Sivakarthikeyan: "இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்!" - 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்...
BB Tamil 9: "நீங்க ரெண்டு பேரும்.!"- பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதிபதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது.
மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது.

அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும்.
அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர்.
குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார்.
வலுக்கும் எதிர்ப்புகள்
இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் விஜய் சேதுபதி பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட்டை காண்பிக்கிறார். முழு புரொமோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.





















