செய்திகள் :

Grok-ல் ஆபாச படங்கள் சித்தரிப்பு; எளிய பிராம்ப்டுகளில் அத்துமீறல் - மத்திய அரசு எடுத்த நடவடிக்கை!

post image

எக்ஸ் தளத்தின் 'கிரோக்' ஏ.ஐ சாட்பாட்டிற்கு இந்தியாவில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

என்ன பிரச்னை?

ஏ.ஐ சாட்பாட்களில் குறிப்பாக கிரோக்கில் (Grok) பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை ஆபாசமாக உருவாக்குவது சர்வ சாதாரணமாகி விட்டது. அப்படி உருவாக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகள் மூலம் பதிவிடப்படுகின்றன.

இது இன்னும் ஒரு படி மேலே சென்று, ஏ.ஐ உருவாக்கிய பெண்களின் புகைப்படங்களைத் தாண்டி, நிஜப் பெண்களையும் இப்படி சித்தரிக்கிறார்கள்.

மிக எளிய பிராம்ப்டுகளில், பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக எளிமையாகச் சித்தரிக்கப்படுகிறது. இதில் பெண்களில் ஆடைகளைக் கூட மாற்ற முடிகிறது என்பது கூடுதல் சிக்கல்.

பிரியங்கா சதுர்வேதி
பிரியங்கா சதுர்வேதி

இது பெண்களின் ஆன்லைன் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதோடு, அவர்களது தனிப்பட்ட உரிமையையும் பாதிக்கிறது.

இந்த ஆபாச சித்தரிப்பு கிரோக் தளத்தில் மிக அதிகமாகவும், எளிமையாக நடக்கிறது.

இந்தப் பிரச்னையை மகாராஷ்டிராவின் மாநிலங்களவை எம்.பி பிரியங்கா சதுர்வேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நேற்று எடுத்துச் சென்றிருந்தார்.

மத்திய அமைச்சகத்தின் நடவடிக்கை

இதையடுத்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன் படி...

"கிரோக்கின் ஆபாச படங்கள் உருவாக்கம் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000, தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021, பாரதிய நியாய சன்ஹிதா (BNS), 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), 2023 ஆகியவைகளுக்குக் கீழ் சட்டத்திற்கு புறம்பானது.

இந்த உருவாக்கம் ஆபாசப் படங்களை ஊக்குவிக்கிறது... குழந்தைகளின் பாதுகாப்பைப் பாதிக்கிறது... பெண்களைக் கண்ணியமின்றி சித்தரிக்கிறது... இது ஒரு சைபர் குற்றம்.

அதனால், கிரோக் நிறுவனம் உடனடியாக ஆபாசப் படங்களை உருவாக்குவது மற்றும் மாற்றுவதை நிறுத்த வேண்டும்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

அனைத்து ஆபாச கன்டென்டுகளையும் உடனடியாக நீக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கான அறிக்கையை அடுத்த 72 மணிநேரத்திற்குள் அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

எப்போதும் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதை மீறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 79-ன் கீழ், எக்ஸ் நிறுவனம் சட்டப் பாதுகாப்பை இழக்கலாம்.

அடுத்ததாக, எக்ஸ் நிறுவனம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தக் குற்றங்களைச் செய்த பயனாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது.

'இனி ஹேப்பி தான்' - Fastag-ல் 'இந்த' சிக்கல் கிடையாது; டோல்களில் சிரமப்பட வேண்டாம்!

நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்திருப்போம்... ஆனால், டோல் பிளாசாவில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் ஆகாமல் சிக்கல் ஏற்படும். அந்தப் பதற்றத்தில் பணம் எடுத்துக் கொடுப்போம். பின்னாடி நிற்கும் வண்டிகள் அனைத்தும் ஹார... மேலும் பார்க்க

மும்பை மாநகராட்சி : பெண்களுக்கு மாதம் ரூ.1500, இலவச பஸ் - அறிவிப்புகளை அடுக்கும் தாக்கரே சகோதரர்கள்!

மும்பை மாநகராட்சி உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வரும் 15-ம் தேதி மாநகராட்சி தேர்தல்கள் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் முதல் முறையாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ... மேலும் பார்க்க

சுசீந்திரம்: "ஆலயத்தையும், பக்தர்களையும் அவமானப்படுத்திவிட்டார்" - சேகர் பாபு மீது காட்டமான பொன்னார்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தில் பக்தர்கள் கோஷம் எழுப்பியதும், அதற்கு அருவருப்பான வகையில் அமைச்சர் சேகர் பாபு பேசியதும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ம... மேலும் பார்க்க

`பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம்!' - பரிசுத் தொகை வருவதை உறுதி செய்கிறதா வழிகாட்டல் சுற்றறிக்கை?

பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம், கரும்பு முதலியவை அடங்கிய பரிசுத் தொகுப்பை கடந்த சில வருடங்களாக மக்களுக்கு வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.ஆரம்பத்தில் பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்த ... மேலும் பார்க்க

சுசீந்திரம்: ’சாவர்க்கருக்கும் தாணுமாலய சுவாமிக்கும் என்ன சம்பந்தம்?' – அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்

கன்னியாகுமரி மாவட்ட சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்ற மார்கழி தேர்த்திருவிழாவில் வடம்பிடிக்க வந்திருந்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் பாரத் மாதாகீ ஜெய் எனவும், வீர... மேலும் பார்க்க