செய்திகள் :

BB TAMIL 9 DAY 88: வார்த்தையை விட்ட கம்ருதீன்; கடுப்பு காட்டிய பாரு - 88 நாளில் நடந்தது என்ன?

post image

TTF6 - கில்லர் காயின் போங்காட்டமாக நடந்து முடிந்தது. கூடையில் கோழியை அமுக்கிப் போடுவதைப் போல நடந்து முடிந்த இந்த ஆட்டம் சுவாரசியமில்லை. 

‘இப்படியொரு ஆட்டத்தில பங்கேற்க எனக்கு விருப்பமில்லை’ என்று சொன்ன திவ்யாவைத் தவிர மற்ற அனைவரும் விசேவிடம் வார இறுதியில் பாட்டு வாங்குவார்கள் என்று தோன்றுகிறது. 

BB TAMIL 9 DAY 88
BB TAMIL 9 DAY 88

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 88

கம்முவும் பாருவும் நள்ளிரவில் மீண்டும் ரொமான்ஸ் உரையாடலை ஆரம்பித்து விட்டார்கள். வித்தியாசம் என்னவெனில், நல்ல வேளையாக மைக்கைக் கழற்றவில்லை. “பண்றதையெல்லாம் பண்ணிட்டு ஸாரி கேளு.. தோப்புக்கரணம் போடு” என்று கம்முவை, பாரு செல்லமாக அதட்ட ‘படுத்தே விட்டானய்யா’ ரேஞ்சிற்கு தோப்புக்கரணம் போட்டார் கம்மு. 

“சான்ட்ராதான் எனக்கு எமோஷனல் சப்போர்ட்டா இருந்தாங்க. அவங்க கிட்ட நிறைய புலம்பயிருக்கேன்” என்ற பாருவிடம், “அவங்க பயங்கரமா கேம் ஆடறாங்க.. ‘லவ்கேம்’ன்னு அவங்க மட்டும்தான் சொன்னாங்க. மத்தவங்க யாரும் சொல்லலை. கனியோட கம்ப்பேர் பண்ணா சான்ட்ரா ஒண்ணுமேயில்ல. ஆனா இன்னும் கேம்ல இருக்காங்க. உன் மண்டையை நல்லா கழுவியிருக்காங்க” என்று சான்ட்ரா மீதுள்ள கோபத்தைக் கொட்டினார் கம்மு. 

“இனிமே இப்படி வயலன்ட்டா நடந்துக்காத.. சரியா?” என்று பாரு சொல்ல கம்மு கட்டியணைக்க, லவ் போ்ட்ஸ் மீண்டும் உரசிக் கொண்டன. (அடுத்த சண்டை எப்போது ஆரம்பிக்குமோ?!)

‘பிராடு சான்ட்ரா’ - வார்த்தையை விட்ட ‘அட்ராசிட்டி’ கம்ருதீன்

புத்தாண்டு அலங்காரத்துடன் நாள் 88 விடிந்தது. “யப்பா.. டேய்.. நீயும் பாருவும் சேர்ந்து ஆடறீங்களே.. ஒரு ஆட்டம். எங்களுக்குப் புரியவேயில்ல. அப்படி அடிச்சிக்கிட்டீங்க.. அப்புறம் ஒண்ணா சேர்ந்துக்கறீங்க.. இனிமே நாங்க உள்ளே வர மாட்டோம்.. உங்க பர்சனல் இது” என்று விக்ரம், சபரி, சான்ட்ரா உள்ளிட்டோர் கம்முவைப் பார்த்து சொல்லி கை கழுவி விட்டார்கள். 

பிரேக் அப்பில் இருந்த சமயத்தில், தன்னைப் பற்றி பாருவிடம் சான்ட்ரா தப்புத் தப்பாகப் பேசி வைத்திருப்பாரோ என்கிற சந்தேகத்தில் இருக்கிறார் கம்மு. கிச்சன் ஏரியாவில் இருவருக்கும் உரசல் ஆரம்பமாகியது.

“உங்களை எனக்கு பிடிக்கும் சான்ட்ராக்கா” என்று கம்மு பாவனையாக ஆரம்பிக்க, “உன்னை எனக்குப் பிடிக்காது. இதை முகத்திற்கு நேராத்தான் சொல்றேன். பின்னாடி பேசல” என்று சீறினார் சான்ட்ரா.

