும் தெரியாத பாப்பா’ மாதிரி சித்தரிக்கக்கூடாது. அவர் பாருவுடன் விலகியிருந்த போது சற்று மாறியிருந்தார் என்பது உண்மைதான்.

ஆனால் அந்தச் சமயத்திலும் பாருவிடம் மட்டுமல்லாது மற்றவர்களிடமும் கோபத்தைக் காட்டினார். கம்முவின் முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் அவருடைய பெரிய வில்லன். அது இல்லாத சமயத்தில்தான் சாதாரண கம்முவைப் பார்க்க முடிகிறது. 

“அவளாலதான் நீ நாசமா போனே.. இல்லைன்னா ஒழுங்கா இருந்திருப்பே” என்று நட்புணர்ச்சியால் வினோத் இப்போது வருந்துவது நெகிழ்ச்சிதான். ஆனால் கம்ருதீன் தவறு செய்யும் போதெல்லாம் ‘நண்பன்’ என்கிற பெயரில் வந்து முட்டு கொடுக்கும் தவறை வினோத்தும் செய்திருக்கிறார். அதற்காக விசேவால் கண்டிக்கப்பட்டும் இருக்கிறார். 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

பாரு + கம்மு = சந்தர்ப்பவாத கூட்டணி

இந்த ஷோவிற்காக பாரு, கம்முவைப் பயன்படுத்திக் கொண்டாரா என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆரம்பத்தில் கம்மு மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அரோராவுடன் நெருக்கமாக அவர் பழகத் துவங்கியுடன் இயல்பாக எழுந்த பொறாமை உணர்ச்சி காரணமாக ‘அந்தப் பொம்மை எனக்குத்தான் வேண்டும்’ என்று கைப்பற்ற பாரு பல்வேறு ‘நீலாம்பரித்தனமான’ குட்டிக் கரணங்களை அடித்தார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதுதான் பாருவை வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றது. 

பாருவிற்கும் கம்முவிற்கும் பரஸ்பரம் அவரவர்களின் கீழ்மைகள் பற்றி நன்றாகவே தெரியும். என்றாலும் ஷோ கன்டென்ட் காரணமாக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். ஓரளவிற்கு அது காப்பாற்றியது. இறுதியில் கை விட்டு விட்டது. 

“பாரு கம்மு செஞ்சது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க ஏன் அதை எதிர்க்கலை. கேட்டது பத்தலை.” என்று மற்றவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறார் விஜய் சேதுபதி. இந்தக் கேள்வியை முன்வைக்க விசேவிற்கோ அல்லது பிக் பாஸிற்கோ தார்மீகமான நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை.  

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

தவறு நடக்கும் போது மௌனமாக வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

நீங்களே கவனித்திருக்கலாம். எந்தவொரு உக்கிரமான சண்டையிலும், அடிதடியிலும் பிக் பாஸின் குரல் கேட்கவே கேட்காது. மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். ஏனெனில் இதுதான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். பிறகு வார இறுதியில் விசே என்னும் பிம்பத்தின் வழியாக நியாயம் பேச ஆரம்பிப்பார்கள். அதாவது ‘இவரே பாம் வெப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற வசனம்தான். 

பாருவும் கம்முவும் எத்தனையோ அழிச்சாட்டியங்களைச் செய்யும் போது அவர்களால் மயிலிறகால் தடவி விட்டு, பல விஷயங்களைக் கேட்காமல் இருந்து விட்டு, அதன் மூலம் அவர்களுக்குத் துணிச்சலைத் தந்து விட்டு, இறுதியில் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ரெட் கார்டு தருவதெல்லாம் மோசமான டிராமா. பாருவையும் கம்முவையும் இந்த ஷோ பயன்படுத்திக் கொண்டு துப்பி வெளியே தள்ளி விட்டது என்பதுதான் உண்மை. 

ஆனால் பிக் பாஸின் வணிக நோக்கத்தைத் தாண்டி, இந்த  ஷோவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு பார்வையாளர்களுக்கு இருக்கிறது. இதன் போட்டியாளர்கள் வானத்தில் இருந்து குதித்த அயல்கிரகவாசிகள் இல்லை.

நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள். இவர்கள் செய்கின்ற கீழ்மைகளை, காமிரா அல்லாமல் நாமும் பல முறை செய்திருப்போம். இந்த நிகழ்ச்சியின் வழியாக நம் மனச்சாட்சி விழித்து இந்தக் கீழ்மைகளைச் செய்யாமல் தவிர்ப்பதுதான், நமக்கு நாமே தந்து கொள்ளும் நேர்மறையான பரிசு. 

