Sivakarthikeyan: "இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்!" - 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்...
BB Tamil 9: டபுள் எவிக்ஷன் இல்லை, முதல்முறையாக டபுள் ரெட் கார்டு! - கம்ருதீன், பார்வதி அவுட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கிளைமேக்ஸை நெருங்கி விட்டது.
வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி.
இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.
பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர்.
தற்போது ஒன்பது பேர் அந்த வீட்டில் இருக்கின்றனர்.
வைல்டு கார்டு மூலம் சென்ற அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோரில் சாண்ட்ரா, திவ்யா கணேஷ் இருவரும் உள்ளனர்.

இந்தச் சூழலில் நேற்று நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின் போது சாண்ட்ராவை கமருதீன் பார்வதி இருவரும் தள்ளி விட்ட சம்பவம் வெளியில் பலத்த அதிர்வுகளை உண்டாக்கியிருக்கிறது.
முன்னாள் போட்டியாளர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகிற சூழலில் இன்றைய ஷூட்டிங் விஜய் சேதுபதி கலந்து கொள்ள காலையில் பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.
தற்போது ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து வரும் தகவல்கள் பார்வதி, கம்ருதீன் இருவருக்குமே ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவும் அதனை உறுதி செய்திருக்கிறது.
இது வரையில் டபுள் எவிக்ஷன் தான் பிக் பாஸ் வீட்டில் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது முதல் முறையாக டபுள் ரெட் கார்டு காட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















