புதுச்சேரி: தொடர் விடுமுறையால் 'White Town'-ல் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Phot...
Thalaivar 173: 'Every Family Has A Hero' - ரஜினி 173வது படத்தை இயக்கும் 'டான்' சிபி; வெளியான அப்டேட்
ரஜினி நடிப்பில் கடந்தாண்டு 'கூலி' திரைப்படம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்கு பிறகு ரஜினியின் ரிலீஸ் 'ஜெயிலர் 2' திரைப்படம்தான்.
அப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. படத்தில் பல உச்ச நட்சத்திரங்களும் கேமியோ செய்திருப்பதாக தகவல்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அப்படத்திற்கு பிறகு ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக தகவல்கள் வெளியானது.
ஆனால், அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே படத்திலிருந்து வெளியேறுவதாக சுந்தர் சி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ரஜினியின் 173வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.
சிபி சக்ரவர்த்தி, சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'பேட்ட', 'தர்பார்', 'ஜெயிலர்', 'வேட்டையன்', 'கூலி' படங்களைத் தொடர்ந்து ஆறாவது முறையாக ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.
இப்படம் ஒரு குடும்ப திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் 'Every Hero has a Family' என்ற கேப்ஷனுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.





