'போங்கப்பா.. இதுல இருந்து பாடம் கத்துவாக்குவாராம்’ என்று விட்டேற்றியாகச் சென்று அதே கீழ்மைகளைத் தொடர்ந்தால் இழப்பு நமக்குத்தான். இந்தச் சிறிய சுயபரிசீலனை கூட இல்லையென்றால் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது நேர விரயம். அது மட்டுமல்லாமல் நம் மூளையில் நெகட்டிவிட்டி என்னும் விஷத்தையும் கூடுதலாக ஏற்றிக் கொள்கிறோம் என்று பொருள். 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

தவறின் ஆரம்பத்திலேயே ஒன்றிணைந்து கேள்வி கேட்பது நல்லது

ஆக.. “நீங்க ஏன் கேக்கலை?” என்று இதர போட்டியாளர்களை விசே கேள்வி கேட்பது அடிப்படையில் தவறானது. கம்மு, பாரு அட்ராசிட்டியின் ஆரம்பத்தில் வேடிக்கை பார்த்தாலும் பிறகு அறச்சீற்றத்தோடு பொங்கினார்கள். அவர்களால் இயன்றதைச் செய்தார்கள். 

ஆனால் விசேவின் குற்றச்சாட்டை சமூகத்திற்கான கேள்வியாக நாம் பொருத்திப் பார்க்கலாம். பொதுவெளிகளில் அக்கம் பக்கத்தில் நிகழும் தவறுகளைத் தட்டிக் கேட்க நம்மில் பலருக்கும் அச்சமாக இருக்கும். அது நம் மீதும் பாய்ந்து விடுமோ என்று பயப்படுவோம். 

ஒருவர் துணிச்சலாக ஆரம்பித்தால் மற்றவர்களும் இணைவார்கள். அப்போதும் மௌனமாக இருப்பவர்களும் இருப்பார்கள்.

அப்படியல்லாமல் எங்கு தவறு நடந்தாலும், அங்கிருப்பவர்கள் உடனே ஒன்றிணைந்து அதைத் தட்டிக் கேட்காமல் தவறுகளின் சதவீதம் குறையும் என்கிற செய்தியைத்தான் விசே சொல்ல முயன்றார் என்று எடுத்துக் கொள்ளலாம். 

பல கோடி இந்தியர்களை, ஒரு சில பிரிட்டிஷ்காரர்களால் அடக்கி இரண்டு நூற்றாண்டுகளாக ஆள முடிந்தது. பீரங்கியால் அச்சுறுத்தி முடக்க முடிந்தது. காரணம், இந்தியா என்பது அப்போது ஒரு தேசமாக அல்லாமல் பல்வேறு துண்டுகளாக இருந்தது. சாதி, மதம், இனம் என்று பல்வேறு பிரிவுகளாக உடைந்து கிடந்தது. மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து திரண்டால் எந்த எதிரியையும் சமாளிக்கலாம். 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

சான்ட்ரா நல்லவரா, கெட்டவரா.. உண்மையா.. டிராமாவா?

இறுதியாக சான்ட்ரா. இந்த டிராமாவின் பெரிய பலனை அடைந்தவர் என்று இவரைத்தான் சொல்ல முடியும். இவர் உண்மையாகவே பதட்டமடைகிறாரா அல்லது அனுதாப நாடகமாடுகிறாரா என்கிற நுட்பமான நாடகத்தை இனம் பிரிக்க முடியவில்லை. 

“என்னை மோசமா திட்றாங்க” என்று அழுது புலம்பும் சான்ட்ரா, தன் கணவர் இருந்த சமயங்களில் மற்றவர்களை அலட்சியமாகப் பேசவோ, திட்டவோ தயங்கவே இல்லை. பல சமயங்களில் இவரது கொடூரமான முகம் தெரிந்தது. பிரஜின் சென்ற பிறகு துணையில்லாமல் ‘விக்டிம் கார்டு’ என்கிற டிராமாவை அவ்வப்போது கையில் எடுத்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. 

கார் டாஸ்க்கில் கூட தன்னை abuse செய்த கம்ருதீனை 'துப்புடா பார்க்கலாம்’ என்று துணிச்சலாக எதிர்கொண்டவர். காரில் இருந்து தள்ளப்பட்ட பதட்டத்தில் மயக்கம் அடைந்தது கூட ஓகே.

ஆனால் பாரு, கம்ருதீனைக் காணும் போதெல்லாம் பயத்தில் கூச்சல் போடுவது உண்மையா, நாடகமா என்று குழப்பமாக இருக்கிறது. “நான் ஸாரி சொன்னதை விஜய் சேதுபதி நம்பிட்டாரு” என்றெல்லாம் சிரித்து பேசும் சான்ட்ரா இத்தனை அப்பாவியா?

