செய்திகள் :

'குட் நியூஸ்' போருக்கு முந்தைய 'அதே அளவில்' கச்சா எண்ணெய் ஏற்றுமதிகள்! சவூதியின் 2 முக்கிய நகர்வுகள்

post image

நேற்று சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாவிற்கு 89 டாலர் என்று வர்த்தகமானது. Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாவிற்கு 102 டாலர் என்று வர்த்தகமானது.

இதில் WTI கச்சா எண்ணெய் முன்பு 90 டாலருக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. Brent கச்சா எண்ணெய் 105 டாலருக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.

குட்... ஹேப்பி நியூஸ்

இந்த விலைக் குறைவிற்கு மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து வந்த ‘குட்... ஹேப்பி நியூஸும்’ மிக முக்கிய காரணம்.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, மத்திய கிழக்கிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை பிப்ரவரி மாதத்தின் கடைசியில் ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு எந்த அளவில் இருந்ததோ, கிட்டத்தட்ட அதே அளவு ஏற்றுமதியை எட்டிவிட்டது.

மத்திய கிழக்கு நாடுகள்
மத்திய கிழக்கு நாடுகள்

தற்போது மத்திய கிழக்கு நாடுகள் நாள் ஒன்றுக்கு 17.5 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன.

இது போருக்கு முந்தைய அளவின் 98 சதவிகிதம் ஆகும்.

பெட்ரோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட பொருள்களின் விநியோகம் ஒரு நாளுக்கு 30 லட்சம் பேரலாக உள்ளது.

இது போருக்கு முந்தைய அளவின் 58 சதவிகிதம் ஆகும்.

கடந்த 10 நாள்களின் சராசரிப்படி, மத்திய கிழக்கிலிருந்து விநியோகிக்கப்படும் கச்சா எண்ணெயின் அளவு 2025-ம் ஆண்டின் 89 சதவிகிதத்தை ஒத்துப்போகிறது.

இந்த எண்கள் ஜே.பி.மோர்கன் சேஸ் அண்ட் கோ வெளியிட்டுள்ள தரவுகள் ஆகும்.

சவூதி அரேபியாவின் இரண்டு முக்கிய காரணங்கள்...

இந்த ஏற்றுமதியில் சவூதி அரேபியாவின் இரண்டு முக்கிய பங்குகள் உள்ளன.

ஒன்று, செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில், செங்கடல் துறைமுகங்களுக்கு எண்ணெயைக் கொண்டுசெல்லும் சவூதி அரேபியாவின் குறுக்கே ஓடும் கிழக்கு-மேற்கு குழாய் தாக்குதலில் பாதிக்கப்பட்டது.

இப்போது அதைப் பாதியை சரிசெய்துவிட்டது சவூதி அரேபியா.

சவூதி அரேபியா
சவூதி அரேபியா

அடுத்ததாக, சவூதி அரேபியா தலைமையின் கீழ், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியிலான கச்சா எண்ணெயின் நகர்வுகள் கடந்த ஜூன் மாதத்தின் இறுதியில் பதிவான அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நாள் ஒன்றுக்கு 13 மில்லியன் பேரல்கள் அதிகபட்சமாக ஹார்முஸ் நீர்ச்சந்தியைக் கடந்துள்ளது.

சவூதி அரேபியாவின் இந்த இரண்டு காரணங்களால்தான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முற்றிலும் அதிகரித்துள்ளது என்று கூற முடியாது.

ஆனால், இவையும் முக்கிய காரணங்கள்.!

"This guy is a Monster" – சுந்தர் பிச்சை குறித்து Trump; சிரித்தபடி பதிலளித்த Google CEO

அமெரிக்க அதிபர் Donald Trump, Google CEO சுந்தர் பிச்சையை“Monster” என்று குறிப்பிட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் Trump இந்த வார்த்தையை விமர்சனமாக அல்லாமல், அவரின் செல்வாக... மேலும் பார்க்க

'தவெக அமைச்சரவையில் இணையும் சௌமியா அன்புமணி?' - விஜய்யின் 'மதுராந்தகம்' பிளான்!

தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் தவெகவினர் பரப்பி வரும் இந்தத் தகவலுக்குப் பின... மேலும் பார்க்க

6 மாதங்களாக ரேஷன் கார்டு பயன்படுத்தவில்லையா? 'முடக்கப்படலாம்' - என்ன செய்வது?

6 மாதங்களுக்கு மேலாக, ரேஷன் கார்டைப் பயன்படுத்தாமல் வைத்திருக்கிறீர்களா? நாளை (அக்டோபர் 1) உங்கள் ரேஷன் கார்டு முடக்கப்படலாம். இறந்தவர்களின் பெயரில் ரேஷன் கார்டு வைத்திருப்பது, ஒன்றுக்கும் மேற்பட்ட ரே... மேலும் பார்க்க

'மகனுக்காக தவெகவில் இணையும் செம்மலை?' - பின்னணி என்ன?

சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை, இன்று தாராபுரத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.செம்மலைசெம்மலை தவெகவில் இணை... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை வழக்கு: "அரசு கொடுத்த ஆவணங்கள் குற்றச்சாட்டுக்கு முரணானவை" - நீதிபதி சொன்னது என்ன?

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் பெற்றோர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவு.அதே போல் சுர்ஜித்தின் உறவினரான ஜெயபால் மீதான குற்றப் பத்திரிக்க... மேலும் பார்க்க