புதுச்சேரி: தொடர் விடுமுறையால் 'White Town'-ல் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Phot...
'இனி ஹேப்பி தான்' - Fastag-ல் 'இந்த' சிக்கல் கிடையாது; டோல்களில் சிரமப்பட வேண்டாம்!
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்திருப்போம்... ஆனால், டோல் பிளாசாவில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் ஆகாமல் சிக்கல் ஏற்படும். அந்தப் பதற்றத்தில் பணம் எடுத்துக் கொடுப்போம். பின்னாடி நிற்கும் வண்டிகள் அனைத்தும் ஹாரன் அடிக்கும். அந்த 2 - 3 நிமிடங்களில் படாதப்பாடு பட்டுவிடுவோம்.
இதற்கெல்லாம் பெரும்பாலும் ஒரே ஒரு காரணம் தான் இருக்கும். அது 'Know Your Vehicle' பிராசஸ்.
இனி வாகன ஓட்டிகளுக்கு அந்தப் பிரச்னை இருக்காது என்று கூறியுள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறை.

வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல், புதிதாக ஃபாஸ்ட்டேக் பெறுபவர்கள் KYV செய்யத் தேவையில்லை என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, ஃபாஸ்ட் டேக் வைத்திருப்பவர்களுக்கும் KYV தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், குறிப்பிட்ட வாகன ஓட்டிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தாலோ, ஃபாஸ்ட் டேக்கை தொலைத்துவிட்டாலோ, ஃபாஸ்ட் டேக் தவறாக பயன்படுத்தப்பட்டாலோ, KYV பிராசஸ் அவசியம்.
இதனால், டோல்களில் பெரும்பாலும் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யும்போது சிக்கல் ஏற்படாது.