"நான் லவ் கேம் ஆடறேன்னு நீங்க சொன்னீங்க” என்று கம்மு சொல்ல அதை மறுத்தார் சான்ட்ரா. கனியோடு ஒப்பிட்டு கம்மு பேச சான்ட்ராவிற்கு இன்னமும் கோபம் ஏறியது. “பாரு.. உன்னாலதான் இந்தப் பேச்சையெல்லாம் நான் கேட்க வேண்டியிருக்கு. நான் அப்படி சொல்லலன்னு நீ சொல்லியிருக்க வேண்டியதுதானே.. நீ ஏன் சொல்ல?” என்று பாருவை நோக்கியும் சீறினார் சான்ட்ரா. “அதுக்குத்தான் அவனை நான் distract பண்ணேன்” என்று சமாளித்தார் பாரு. 

BB TAMIL 9 DAY 88
BB TAMIL 9 DAY 88

மீண்டும் அழுகையை ஆரம்பித்த சான்ட்ரா 

சான்ட்ராவிற்கும் கம்முவிற்குமான உரையாடலின் உஷ்ணம் ஏறிக் கொண்டே போக ஒரு கட்டத்தில் ‘பிராடு’ என்கிற வார்த்தையை கம்மு விட்டு விட, சான்ட்ராவின் கோபம் உச்சத்திற்குச் சென்றது. “இனிமே என்னை அக்கான்னுல்லாம் கூப்பிடாத. யாரு பிராடு. வார்த்தையை அளந்து பேசு" என்று சீறிய சான்ட்ரா, பிறகு அழுகையுடன் கார்டன் ஏரியாவிற்கு நகர்ந்து விட்டார். 

“பாரு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்திருக்கா” என்று அழுகையுடன் அரோவிடம் சொன்னார் சான்ட்ரா. “ஏண்டா இப்படியெல்லாம் பண்றே?” என்று கம்முவைக் கண்டித்தார் வினோத். “அவங்க PR ஆக்டிவிட்டி பத்தி சொன்னது சரியில்ல” என்றார் கம்மு. தங்களிடம் மன்னிப்பு கேட்க வந்த கம்முவைப் பார்த்து காதைப் பொத்திக் கொண்டு ஓடினார் சான்ட்ரா. (இது திவ்யா ஸ்டைல் ஆச்சே?!) 

பாரு பிரேக் அப் ஆகி அனத்திய சமயத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சான்ட்ரா. இப்போது பாரு கம்முவோடு கூடி விட்டதும் கம்மு தன்னையே புகார் சொல்வதும் சான்ட்ராவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது நியாயமே.

அந்த வீட்டில் பாருவுடன்தான் சான்ட்ராவால் நெருக்கமாகப் பழக முடிந்திருக்கிறது. இப்போது அந்த ஆதரவும் கை விட்டுப் போகிறதே என்று சான்ட்ராவிற்கு ஏற்பட்டிருக்கிற பதட்டம், இத்தகைய கோபமாக வெளிப்பட்டிருக்கலாம். 

BB TAMIL 9 DAY 88
BB TAMIL 9 DAY 88

கம்முவைக் கண்டித்த மற்றவர்கள், சான்ட்ராவிற்கு ஆறுதல் சொன்னார்கள். “இந்த கேம்ல இப்படித்தான் இருக்கும். இறங்கி விளையாடுங்க” என்றார் சபரி. சான்ட்ராவின் புகார்கள் கடுமையாக இருந்தால் கம்ருதீன் அதை மறுத்துப் பேசியிருக்கலாம். ஆனால் ‘பிராடு’ என்று அழைப்பது முறையானதல்ல. 

“நான் பேசினதையெல்லாம் வெச்சு. அவங்க கிட்ட சண்டை போட்டிருக்க. பிரச்னையை வளர்க்கத்தான் நினைக்கற. இதுக்கு உன் கூட பேசாமலேயே இருந்திருக்கலாம்” என்று அனத்தினார் பாரு. நட்பாக இருக்கிற தருணங்களில் சொல்லப்படும் விஷயங்களை, கம்மு சண்டைக்காலத்தில் பகிரங்கமாகப் போட்டு உடைப்பார் என்று பாருவிற்கு நன்றாகவே தெரியும். அவருக்கே இது நேர்ந்து பல சமயங்களில் புலம்பியிருக்கிறார். எனில் சான்ட்ராவைப் பற்றி ஏன் கம்முவிடம் சொல்ல வேண்டும்? 

