செய்திகள் :

நீலகிரி: குன்னூரில் 215 மி.மீ, கோத்தகிரியில்‌ 114 மி.மீ; இரவோடு இரவாகக் கொட்டித் தீர்த்த கனமழை!

post image

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகக் கடுமையான உறைபனி நிலவி வந்த நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

நேற்று காலை முதல் மந்தமான காலநிலை நிலவி வந்த நிலையில், இரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழைப்பொழிவு தொடங்கியது.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 215 மி.மீ, கோத்தகிரியில் 114 மி.மீ , குன்னூர் புறநகர் 90 மி.மீ என மாவட்டத்தில் 980.6 மி.மீ மழை ஒரே இரவில் பதிவாகியுள்ளது.

கனமழைப்பொழிவு காரணமாக குன்னூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குன்னூர் உழவர் சந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 2 கார்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளன. மாடல் ஹவுஸ் பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.

மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவால் குன்னூர் - ஊட்டி இடையே மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலையின் குறுக்கே விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழை பாதிப்பு
மழை பாதிப்பு

குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 12 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜே.சி.பி இயந்திரங்களின் உதவியுடன் மண் குவியல்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

குன்னூரில் உள்ள நீரோடைகளில் அதிகரித்து வரும் கட்டுமான ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையான பராமரிப்பின்மை காரணமாகவே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்து வருவதாக உள்ளூர் மக்கள் சிலர் கூறுகின்றனர்.

Rain Upadate: 'இன்று இடியுடன் கூடிய கனமழை' - எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரை அருகே, தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயலின் எச்சம் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறியதால் கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வ... மேலும் பார்க்க

சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று `ஆரஞ்சு அலர்ட்'?

சென்னையில் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கும் பொருந்தும். தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

Ditwah: அடுத்த 24 மணிநேரத்தில் டிட்வாவின் நிலை என்ன?- சென்னைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த டிட்வா புயலின் எச்சமான காற்றழுத்த தாழ்வு பகுதி பலவீனமடைந்து... தற்போது வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்பகுதி அருகே நன்கு குறிக்கப்பட்ட குறைந்த அழுத்த பகுதியாக மாறியுள்... மேலும் பார்க்க

சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு `ஆரஞ்சு' அலர்ட்!

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டின் படி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை... மேலும் பார்க்க

Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம... மேலும் பார்க்க