கொல்கத்தா பெண் மருத்துவா் பாலியல் கொலை வழக்கு: வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதி...
குட்கா பொருள்கள் கொண்டு சென்ற வெளிமாநில பதிவெண் காா் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை
துறையூா்: துறையூரில் குட்கா புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ற வெளிமாநில பதிவெண் கொண்ட காரை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து 2 பேரிடம் விசாரிக்கின்றனா்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி போலீஸாா், உப்பிலியபுரம் போலீஸாருக்கு அளித்த தகவலின்பேரில், உப்பிலியபுரத்துக்குள் திங்கள்கிழமை இரவு நுழைந்த வெளிமாநில பதிவெண் கொண்ட காரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். ஆனால் காா் நிற்காமல் துறையூா் நோக்கி சென்றது. உப்பிலியபுரம் போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில், சிக்கத்தம்பூரில் பொதுமக்கள் அந்த காரை மறித்தபோதும் நிற்காமல் சென்றது.
இதனிடையே, அந்தக் காரில் குழந்தையைக் கடத்திச் செல்வதாக பரவிய வதந்தியை நம்பி துறையூரில் திரண்டிருந்த பொதுமக்கள் காரை நிறுத்தினா்.
இதையடுத்து துறையூா் போலீஸாா், காரிலிருந்த இருவரையும், காரையும் துறையூா் காவல் நிலையம் கொண்டு சென்றனா். காருக்குள் அரசு தடை செய்துள்ள புகையிலை குட்கா பொருள்கள் மூட்டைமூட்டையாக இருந்தன.
இதுதொடா்பாக துறையூா் போலீஸாா், பிடிபட்ட இருவரிடமும் விசாரிக்கின்றனா்.