கோழி பிடிக்கும் ஆட்டமாக நடந்து முடிந்த கில்லர் காயின் டாஸ்க்

புத்தாண்டு அலங்காரத்தின் பின்னணியில் மக்கள் வாழ்த்து சொல்ல, ‘சகல கலா வல்லவன் படத்துல பேக்ரவுண்ட்ல நடிச்ச ஒரு பெரியவர் நம்மிடையே இருப்பது நமக்கு பெருமை’ என்று வினோத்தைப் பங்கமாகக் கலாய்த்தார் விக்ரம். 

TTF6 துவங்கியது. ஸ்கோர் போர்டில் முன்னணியில் இருப்பவர்களை முதலில் அவுட் ஆக்க வேண்டும் என்று திட்டமிட்டது சரிதான். ஆனால் ஒருவருக்கொருவர் துரத்தி துரத்தி ஒட்டியிருந்தால்தான் இந்த ஆட்டம் சுவாரசியமாக ஆகியிருக்கும். மாறாக டார்கெட்டைக் கவுத்துப் போட்டு பஸ்ஸர் அடிக்கிற வரை அனைவரும் சேர்ந்து அமுக்கிப் பிடிப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?

BB TAMIL 9 DAY 88
BB TAMIL 9 DAY 88

"எனக்கு இவ்வாறு ஆடுவதில் உடன்பாடே இல்லை” என்று ஆரம்பத்திலேயே விலகி விட்டார் திவ்யா. முதல் டார்கெட்டான சபரியை அனைவரும் அமுத்திப் பிடிக்க திவ்யா அருகில் வரவில்லை. இதை ஸ்போர்டிவ்வாக எடுத்துக் கொண்டாலும், “இதே மாதிரி கம்மு, பாருவைப் பிடிங்கடா பார்க்கறேன்” என்று பொருமினார் சபரி. 

அடுத்ததாக கம்முவையும் இதேபோல் கோழி பிடித்தார்கள். தன் வலிமையைக் காட்டி திமிற நினைத்தாலும் கம்முவால் முடியவில்லை. சபரியை அமுக்கும் போது கூட நின்ற பாரு, கம்முவைப் பிடிக்கும் போது அவரை விடுவிக்க முயற்சி செய்தார். (புதிய பாசம்!) மக்கள் இது பற்றி கேள்வி கேட்க, “அது என் கேம்” என்று விதண்டாவாதம் செய்தார். 

அரோரா மீது ஸ்பெஷல் கடுப்பு காட்டிய பாரு

மூன்றாவது டார்கெட் பாரு. சோபாவிற்கு அடியில் ஒளிந்து கொள்ள முயன்ற பாருவை, மற்றவர்கள் சேர்ந்து கோழி பிடிக்க, “விட்டுத் தொலைங்கடா.. டேய். இதெல்லாம் ஒரு கேமு” என்று கெட்ட வார்த்தைகளை இறைத்தபடி நகர்ந்தார்.

பாருவை அழுத்திப் பிடிக்கும் போது ‘சரிம்மா.. சரிம்மா..’ என்று அரோ செல்லம் கொஞ்சியது பாருவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. "குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுக்கறவங்க செய்யற மாதிரி” என்று பிறகு கடுப்பைக் காட்டினார். பிடித்த மற்றவர்களை விட்டு விட்டு அரோ மீது மட்டும் ஸ்பெஷல் கடுப்பு. 

நான்காவது டார்கெட் திவ்யா. ‘படுத்தே விட்டானய்யா’ என்கிற மாதிரி எதிர்ப்பே காட்டாமல் சமர்த்தாகப் படுத்துக் கொண்டார் திவ்யா. 

இவர்கள் இப்படி சொதப்பியதால் ஆட்டத்தைச் சற்றாவது சுவாரசியமாக மாற்ற பிக் பாஸ் முடிவு செய்தார். ஆட்டத்தில் எஞ்சியிருப்பவர்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று ஆட்டத்தை மாற்றினார். அப்போதாவது துரத்திப் பிடித்து ஆடுவார்கள் என்பது அவரின் கணக்கு. 

BB TAMIL 9 DAY 88
BB TAMIL 9 DAY 88

6-வது டாஸ்க்கில் வினோத் வெற்றி - டிக்கெட் யாருக்கு?

