செய்திகள் :

குட் பேட் அக்லி - முதல் பாடல் எப்போது? டீசர் மேக்கிங் விடியோவில் அறிவிப்பு!

post image

நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதையும் படிக்க | தக் லைஃப் படக்குழுவின் ஹோலி வாழ்த்து!

தயாரிப்புப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ள இந்தப் படம் ஏப்ரல் 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, முதல் பாடல் வெளியீடு குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், முதல் பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் குட் பேட் அக்லி டீசர் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஓஜி சம்பவம் என்கிற முதல் பாடல் வருகிற மார்ச் 18 அன்று வெளியிடப்படவுள்ளது.

ஜன நாயகன் அப்டேட்!

நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் புதிய அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறி... மேலும் பார்க்க

விவாகரத்துக் கோரி ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி மனுத்தாக்கல்!

விவாகரத்து கோரி ஜி. வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து மனு அளித்துள்ளனர்.தன் பள்ளித் தோழியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் திருமணம் செய்தார்.திருமணத்திற்கு முன்பும், பின்பும் இவர்கள் ... மேலும் பார்க்க

சிக்கந்தர் டிரைலர்!

நடிகர் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் அகிரா படத்திற்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என்ற படத்தினை இயக்கியுள்ள... மேலும் பார்க்க

இத்தாலி கார் பந்தயம்: அசத்திய அஜித் குமார் அணி!

இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடம்பிடித்துள்ளனர். துபையில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்தியா சார்பில் ’அஜித்குமார் ரே... மேலும் பார்க்க

இன்று நன்மையடையும் ராசிகள் எவை?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.24-03-2025திங்கள்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்ற... மேலும் பார்க்க

ராபின்ஹூட் டிரைலர்!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் நிதின் நாயகனாகவும் ஸ்ரீ லீலா நாயகியாகவும் நடித்துள்ள ராபின்ஹூட் படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார்.இந்தப் படத்தில் ‘அதிதா சர்பிரைஸ்’ எனும் பாடலுக்கு கேதிகா ... மேலும் பார்க்க