சான்ட்ராவிற்கு உண்மையிலேயே இவ்வாறான பதட்டம், மனச்சிக்கல் இருப்பது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பிக் பாஸ் என்பதே அடிப்படையில் மைண்ட் கேம்தான். கடுமையான உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஷோ என்பது சான்ட்ராவிற்கு நன்றாகத் தெரியும். எனில் இதில் பங்கேற்க எப்படி அவர் சம்மதித்தார்? கூட இருந்தவர்களும் எப்படி அனுமதித்தார்கள்? இப்படி தன்னையே எக்ஸ்போஸ் செய்து கொள்ள யாராவது விரும்புவார்களா?

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

பாரு - கம்முவின் வீழ்ச்சி கற்றுத் தரும் பாடம்

சான்ட்ரா போன்ற போட்டியாளர்களை இனி மற்ற போட்டியாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? ‘அய்யோ.. இவங்களை ஏதாச்சும் சொன்னா.. அழுவாங்க.. சீன் போடுவாங்க. நாமதான் திட்டு வாங்கணும்” என்று கண்ணாடிப் பாத்திரம் போல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு மற்றவர்களைச் சேர்ந்ததா?  ‘இவருக்கு அடிபட்டு விடுமோ?’ என்று டாஸ்க்கில் கூட பார்த்து பார்த்து விளையாட வேண்டுமா? அவ்வாறான அவஸ்தைகளுக்கு ஏன் அவர்கள் பொறுப்பாக வேண்டும்? 

பாரு கம்ருதீன் வெளியேற்றத்தின் மூலம் சான்ட்ராவை முன்னே கொண்டு வரும் திட்டமோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது. 

மறுபடியும் அதேதான். பாரு மற்றும் கம்முவின் கோபதாபங்கள்தான் அவர்களின் கடைசி நேர வீழ்ச்சிக்குக் காரணம். இதில் நமக்கான பாடம் உள்ளது. கீழ்மைகள் தற்காலிக வெற்றியைத் தரலாம். ஆனால் நிரந்தர பள்ளத்தில் தள்ளி விடும். 

BB TAMIL 9 DAY 90
BB TAMIL 9 DAY 90

பிரமோவில் இரண்டு ரெட் கார்டுகளை விசே காட்டிய போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், முந்தைய அனுபவங்கள் காரணமாக அதில் டிவிஸ்ட் செய்து பிக் பாஸ் டீம் டிராமா ஆடிவிடுமோ என்கிற அச்சமும் கூடவே ஏற்பட்டது. ஆனால் அது உண்மையானது சந்தோஷம். 

பாரு கம்முவிற்குத் தரப்பட்ட ரெட் கார்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

BB Tamil 9: ரெட் கார்டு மூலம் வெளியேறுபவருக்கு சம்பளம் இல்லையா? அக்ரிமென்ட் சொல்வது இதுதான்!

எதிர்பாராததை எதிர்பாருங்கள்கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ஒரு பிக்பாஸ் சீசனில் இந்த வாசகம் ரொம்பவே பிரலமானது.இப்போது உண்மையிலேயே எதிர்பாராததுதான் நடந்திருக்கிறது.சுமார் 90 நாட்கள் வரை அந்த வீட்டுக்குள் கன... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 91: பாரு இல்லாத ஷோ; விக்ரம் சறுக்கிய அந்த இடம்! - 91வது நாளில் நடந்தது என்ன?

ஓரளவிற்கு நன்றாக ஆடிக் கொண்டிருந்த சுபிக்ஷா வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆனால் சான்ட்ரா இன்னமும் உள்ளே இருக்கிறார்.எவிக்ஷன் பின்னணியில் உள்ள மர்மமும் அநீதியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.BB TAMIL 9 DA... மேலும் பார்க்க

BB Tamil 9: 'My Game Is Done' - வியானாவின் பேச்சால் உடைந்து அழும் விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய... மேலும் பார்க்க

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் வியானா; பணத்தை சேர்க்கும் போட்டியாளர்கள்! - இது பணப்பெட்டி டாஸ்க் 2.O

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வராம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய... மேலும் பார்க்க

BB Tamil 9: "ஒருதர மட்டும்னா 'Unfair Red Card’ங்கிற பேச்சு வரும்" - எவிக்‌ஷனில் நீண்ட விவாதம்?

அடுத்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9.வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை உள்ளிட்ட இருபது பேருடன... மேலும் பார்க்க

BB Tamil 9: "தப்பு பண்ணிட்டேன்.!"- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது.... மேலும் பார்க்க