செய்திகள் :

கிருஷ்ணகிரி: "15 நாளா மகளைக் காணோம்; சீக்கிரம் கண்டுபுடிச்சு கொடுங்கய்யா" - கதறும் பெற்றோர்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வசிக்கும் ராஜூ - நிர்மலா தம்பதியின் 15 வயது மகள் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு அப்பகுதியிலுள்ள அரசு ஐ.டி.ஐ-யில் முதலாமாண்டு படித்து வந்தார்.

மாணவி மாயம்

கடந்த 10 ஆம் தேதி ஐ.டி.ஐ-க்கு சென்ற மாணவி, மாலையில் 'பேருந்துக்காக காத்திருக்கிறேன், சீக்கிரம் வந்துவிடுகிறேன்' என்று தன் தாயாருக்கு போன் செய்து பேசியுள்ளார்.

ஆனால், பல மணி நேரம் கடந்தும் அந்த மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் தொடர்ந்து போன் செய்தபோது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட தகவல் வந்துள்ளது.

இதனால் பதறிப்போன பெற்றோர், தெரிந்தவர்களிடம் விசாரித்தும், பல இடங்களில் தேடி அலைந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து ஓசூர் மந்திகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதோடு இருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீஸிடம் தெரிவித்துள்ளனர்.

மந்திகிரி காவல் நிலையம்

ஆனால், புகார் கொடுத்து இரண்டு வாரங்கள் கடந்த பின்பும் மகள் என்ன ஆனார் என்ற தகவல் தெரியாமல் கண்ணீருடன் தினமும் காவல் நிலையத்துக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.

15 வயது சிறுமி காணாமல் போன புகாரை விசாரித்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டாமல் காவல்துறையினர் சுணக்கம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், காவல்துறை தரப்பிலோ, 'மாணவி குறித்து தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம், விரைவில் கண்டுபிடித்து விடுவோம்' என்று தெரிவித்து வருகின்றனர்.

'மாணவியை விரைந்து கண்டுபிடிக்க ஓசூர் வட்ட காவல்துறையினரிடம் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கடுமையாக உத்தரவிட்டு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்' என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்; கணித ஆசிரியர் போக்சோ-வில் கைது!

அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணித ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்குபாப்பாரப்பட்டி ப... மேலும் பார்க்க

சிலிண்டரை மாற்றித்தர சொன்ன பாட்டி; கண்ணில் மிளகாய் பொடித் தூவி இரண்டரை பவுன் செயினை பறித்த நபர்!

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகில் உள்ள காயிதே மில்லத் தெருவில் வசித்து வருகிறார் 80 வயதான முத்தம்மாள். கணவர் முத்துசாமி உயிரிழந்த நிலையில், முத்தம்மாள் தனியாகவே வாழ்ந்து வருகிறார். வீட்டில் சமையலுக்... மேலும் பார்க்க

சிங்கப்பூர் துறைமுகத்தில் விபத்து; பலியான ராணிப்பேட்டை இளைஞரின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஸ்திரி மணி. இவரது மகன் வினோத் (வயது 33). இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலை... மேலும் பார்க்க

`கிரிப்டோ’ முதலீடு; பேராசையால் ஏமாற்றமடைந்த இன்ஜினீயர்; தூண்டில் போட்ட மோசடிப் பேர்வழி கைது!

வேலூர் மாவட்டம், விருப்பாட்சிபுரம் பலவன்சாத்துக்குப்பத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 29). பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினீயராக வேலைச் செய்து வரும் பிரதீப்குமாருக்கு வாட்ஸ்-அப் மூலம... மேலும் பார்க்க

பீகார்: சுற்றுலா மையத்தில் பெண்ணைக் காலணியால் தாக்கிய கும்பல்; அதிர்ச்சி வீடியோ... போலீஸ் விசாரணை!

பீகாரில் அடிக்கடி பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் அது போன்ற இரண்டு சம்பவங்கள் நடந்தன. தற்போது மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பீகாரின் சுற்றுலா மையம... மேலும் பார்க்க

`கொலைக்காக வருந்தவில்லை'ரூ.40 லட்சம் கடனால் பணக்கார தந்தையை கொன்றுவிட்டு மனைவி மீது பழியை போட்ட மகன்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திரா நகரில் தொழிலதிபர் வினீத் கடந்த 5ம் தேதி இரவு வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக வினீத் மருமகள் ஷெலு, ம... மேலும் பார்க்க