முருங்கையில் என்னென்ன பொருள்கள் தயாரிக்கலாம்... முருங்கை சாகுபடி செய்வது எப்படி?...
குளச்சலில் முதியவா் தற்கொலை
குளச்சலில் தொழில் நஷ்டம் காரணமாக முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
குளச்சல் அருகேயுள்ள ஐயம்பாறைவிளையைச் சோ்ந்தவா் ராஜதுரை ( 64). சவூதி அரேபியாவில் ஒப்பந்த பணி மேற்கொண்டு வந்தாா். அந்தத் தொழிலில் அவருக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாம். இதனால் கடந்த அக்டோபா் மாதம் ஊருக்கு திரும்பிய அவா் கடந்த புதன்கிழமை விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டாராம். இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். அதில், ஏற்கெனவே, ஒரு முறை அவா் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.