செய்திகள் :

Sivakarthikeyan: "இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்!" - 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து எஸ்.கே!

post image

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது.

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது.

SK Parasakthi
SK Parasakthi

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் பேசுகையில், "படம் தொடங்கும்போது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கிட்ட, “அக்டோபர் மாதமா, டிசம்பர் மாதமானு ரிலீஸ் டேட் பற்றி பேசிட்டு இருந்தோம். அக்டோபர்ல விஜய் சார் படம் வர்ரதா இருந்தது. அப்போவே ஆகாஷ் இன்டர்வியூல பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ்னு சொன்னாரு.

அப்புறம் விஜய் சாரோட படம் பொங்கல் ரிலீஸ்னு அறிவிச்சாங்க. நான் கால் பண்ணி ‘என்ன ப்ரோ, விஜய் சார் படம் வருது… டேட் மாத்தலாமா?’னு கேட்டேன். ‘இல்ல, ஏப்ரல் மாசத்துல எலெக்ஷன் வந்துரும். ப்ரொடக்ஷன், டிஸ்ட்ரிபியூஷன்னு எல்லாம் காசு போட்டுருக்காங்க, சோ மாத்த முடியாது’னு சொன்னாரு. நான் உடனே ஜகதீஷ் ப்ரோக்கு (விஜய்யின் மேலாளர்) கால் பண்ணி கேட்டேன். அவரு ‘ஆமா ப்ரோ’னு சொன்னாரு. ‘ஓகே ப்ரோ, நான் அப்ப ரிலீஸ் பண்ணல’னு சொன்னேன். ‘இதுல என்ன ப்ரோ இருக்கு?’னு சொன்னாரு.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

‘இல்ல ப்ரோ, சாரோட கடைசி படம் அவருக்கு ஓகேவானு கேளுங்க’னு சொன்னேன். ஒரு 5 மினிட்ஸ்னு சொன்னாரு.

அப்புறம் திரும்ப லைனுக்கு வந்தாரு. 'உங்களுக்கு விஜய் சார் விஷஸ் சொல்ல சொன்னாரு'னு சொன்னாரு. சோ அவ்வளவுதான் இதுக்குள்ள நடந்த விஷயம். சிலருக்கு வன்மம், சிலருக்கு வியாபாரம்!

ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் ‘ஜனநாயகன்’ படத்தை செலிப்ரேட் பண்ணுங்க. 33 வருஷம் நம்மள எல்லோரையும் என்டர்டெயின் பண்ண ஒருத்தரோட கடைசிப் படம். கண்டிப்பா எல்லோரும் செலிப்ரேட் பண்ணுங்க. ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படம் வருது, அதையும் செலிப்ரேட் பண்ணுங்க. எவன் என்ன வேணா சொல்லட்டும், இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்!

காலேஜ் படிக்கும்போது அப்பா இறந்தாரு. பாக்ஸ்ல அப்பா உடம்ப வச்சிட்டு அம்மா அழுதாங்க. ‘தம்பிய பாருங்க, பாதில விட்டு போய்ட்டீங்களே, இவனுக்கு யாரு இருக்கான்?’னு அழுதாங்க. அப்போ, என்னடா நம்ம செய்யப் போறோம்னுதான் மண்டைல ஓடுச்சு. அப்போ நமக்கு தெரிஞ்சது மிமிக்ரி ஒன்னுதான். அதை பண்ணினேன்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

அப்போ சிட்டி சென்டர் மால்ல போய் உட்கார்ந்து, யாருக்காச்சு நம்மள தெரியுதானு பாத்தேன். 2 பசங்க வந்து ஆட்டோகிராஃப் கேட்டாங்க. அன்னைக்கு நான் நைட் தூங்கல. அப்புறம் மொத படம் வாய்ப்பு கிடைச்சது.

ஸ்க்ரீன்ல என்ன பார்த்து எல்லாரும் கை தட்டினாங்க. அப்புறம் நிறைய பிரச்சனை. அப்புறம் இப்போ சோஷியல் மீடியால நிறைய சைபர் அட்டாக் நடந்தது. என்னை தட்டி விட 1000 பேர் இருந்தாலும், தாங்கி பிடிக்க லட்சம் பேர் இருக்காங்க!

நம்ம நல்லா இருக்கணும்னு நினைச்சு நம்மள விமர்சனம் பண்றவங்கள சீரியஸா எடுத்துக்கோங்க. நம்ம நல்லவே இருக்க கூடாதுனு நினைச்சு விமர்சனம் பண்றவங்கள ஜோகாவே எடுத்துக்கோங்க.

தாய் நாட்டுக்காக ஒரு படம் பண்ணேன், அது ‘அமரன்’. தாய் மொழிக்காக ஒரு படம் பண்ணிருக்கேன், அது ‘பராசக்தி’." எனப் பேசினார்.

Rajini: ``குருஷேத்திர யுத்தத்தில் வரும் கண்ணன் மாதிரி ஏவி.எம் சரவணன் சார்" - நெகிழும் ரஜினிகாந்த்

ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவி.எம்.சரவணன் கடந்த டிசம்பர் 4-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து ஏவி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைப... மேலும் பார்க்க

Parasakthi: "திருச்சில இருந்து ஒரு தியேட்டர் ஓனர் அழைத்து, உங்க படம் வரணும்னு.!" - சுதா கொங்கரா

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரு... மேலும் பார்க்க

Parasakthi Audio Launch: "டைட்டில் மாதிரியே படமும் பவர்புல்தான்!" - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரு... மேலும் பார்க்க

Parasakthi : "என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்!" - ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரு... மேலும் பார்க்க