ஆனால் மீண்டும் அதேதான் நடந்தது. அரோவையும் சான்ட்ராவையும் கோழி பிடித்தார்கள். அவர்கள் எதிர்ப்பு காட்டவில்லை. சுபிக்ஷாவிற்கும் வினோத்திற்கும் மட்டும் சற்று சேஸிங் நடந்தது. அதில் சுபிக்ஷா அவுட். கடைசியாக விக்ரம் மற்றும் வினோத். இதில் யார் ஜெயிப்பார்கள் என்பது தெரிந்ததுதான். இயன்ற வரை ஓட முயன்ற விக்ரம் அவுட். இந்த டாஸ்க்கில் வினோத் வெற்றி. 

பிறகு இந்த ஆட்டத்தைப் பற்றிய விமர்சனங்களும் புகார்களும் முணுமுணுப்புகளும் எழுந்தன. ‘விக்ரம் ஜெயிக்கணும்னே சுபிக்ஷா ஆடினா. அண்ணா பாசம்” என்ற கம்மு “அரோவிற்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு யாரு நெனச்சது” என்று சிரித்தார்.  (அரோ பத்தி தப்பா பேசாத என்று பாருவிடம் முன்பு எச்சரித்தவரே இவர்தான்!) 

இவர்களின் பேச்சு உள்ளே கேட்டிருக்க வேண்டும். “ஆரம்பத்துல சபரியை அமுக்கிப் பிடிச்சாங்களே.. அப்ப இந்த நியாயம் தெரியலையா. இந்தப் புனிதர்களுக்கு?” என்று பொங்கினார் அரோரா. 

BB TAMIL 9 DAY 88
BB TAMIL 9 DAY 88

‘ஒரு சர்ப்ரைஸ்’ என்று பிக் பாஸ் அறிவிக்க, மக்கள் அதை சரியாகப் புரிந்து கொண்டு ‘சோறு போடறாங்க.. சாமியோவ். ஓடியாங்க.. ஓடியாங்க’ என்று உற்சாகத்துடன் கத்த, புத்தாண்டு உடை, விருந்து என்று கும்மாளமாக நடந்தது. 

“சேது சார்..ரொம்ப நன்றி.. டைட்டில் வின் பண்ணிட்டு வரேன்” என்று காமெடி செய்தார் கம்மு. பழைய போட்டியாளர்களை வினோத் நினைவு கூர, திவாகரை ஸ்பெஷலாக குறிப்பிட்டார் பாரு. 

டிக்கெட் யாருக்கு கிடைக்கும்? இந்த வாரம் வெளியேறப் போகிறவர் யார் யார் என்கிற கேள்விகளுடன் நியாயமான பதில்களுக்காக காத்திருப்போம்.

"ஜீ தமிழின் பதிலைப் பொறுத்தே அடுத்த மூவ்" - தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்புக் கோரும் டிவி நடிகர் சங்கம்

தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டி ஜீ தமிழ் சேனலுக்குக் கடிதம் தந்துள்ளது சின்னத்திரை நடிகர் சங்கம்.கடந்த சில மாதங்களுக்கு மு... மேலும் பார்க்க

BB TAMIL 9 DAY 87: விக்ரம் - திவ்யா மோதல்; மீண்டும் பாரு - கம்மு ரொமான்ஸ் - 87வது நாளின் ஹைலைட்ஸ்

சர்ச்சையும் சண்டையும் இல்லாமல் ஸ்போர்டிவ்வாக விளையாடி பாரு அடைந்த வெற்றி ஒன்று உண்டென்றால் அது TTF5 மட்டுமே. அதற்காக பல இடிகளைத் தாங்க வேண்டியிருந்தது. வெல்டன்.அத்தனை அசிங்கமான சண்டைகளுக்குப் பிறகும் ... மேலும் பார்க்க

திருமணத்துக்கு மறுப்பு? - 'கௌரி' சீரியல் நடிகை நந்தினியின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?!

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கௌரி' சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினியின் தற்கொலைக்கான காரணமாக பெங்களூரு போலீசார் சில விஷயங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.முன்னதாக இரு தினங்களுக்கு முன்பு பெங்கள... மேலும் பார்க்க

BB Tamil 9: "டிராமா பண்றதையே ஒரு வேலையா வச்சிருக்காரு"- விக்ரமை சாடிய திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 86 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி மு... மேலும் பார்க்க

BB Tamil 9: "ராஜ வேலைகள் எல்லாத்தையும் பார்க்கிற ஒரு குட்டி கனிதான் அரோரா" - விஜே பார்வதி சாடல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 86 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி மு... மேலும் பார்க்க